உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

 

வீடு ஒன்றினுள் வீட்டாரின் அனுமதியின்றி அத்துமீறி வீடியோ எடுக்க முற்பட்ட யாழ்ப்பாண யூடியூப்பர் SK கிருஷ்ணா, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் கைதாகியிருந்த கிளிநொச்சி யூடியுபரான DK கார்த்திக் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அண்மைய நாட்களில் உதவி செய்வதாக ஈழத்து யூடியுப் சேனல்களில் பதிவேற்றப்பட்ட பலருடைய வீடியோக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

வலம்புரியில் நடந்த தாக்குதல்: அர்ச்சுனாவின் முகநூல் பதிவுக்கு எதிராக 500 மில்லியன் மானநஸ்ட்ட வழக்கு !

வலம்புரியில் நடந்த தாக்குதல்: அர்ச்சுனாவின் முகநூல் பதிவுக்கு எதிராக 500 மில்லியன் மானநஸ்ட்ட வழக்கு !

பா உ அர்ச்சுனா இராமநாதன் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மார் 10 இல் மற்றுமொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பா உ அர்ச்சுனாவும் – கௌசல்யாவும் உணவருந்திக் கொண்டிருந்த போது வம்புசெய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட ரட்ணம் சிறிகரன் என்ற ஜேர்மன் புலம்பெயர் தமிழர் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது ஊசி அர்ச்சுனாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவாதி பாலச்சந்திர தினேஸ் 59 வயது ரட்ணம் சிறிகரன் சார்பில் வழக்கைப் பதிவு செய்தள்ளார்.

வலம்புரி சம்பவத்தில் ரட்ணம் சிறிகரன் மற்றும் அவருடைய கார்ச் சாரதி வலம்புரியில் உணவருந்திக் கொண்டிருந்த அர்ச்சுனாவையும் கௌ;சல்யாவையும் அணுகியதும் அது வாக்கு வாதமாகி கார்ச்சாரதியை அர்ச்சுனா சாப்பாட்டு பிளேட்டினால் தாக்கியதும் தெரிந்ததே. அதன் பின்னர் அர்ச்சுனாவும் அவரால் தாக்கப்பட்ட சாரதியும் சமாதானமாகப் போய்விட்டார்கள்.

ஆனால் சம்பவத்திற்குப் பின் பெப்ரவரி 12 இல் அர்ச்சுனா முகநூலில் வெளியிட்ட பதிவில் ரடணம் சிறிகரன் கிரிமினல் செயற்பாடுகளில் தொடர்புடையவர் என்றும் நிதிமோசடிகளில் ஈடுபட்டவர் என்றும் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். அத்தோடு ரட்ணம் சிறிகரனின் மனைவி மற்றும் அவரின் மகளின் படத்தையும் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய நன்மதிப்பைக் குறைக்கும் இச்செயலுக்காகவே ரட்ணம் சிறிகரன் 500 மில்லியன் இலங்கை ரூபாய் நஸ்ட்ட ஈடு கோரியுள்ளார். அத்தோடு தன்னைப் பற்றி எழுதியவற்றை முகநூலில் இருந்து நீக்க வேண்டும், பொதுத்தளத்தில் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும், மீண்டும் இவ்வாறான பொய்யான விடயங்களைப் பரப்ப மாட்டேன் என எழுத்து மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ரட்ணம் சிறிகரன் கோரியுள்ளார்.

ரட்ணம் சிறிகரன் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உதவிகள் வழங்கி வருபவர் என்றும் சம்பவத்திற்கு முன்தினமும் அவர் உதவி செய்த பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

இச்சட்ட நடவடிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு அர்ச்சுனாவுக்கு 14 நாட்கள் உள்ளது. மார்ச் 10 இல் இக்கடிதம் அர்ச்சுனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது எனத் தெரியவருகின்றது. அர்ச்சுனா ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளது.

