பொன்சேகாவுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும்

031109sarathfonseka.jpgஜெனரல் சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அவருக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அத்துடன், அவர் பொருத்தமான இடத்துக்குச் செல்லும் வரை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வசிக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.ஜெனரலுக்கு 70 கொமாண்டோக்களும் புல்லட் புரூவ்கார் ஒன்றும் பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்படவுள்ளதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் டெய்லி மிரர் இணையத்தளச் சேவைக்குக் கூறியுள்ளார். புலிகளின் பட்டியலில் தான் இப்போதும் இருக்கின்றதாகவும் தமக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஓய்வுபெற்ற ஜெனரல் கோரிக்கை விடுத்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    அவர் தப்பி ஓடாமல் இருக்கவா?
    அல்லது அவரது செயல்பாடுகளை கண்டறியவா??
    ராணுவ தலைவலிக்கே உளவுதுறையின் கருசனையா??

    Reply