சர்வதேச முறைமைகளுக்கு அப்பாட்பட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தமையே வெற்றிக்குக் காரணம் – பெலவத்தையில் ஜனாதிபதி தகவல்

041109ma.jpgமுப்படை யினர் யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த போதும் சர்வதேச முறைமைகளுக்கு அப்பாட்பட்டு  எமது நாட்டிற்குப் பொருத்தமான உத்தரவுகளைப் பிறப்பித்தமையே வெற்றிக்குக் காரணமாகியது. அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரும் இன்றைய வெற்றியின் பங்காளிகளென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடுவெல அதிவேக சுற்றுவட்ட பாதை நிர்மாணப் பணிகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனையொட்டிய நிகழ்வு பெலவத்தை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களுக்கு நான் புதியவனல்ல. நாற்பது வருட அன்னியோன்ய உறவு எமக்குண்டு. நாட்டின் எதிர்கால பயணத்திலும் மக்கள் என்னோடு கைகோர்ப்பார்களென்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் அன்றும் இன்றும் என்றும் நாட்டு மக்களின் பாதுகாவலன். என்றும் தாய்நாட்டை நேசிப்பவன். அதேபோன்று மக்கள் மனதில் நெருக்கமாகவுள்ளவன். எதிர்கால இலங்கையை இலக்காகக் கொண்டதாகவே எனது செயற்பாடுகள் அமையும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் கொழும்பிலிருந்தே தலைவர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்களுக்கே சகல வசதிகளும் இருந்துள்ளன. அதேபோன்று சகல அபிவிருத்திகளும் கொழும்பையே இலக்காகக் கொண்டிருந்தன.

இன்று அந்நிலை மாற்றமடைந்துள்ளது. நாட்டின் அனைத்துக் கிராமங்களும் தற்போது அபிவிருத்தி கண்டு வருகின்றன. எனினும் “கொழும்புக்கு கிரி – கிராமங்களுக்கு கெக்கிரி” என்று கோஷமெழுப்பிய தலைவர்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் திரிவது விந்தையாகவுள்ளது. அதேபோன்று வரலாற்றிலிருந்த கொழும்பு மாற்றப்பட்டு, கொழும்பின் பாதைகள் மாற்றப்பட்டு நெரிசலற்ற நகரமாக அது விளங்குகிறது. கிராமிய பாதைகள்,  பிரதேச பாதைகள் என பல்வேறு அபிவிருத்திகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் என்னிடம் பதவியையோ அல்லது அபிவிருத்தியையோ கோரவில்லை. வட கிழக்கோடு நாட்டைப் பாதுகாத்துத் தருமாறு கோரினர். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளேன். இதற்கான கௌரவம் பாதுகாப்புப் படையினருக்கும் உரியது.

எமது அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடரும். உலகின் எந்த தலைவர்களின் அழுத்தத்துக்கும் நாம் யுத்தத்தை நிறுத்தவில்லை. அதேபோன்று எமது எதிர்கால செயற்பாடுகளும் தொடரும். நாட்டின் எதிர்கால சுபீட்சத்தை இலக்காகக் கொண்டதாகவே எமது பயணம் தொடரும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

,

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

 • vinotharan
  vinotharan

  so your purposly killed the tamil peoples in the vanni – you agree this

  Reply
 • NEIL
  NEIL

  What he was saying is he followed srilankan rules for srilankans that mean we here having the same behaviur towards other fellow srilankan men.he very honest on his comment therefore he is honest politician.OUR VOTE FOR-

  Reply
 • Anonymous
  Anonymous

  செய்தியின் மூலத்தை, அதாவது எங்கிருந்து பெறப்பட்டது என்பதை வெளியிடுவது இச் செய்தி நிறுவனங்களின் முக்கிய கடமையாகும். ஒரு நாட்டின் தலைவராக இருந்து, சர்வதேசநிதி மூலம் நாட்டை நிர்வகித்துக் கொண்டு ,’சர்வதேச முறைமைகளுக்கு அப்பாற்பட்டு’ செயற்படுவது கேள்விக்குரிய விடயம் .எமது நாட்டிற்குப் பொருத்தமான உத்தரவுகளைப் பிறப்பித்தமையே வெற்றிக்குக் காரணம். என்கிற வாதம் தாம் சர்வதேசங்களுடன் இல்லை என்பதும், மகாவம்சக் கருத்தாக ,மக்களை மீண்டும் சிங்க மயமாக்கலில் மகிந்தா ஈடுபடுவதைக் காட்டுகிறது.

  Reply