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !
வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. சாளினி, சங்கவி, சுவஸ்திகா எனப் பெண்களை விபச்சாரிகள் எனப் பிரச்சாரம் செய்து அவர்களின் நிர்வாணப் படங்களை முகமூடி போட்டுக்கொண்டு வெளியிட்ட அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டணியின் பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது ஊழல் ஒழிப்பு அணி வன்னி. இந்தக் கூட்டுக்குள் இருக்கும் மற்றுமொருவர் லண்டனில் வாழும் அர்ச்சுனா அடியான் – ஊசி அடியான். இவர்கள் பெண்கள் மீது நடத்திய மும்முனைத் தாக்குதல்கள் சமூகத்தில் முன்னுக்கு வருகின்ற பெண்களின் நடத்தை மீது களங்கத்தை ஏற்படுத்துவது, அவர்களை மிரட்டிப் பணிய வைப்பது இல்லையேல் கடைசி ஆயதமாக அவர்களை நிர்வாணமாக்கிய படங்களை வெளியிடுவது. இதற்கு மாநகர முதல்வராக போட்டியிடும் கௌசல்யாவும் உடந்தையாக உள்ளார்.
மூகமூடி அணிந்து கொண்டு இந்த இழிசெயலில் ஈடுபடும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியை ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிடுபவர்கள் என்று சான்றிதழையும் கௌசல்யா வழங்கியுள்ளார். அர்ச்சுனாவின் பிரச்சாரப் பீரங்கியான ஊழல் ஒழிப்பு வன்னி யிடம் தன்னைப் பற்றியும் எழுதச் சொன்னதாக சொல்லி பெருமைப்படுகின்றார் அர்ச்சுனா. நீங்களே நடத்தும் முகமூடி வலைத்தளத்திற்கு நீங்களே என்னைப் பற்றியும் எழுதுங்கோ என்று கேட்பீங்களாம். அவர்கள் அதற்கு கும்பிடு போடுவார்களாம். யாழ் மக்கள் எத்தினை பேர் தான் காதில பூ வைப்பீர்கள். எத்தனைதரம் தான் வைப்பீர்கள்.
தற்போது இந்த ஊசிக் கூட்டுத் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ் தேசியக் கட்சிகள் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யுத்தத்திற்குப் பின்னான 15 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்ததால் தான் சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து கதாநாயகனாகத் தோண்றிய அர்ச்சுனாவை மக்கள் நம்ப வேண்டி வந்தது. ஆனால் ஊசி அர்ச்சுனா தான் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்கி வாக்களித்த யாழ் மக்களின் முகத்தில் கரி பூசிவிட்டார். அதனை ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்.

பெண்களின் நிர்வாணப் படங்கள்: தீதும் நன்றும் பிறர் தர வாரா !

