உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

டிஜிட்டல் மயமாகும் குற்றவாளிகளின் தகவல்கள்!

டிஜிட்டல் மயமாகும் குற்றவாளிகளின் தகவல்கள்!

 

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் (CRD) தகவலின் படி, மேநீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன. இந்த செயல்முறையின் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

தையிட்டியில் புதிய கட்டிடம் பிக்குகளின் மடாலயம் ! 

தையிட்டியில் புதிய கட்டிடம் பிக்குகளின் மடாலயம் !

 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரை காணியில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றன.

இதற்கு வழமை போலவே எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உண்மையிலேயே இது சட்ட விரோதமானது என்பதை சட்டப்படி நிரூபிக்கும் வகையில் வழக்குகளைப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாரில்லாமல் உள்ளனர். தேர்தல் காலங்களுக்கான கோஸமாக தையிட்டியும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களும் மாறியுள்ளது. சட்டம்பிக் கட்சிகள் கூட ஒரு வழக்கைப் பதிவு செய்யத் தயாரில்லை.

நேற்றைய போராட்டத்தின் போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. பொலிஸார் கைவிலங்குகளுடனும் துப்பாக்கிகளுடனும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்துவது போல் செயற்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், விகாரை வளாகத்தில் மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம் கட்டப்பட்டுள்ளமை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டடம் புதிதாக தான் கட்டப்பட்டதா? அல்லது ஏற்கனவே விகாரை கட்டும் போதே பிக்குகளுக்கு என கட்டிய மடமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

தமிழகத்திலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கை அழைத்துவர ஆளுநர் முனைப்பு!

தமிழகத்திலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கை அழைத்துவர ஆளுநர் முனைப்பு!

 

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அப்போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில், இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார். நாடு திரும்புவர்களுக்கான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என தெரிவித்தார்.

அத்தோடு ஏற்கனவே இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களிடம் அவர்களது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார். இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுனர் சுட்டிக்காட்டினர்.

எப்படியாயினும் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்ற இலங்கை அகதிகள் நாடு திரும்பும் விடயத்தை இரு நாட்டு தலைவர்களும், அதிகாரிகளும் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மட்டுமே முடிவு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட இலங்கை அகதிகளுடைய கருத்துக்களும் மற்றும் அவர்களுடைய விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இலங்கை அகதிகள் குடியுரிமை இல்லாது பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் வாழ்கிறார்கள். அப்படியானால் அவர்களும் நாடு திரும்ப கூடிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழகத்தில் இரண்டு தலைமுறையாக அகதியாக வாழ்கிற தமிழர்களில் பெரும்பாலானோர் தாம் இலங்கை திரும்ப விருப்பம் இல்லை என்று கூறி விட்டார்கள். பெரும்பாலானோர் திபெத் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியது போன்று தமக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் உத்தியோக பூர்வமாக முகாம்களில் 58 104 பேர் தங்கியுள்ளனர். அவர்களின் அகதி முகாம் வாழ்க்கையை முடிவுக் கொண்டு வந்து, அவர்கள் நாடு திரும்பினாலும் அவர்கள் மீண்டும் இலங்கையில் அகதி முகாம்களில் தான் தங்க வைக்க வேண்டும். இலங்கை திரும்பும் அகதிகளுக்கு வாழ சொந்தமாக அரசாங்கம் வீடு மற்றும் காணி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 

பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !

பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !

 

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கடந்த காலங்கள் கசிய ஆரம்பித்துள்ளது. பெண்களை மிகக் கேவலமாக நடத்தும், அவர்களைக் கீழானவர்களாகக் கருதும் தனது யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிஆணாதிக்க பொதுப் புத்தியை அர்ச்சுனா நாட்டின் உயரிய சபையில் வெளிப்படுத்தி அதற்கான தண்டனையையும் பெற்றார். சாவகச்சேரி மருத்துவமனையில் எழுந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு ஒரு சைக்கோலொஜிக்கல் திரில்லர் ட்ராமா ( psychological thriller drama ) அதாவது உளவியல் ரீதியான விறுவிறுப்பு நாடகத்தை அரங்கேற்றினார். மக்களின் கவனத்தை அர்ச்சுனா தன்பக்கம் திருப்பினார். தமிழ் தேசியத் தலைமைகளால் கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கு அர்ச்சுனா ஒரு மீட்பராக கதாநாயகனாக மாறினார். மருத்துவத்துறையிலிருந்த பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே போட்டுடைத்தார். பல மருத்துவத்துறை ஊழல்கள் அம்பலமாகியது. அந்த அடிப்படையில் தேசம்நெற் உம் அர்ச்சனாவின் போராட்டத்திற்கு ‘தம்ஸ்அப்’ 👍வழங்கியது.

