மனித உரிமை தொடர்பான தேசிய செயற் திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதுடன் டிசம்பர் 10 ஆம் திகதி அதனை வெளியிடத் தீர்மானித்துள்ள தாக அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலின் மதிப்பீடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி செயற்றிட்டத்தின் பிரதியொன்றை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இச்செயற் திட்டத்தின் உள்ளடக்கம் அனைத்துக் கட்சிகள் பாராளுமன்ற நிலையியற் குழு மற்றும் சிவில் அமைப்புகள், பொது மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதுடன் அமைச்சரவை அனுமதியுடன் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் பல சவால்களை வெற்றியுடன் எதிர்கொண்டு ள்ளது. மேலும் பிரச்சினைகள் சவால்கள் எம்மத்தியிலுள்ளன. பிரச்சினைகள் படிப் படியாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன.