எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஓய்வு பெற்ற சரத்பொன்சேகாவைத் தோல்வியுறச்செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பனிப்புடன் பாடுபடுவதாக ஐ.தே.கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியயின் வெற்றியை உறுதி செய்வதற்காக தாம் ஐ.தே.க வில் வகித்த பதவிகள் அனைத்தையும் உதரித்தள்ளிவிட்டு இவ்வாறு இன்று ஐ.மு.சு.கூட்டமைப்பில் இணைந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர், வலப்பனை தேர்தல் தொககுதியின் பிரதான அமைப்பாளர் மற்றும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தாம் மேற்கொண்ட இந்த தீர்மானத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்;றும் அவருடன் நெருங்கியவர்களும், தற்போது பாரிய நம்பிக்கையுடன் வந்திருப்பவர்களுமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.