பெண்களின் நிர்வாணப் படங்கள்: தீதும் நன்றும் பிறர் தர வாரா !
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. அதன்படி எம்பி அர்ச்சனா இராமநாதன், சட்டத்தரணி கௌசல்யா நரேன், தமிழ் அடியான் ரஜீவன் இராமலிங்கம் மூவரும் இணைந்து ஊழல் ஒழிப்பு அணி வன்னி எனும் போலி முகநூலினூடாக விதைத்ததை இப்போது அறுவடை செய்கிறார்கள். சாளினி, சங்கவி வரிசையில் கௌசல்யாவின் என்று சொல்லப்படுகிற நிர்வாணப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. “ யாழ்ப்பாணத்து மேயர் வேட்பாளர் லோயர் கௌசல்யா…….” என்ற தலைப்பில் ஆரம்பிக்கும் பதிவு மிகக் கீழ்த்தரமான தகவல்கள் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. சட்டத்தரணி கௌசல்யா நரேனின் தாயார், முன்னாள் காதலன் மற்றும் தம்பி என அனைவரையும் இழுத்து இப்பதிவு அவதூறு செய்துள்ளது.
ஊழல் ஒழிப்பு வன்னி அணிக்கு கொஞ்சமும் சளைக்காது கௌசல்யா தொடர்பான பதிவு உள்ளது. அரசியலில் உள்ள பெண்கள் மீது காலம் காலமாக நடத்தப்படும் பாலினம் சார்ந்த வன்முறை தான் கௌசல்யா மீதும் நடக்கின்றது. இதேமாதிரியானவொரு கருத்தியல் வன்முறையையே தான் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான ஸ்சுவஸ்திகா அருளிங்கம் மீது எம்பி அர்ச்சுனாவும் நிகழ்த்திருந்தார்.
எம்பி அர்ச்சுனா தன்னுடைய உத்தியோக பூர்வ முகநூலில் ஸ்சுவஸ்திகா அருளிங்கத்தை பல ஆண்களுடன் உறவு கொள்ளும் பிறழ் நடத்தையான பெண் என குறிப்பிடுகிறார். எம்பி அர்ச்சுனாவின் கருத்துக்களையே ஸ்சுவஸ்திகா அருளிங்கம் தொடர்பில் ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் வழி மொழிகின்றது. எம்பி அர்ச்சனா ரிக்ரொக் பெண் சாளினியை பாராளுமன்றத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எம்பி அர்ச்சுனாவின் யாழ்ப்பாண ஆணாதிக்க மனப்பாங்குதான் அவரை எல்லை தாண்ட வைத்தது. எம்பி அர்ச்சுனா பிரதிபலித்தது யாழ்ப்பாண வெள்ளாள ஆண் மையவாத கருத்துக்களையுடைய ஆண்களின் மனநிலையையே. அதைவிட வெட்கக்கேடு எம்பி அர்ச்சுனாவினை இதுவரை எந்தவொரு தமிழ்த் தேசியம் பேசும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லதுஅரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களோ கண்டிக்கவில்லை. கௌசல்யாவின் நிர்வாணப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தவர்களும் அதே எம்பி அர்ச்சுனாவின் மனப்பாங்கையுடைய ஆண்களே.
பொதுவெளியில் இயங்கும் பெண்கள் மீது தொடுக்கப்படும் இந்தவிதமான தாக்குதல்கள் பெண்களை வீட்டுக்குள் முடக்கும் யுக்தி. கௌசல்யா சாளினி, சங்கவி மற்றும் ஸ்வதிகா மீதான அவதூறை கண்டிக்கவில்லை. மாறாக சட்டத்தரணி கௌசல்யா தமிழ் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு, ஊழல் ஒழிப்பு அணி வன்னியை ஆதரிக்க வேண்டும் என தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். சட்டத்தரணி கௌசல்யா ஊழல் ஒழிப்பு அணி வன்னி பெண்கள் விடயத்தில் சிறு அக்கறை எடுக்க வேண்டும் என்றும், முடிந்தால் சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு எச்சரிக்கை கொடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தார். அப்பெண்கள் திருந்தாவிடில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் முட்டாள் தனமாக ஆலோசனை வழங்கினார்.
கௌசல்யா நரேன் ஒரு சட்டத்தரணி. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதிப்படுத்த வேண்டியது நீதித்துறையில் பணியாற்றுபவர்கள் கடமை. ஊழல் ஒழிப்பு அணி வன்னியை நடவடிக்கை எடுக்கும் படி கௌசல்யா கூறுவது அவருடைய சட்டப்படிப்பு சம்பந்தமாக கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. போலி கணக்கு முகநூல் ஒன்றை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ்த்துறைக்கு இணைய நிறுத்துவது சட்டவிரோதமான செயல்.
சட்டத்தரணி கௌசல்யா நரேன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நேர்மையான முறையில் போட்டியிட்டலாம். அவர் மாநகரசபை முதல்வராக வர வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதேநேரம் ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற போலி கணக்கு முகநூலை இயக்கி அவதூறை பரப்பி தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முனைவது கத்திமேல் நடப்பது போன்ற செயல். மற்றப் பெண்களின் நிர்வாணப்படத்தை சமூக வலைத்தளங்களில் உலாவ விட்ட எம்பி அர்ச்சனா மற்றும் கௌசல்யா அவர்களால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி பதறிப்போய் கௌசல்யாவிற்கு வக்காலத்துக்கு வந்துள்ளது.
சட்டத்தரணி கௌசல்யா நரேனின் படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் (AI) உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. அந்தப்படம் போலியானதே. யாரும் அதை நம்ப வேண்டாம் என கற்பூரம் கொழுத்தி சத்தியம் செய்கிறது. சாளினிக்கும் ஊடகவியலாளர் சங்கவிக்கும் வந்தால் தக்காளிச் சட்னி. கௌசல்யாவுக்கு என்றால் இரத்தம் என ஏன் ஊழல் ஒழிப்பு அணி வன்னி பதறுகிறது. பொதுவாக எந்தப் பெண் மீதும் வன்முறையின் எந்த வடிவத்தைப் பிரயோகித்தாலும் கண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் கௌசல்யா நரேனின் நிர்வாணப் படத்தை அனுதாப வாக்குகளுக்காக அர்ச்சுனா – ஊழல் ஒழிப்பு அணி வன்னி தான் யுஐ ப் பயன்படுத்தி கௌசல்யாவின் நிர்வாணப்படத்தை வெளியிடுகின்றதா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாதது. யாராக இருந்தாலும் எதற்காக இருந்தாலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்கள் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
மேற்கு நாடுகளில் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் அறிவியல் என பெண்கள் அளப்பரிய சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்றார்கள். சுனிதா வில்லியம்ஸ் என்ற பெண்மணி வெண்வெளியில் 9 மாதங்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்பியுள்ளார். ஆனால் தமிழர்கள் முகநூலில் போலிக் கணக்குகளை தொடங்கி பெண்களின் நிர்வாணப்படங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நல்லவேளை சுனிதா வில்லியம்ஸ் யாழ்ப்பாணத்திலிருந்து விண்வெளிக்கு செல்லவில்லை. ஊழல் ஒழிப்பு அணி வன்னி நான்கு ஆண்களுடன் விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் தனிமையாக கழித்த வீடியோக்கள் தம்மிடம் இருப்பதாக கீழ்த்தரமான பதிவை போட்டிருப்பார்கள். எம்பி அர்ச்சுனாவும் பாராளுமன்றத்தில் சுனிதா வில்லியம்ஸ்க்கு விபச்சாரிப் பட்டம் கொடுத்து விசாரணையைக் கோரியிருப்பார். மாறி மாறி நிர்வாண படங்களை வெளியிட்டு பெண்கள் மீது அடக்குமுறை செய்வதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இப்படியான முகநூல் கணக்குகளை பின்தொடர்பவர்களும் திருந்த வேண்டும். இந்த விடயத்தில் மகளிர் விவகார அமைச்சும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான சைபர் கிரைம்ஸ்ஸை கட்டுப்படுத்த வேண்டிய தொழில்நுட்ப வசதிகளை இலங்கை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அர்ச்சுனா – கௌசல்யா – அர்ச்சுனா அடியான் ஆகியோருடன் இணைந்து செயல்படும் முகநூல் அணிந்த ஊழல் அழிப்பு அணி வன்னிக் கயவர்களை சட்டப்படி அரசு அம்பலப்படுத்த வேண்டும்.

போலி ஆவணங்களை வைத்து தையிட்டு விகாரை காணியை உரிமை கோருகின்றனர் !

போலி ஆவணங்களை வைத்து தையிட்டு விகாரை காணியை உரிமை கோருகின்றனர் !

 

யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த எம்.பி சானக, வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பெளத்த விகாரை மற்றும் தொல்பொருள் சின்னங்களை பிரச்சினைக்குரியதாக்கி அதனூடாக அரசியல் செய்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் 600 இடங்கள் தொல்பொருள் மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இடங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்து, தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இதுவரையில் உறுதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விகாரை 1956 ஆம் ஆண்டு நகர திட்ட வரைபடத்தில் திஸ்ஸ விகாரை உள்ளடக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட குழுவை நியமிக்க வேண்டும். இந்த விகாரையை அண்மித்த பகுதிகளிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்ற வேண்டும். ஆகவே இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும்” என்றார்.

இதேவேளை, தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் அண்மையில் தெரிவித்திருந்தமையம் குறிப்பிடத்தக்கது.

 

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் கைது !

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் கைது !

கெஸ்பேவ உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஸ்பேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் நிவுன்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டலந்த படுகொலையோடு தமிழர் படுகொலையும் விசாரிக்க வேண்டும் !

பட்டலந்த படுகொலையோடு தமிழர் படுகொலையும் விசாரிக்க வேண்டும் !

படலந்த வதைமுகாமிற்கு மூன்று மாதங்களில் வெளிச்சம் பாய்ச்சிய அனுர தரப்பு தமிழர் மீது நடைபெற்ற படுகொலைகளை விசாரிக்குமா… ? ஜி.ஸ்ரீநேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புகள் 1956 இல் இருந்து ஆரம்பித்து 2009 வரை நடைபெற்றன. தற்போது தமிழர் பண்பாட்டு அழிப்புகள் நடைபெறுகின்றன. வடக்கு, கிழக்கில் குறிப்பாக 1978 தொடக்கம் 2009 இற்கு இடைப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட, அவசர காலச் சட்ட ஆட்சியில் வடக்கு கிழக்கில் பட்டலந்த வதைமுகாமையும் மிஞ்சிய பல வதை முகாம்கள் மற்றும் கொலை முகாம்கள் காணப்பட்டன அவற்றில் தமிழர்கள் வகை தொகையின்றி சித்திரவதைகள் மற்றும் பாலியல்வதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் தகுதி கடந்தகால அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்துள்ளன.

ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் சம தருமம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்குமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களப் படையினர் என்பதாலும் இந்த சந்தேகம் தமிழர்களுக்கு கனதியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

29 சதவீத பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் !

29 சதவீத பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் !

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 நடைபெற்ற இந்த ஆய்வுகளின் படி, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதுடன் இவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆண், பெண் மற்றும் வயதுக்கமைய ஒரு சிகரெட் அல்லது இரண்டு சிகரெட்டுக்களை பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முயற்சித்த மாணவர்களின் எண்ணிக்கை 12.8 வீதமாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் விகிதம் கணிசமானளவு அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் !

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு இந்த மாதத்திற்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் தாக்குதலுக்கான உண்மையான நீதியை நிலைநாட்ட முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கத் தவறிவிட்டது. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அது எல்லாவற்றையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது . நாம் பாதியிலேயே விசாரித்துவிட்டு வழக்குப் பதிவு செய்ய முடியாது. நாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முறையாக நடத்தப்படும், ஆதாரங்கள் தொகுக்கப்படும், மேலும் அது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் 6ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம்” என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

 

சட்டவிரோத மீன்பிடி தடுத்து நிறுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிக்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அதனூடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும் என்றார்.