நாட்டில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்றபோது, 74 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது. 91 பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் எதிராக வாக்களிக்க ஜேவிபியினர் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
முப்படை யினர் யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த போதும் சர்வதேச முறைமைகளுக்கு அப்பாட்பட்டு எமது நாட்டிற்குப் பொருத்தமான உத்தரவுகளைப் பிறப்பித்தமையே வெற்றிக்குக் காரணமாகியது. அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரும் இன்றைய வெற்றியின் பங்காளிகளென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடுவெல அதிவேக சுற்றுவட்ட பாதை நிர்மாணப் பணிகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனையொட்டிய நிகழ்வு பெலவத்தை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களுக்கு நான் புதியவனல்ல. நாற்பது வருட அன்னியோன்ய உறவு எமக்குண்டு. நாட்டின் எதிர்கால பயணத்திலும் மக்கள் என்னோடு கைகோர்ப்பார்களென்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் அன்றும் இன்றும் என்றும் நாட்டு மக்களின் பாதுகாவலன். என்றும் தாய்நாட்டை நேசிப்பவன். அதேபோன்று மக்கள் மனதில் நெருக்கமாகவுள்ளவன். எதிர்கால இலங்கையை இலக்காகக் கொண்டதாகவே எனது செயற்பாடுகள் அமையும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கொழும்பிலிருந்தே தலைவர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்களுக்கே சகல வசதிகளும் இருந்துள்ளன. அதேபோன்று சகல அபிவிருத்திகளும் கொழும்பையே இலக்காகக் கொண்டிருந்தன.
இன்று அந்நிலை மாற்றமடைந்துள்ளது. நாட்டின் அனைத்துக் கிராமங்களும் தற்போது அபிவிருத்தி கண்டு வருகின்றன. எனினும் “கொழும்புக்கு கிரி – கிராமங்களுக்கு கெக்கிரி” என்று கோஷமெழுப்பிய தலைவர்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் திரிவது விந்தையாகவுள்ளது. அதேபோன்று வரலாற்றிலிருந்த கொழும்பு மாற்றப்பட்டு, கொழும்பின் பாதைகள் மாற்றப்பட்டு நெரிசலற்ற நகரமாக அது விளங்குகிறது. கிராமிய பாதைகள், பிரதேச பாதைகள் என பல்வேறு அபிவிருத்திகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் என்னிடம் பதவியையோ அல்லது அபிவிருத்தியையோ கோரவில்லை. வட கிழக்கோடு நாட்டைப் பாதுகாத்துத் தருமாறு கோரினர். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளேன். இதற்கான கௌரவம் பாதுகாப்புப் படையினருக்கும் உரியது.
எமது அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடரும். உலகின் எந்த தலைவர்களின் அழுத்தத்துக்கும் நாம் யுத்தத்தை நிறுத்தவில்லை. அதேபோன்று எமது எதிர்கால செயற்பாடுகளும் தொடரும். நாட்டின் எதிர்கால சுபீட்சத்தை இலக்காகக் கொண்டதாகவே எமது பயணம் தொடரும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
,
பூநகரி, துணுக்காய் மற்றும் மல்லாவி பகுதிகளில் இதுவரை 28 ஆயிரத்து 500 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஆளுநர் மேற்படித் தகவலைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
கிளிநொச்சி நகரில் கண்ணிவெடி அபாயம் உள்ளதால் அங்கு மக்களை குடியமர்த்தவோ நடமாட விடவோ அனுமதியளிக்க முடியாது. ஆனால் கிளிநொச்சி நகரிலிருந்து 4 கி. மீற்றர் தூரத்திலுள்ள 9 கிராமங்களில் மக்களை மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் அரசு 5300 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளது. முதல் கட்டமாக நேர்ப் திட்டத்தின் மூலம் யுத்தத்தால் வீடுகளை இழந்த வடக்கு மக்களுக்கு 12600 வீடுகளை அமைத்துக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக நேற்று (7) தேர்தல் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.
ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.
ஏற்கனவே 7 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இது வரை 8 பேர் கட்டுப் பணம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்கப்படவுள்ளன.
பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹேய்ஸ், மற்றும் நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் ஆகியோர் இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று யாழ். குடாநாட்டுக்கு சென்றனர்.
இந்த விஜயத்தின்போது அவர்கள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுட னும், யாழ். அரச அதிபர் உள்நாட்டு, வெளி நாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங் கள், ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மற் றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊழி யர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசுவர்.ஆணையிறவுக்கு செல்லும் அவர்கள் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம் ஒன்றை பார்வையிடுவதுடன் யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள தீவுகளுக்கு சென்று அங்குள்ள மக்களையும் சந்திப்பார்கள்.
மனித உரிமை தொடர்பான தேசிய செயற் திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதுடன் டிசம்பர் 10 ஆம் திகதி அதனை வெளியிடத் தீர்மானித்துள்ள தாக அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலின் மதிப்பீடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி செயற்றிட்டத்தின் பிரதியொன்றை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இச்செயற் திட்டத்தின் உள்ளடக்கம் அனைத்துக் கட்சிகள் பாராளுமன்ற நிலையியற் குழு மற்றும் சிவில் அமைப்புகள், பொது மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதுடன் அமைச்சரவை அனுமதியுடன் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் பல சவால்களை வெற்றியுடன் எதிர்கொண்டு ள்ளது. மேலும் பிரச்சினைகள் சவால்கள் எம்மத்தியிலுள்ளன. பிரச்சினைகள் படிப் படியாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன.
சிறுவர் களுக்கான ஐ.நா. வின் விசேட தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பற்றிக் கம்மெயார்ட் முன்னாள் சிறுவர் போராளிகளை நேற்று திங்கட்கிழமை சந்தித்ததுடன், அரசாங்க அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புலிகளினால் பலவந்தமாக படைக்குச் சேர்க்கப்பட்டிருந்த சுமார் 300 சிறுவர்களை கம்மெயார்ட் சந்தித்ததாக ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் கூறினார். மட்டக்களப்புக்குச் செல்லவுள்ள கம்மெயார்ட் அதன் பின்னர் வவுனியாவுக்குச் சென்று அங்கு தொழில்பயிற்சி பெற்றுவரும் சிறுவர்களை பார்வையிடவுள்ளார். சுமார் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா இரட்ணாயக்கா ஏ.எவ்.பி.செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஓய்வு பெற்ற சரத்பொன்சேகாவைத் தோல்வியுறச்செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பனிப்புடன் பாடுபடுவதாக ஐ.தே.கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியயின் வெற்றியை உறுதி செய்வதற்காக தாம் ஐ.தே.க வில் வகித்த பதவிகள் அனைத்தையும் உதரித்தள்ளிவிட்டு இவ்வாறு இன்று ஐ.மு.சு.கூட்டமைப்பில் இணைந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர், வலப்பனை தேர்தல் தொககுதியின் பிரதான அமைப்பாளர் மற்றும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தாம் மேற்கொண்ட இந்த தீர்மானத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்;றும் அவருடன் நெருங்கியவர்களும், தற்போது பாரிய நம்பிக்கையுடன் வந்திருப்பவர்களுமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக அரசுத் தரப்புடனும் எதிர்க்கட்சி தரப்புடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவது என்று த. தே.கூட்டமைப்பின் தலைமை தீர்மானித்திருக்கின்றது. இதன் ஓர் அம்சமாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார்.
மதவாச்சி மற்றும் கெப்பித்தி கொல்லாவ சோதனைச்சாவடிகளில் நடைமுறையிலிருந்த வாகன பாஸ் முறைமை நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.
இதற்கான அங்கீகாரத்தை பாது காப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இதன்படி நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் வாகனங்கள் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ சோதனைச்சாவடி ஊடாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி சென்றுவர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாகன பாஸ் நடைமுறை நீக்கப்பட்டதை அடுத்து முதன் முறையாக கொழும்பிலிருந்து சென்ற வாகனங்கள் இச்சோதனைச்சாவடி களூடாக வவுனியா மற்றும் திருகோணமலை சென்றன.