வடக்கின் மருத்துவத்துறை உலுப்பி எடுக்கப்பட்டது. ஆனால் அர்ச்சுனாவால் வெளிக்கொண்டுவரப்பட்ட எந்தப் பிரச்சினைக்கும் அர்ச்சுனாவிடம் எவ்வித தீர்வும் இருக்கவில்லை. அர்ச்சுனாவிடம் முறையான ஆதாரங்களும் இருக்கவில்லை. ஆனால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை மக்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் அதனை ஒரு மருத்துவ சுப்பிரிண்டன்ட் சொல்கின்றபோது அது வலுப்பெற்றது. அர்ச்சுனாவின் இந்த உளவியல் விறுவிறுப்பு நாடகத்தின் மூலம் மருத்துவத்துறையிலிருந்த அர்ச்சுனாவுக்கு எதிராகச் செயற்பட்ட ஊழல்வாதிகள் அம்பலமாகினர். அர்ச்சுனா மிகச்சாதுரியமாகத் திட்டமிட்டு அவர்களை பொதுமக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைத்துத் தண்டித்தார். தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பு வழங்கிய நிதிதொடர்பில் அர்ச்சுனா வைத்த குற்றச்சாட்டையே சில தினங்களில் அர்ச்சுனா மீளப்பெற வேண்டிவந்தது. ஆனாலும் அது தற்செயலானதாகவே கருதப்பட்டது.

அர்ச்சுனாவை மிகச்சிலர் ஆரம்பத்திலேயே சந்தேகத்துடன் பார்த்தனர். அர்ச்சுனாவும் ஒரு மருத்துவராகையால் மருத்துவ வட்டத்துக்குள் இவர் நன்கு அறியப்பட்டு இருந்தார். அவர்கள் மத்தியிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. அவ்வாறு விமர்சனத்தை வைத்தவர்களில் என்னுடைய சகோதரனும் ஒருவர் ஆவார். ஆனால் அவரும் ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவத்துறைக்கு எதிராக ஊழல்களை அம்பலப்படுத்துவதால் இந்த டொக்டர்மார் எல்லாம் குழம்புகின்றார்கள் என்று அவர்களின் கருத்துக்களை அதன் கண்டு கொள்ளவில்லை.

அதன்பின் அர்ச்சுனாவின் அரசியல் பிரவேச முன்முயற்சிகள் அர்ச்சுனாவின் குறளி வித்தைகளை தேசம்நெற் ஆங்காங்கே வெளிப்படுத்தியது. அர்ச்சுனா அரசியலுக்குள் குதித்து ஊசி அர்ச்சுனாவாக மாறியபோது அர்ச்சுனாவின் சாயம் வெளுத்து உண்மைத் தோற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

‘நான் விரல் நீட்டியவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்’ என அன்று அர்ச்சுனா எனக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அதுவே அர்ச்சுனா ஒரு கற்பனையில் வாழும் உள்ளடக்கமற்ற மனிதன் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இந்த வார்த்தையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அதனை சொல்லக் கூடிய தகுதியில் இருந்த அவர் ஒருபோதும் அதனைச் சொன்னதாக நான் அறியவில்லை. நேற்றைய மழையில் இன்று முளைத்த நச்சுக்காளான் அர்ச்சுனா “நான் விரல் நீட்டியவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்’’ என்பது உளவியல் சார்ந்த உயர்வுச் சிக்கல் மனநிலை என புரிந்து கொள்ள வேண்டும்.

அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தை எடுத்தது முதல் அவர் செய்கின்ற அனைத்து விடயங்களுமே தன்னை ஒரு பேசுபொருளாக அதாவது கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் செத்த வீட்டில் பிணமாகவும் இருக்க வேண்டும் என்று கருதும் அற்ரென்ஞ்ன் சீக்கிங் (attention seeking) மனநிலை தற்போது அவர் யார் என்பதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்துள்ளனர்.

அர்ச்சுனா பொதுவெளியில் வெளிநாட்டில கக்கூஸ் கழுவிறதை சரியா கழுவுங்கோ, இவள் விபச்சாரி, அவள் விபச்சாரி, நீ என்ன படித்தாய் என்றெல்லாம் மற்றவர்களின் கல்விநிலையை, தொழிலை, அவர்களின் பிரதேசங்களை சமூகத்தை கொச்சைப்படுத்தும் உயர்வுச் சிக்கல் கொண்ட மனநிலையுடையவர். அதேபோல் தன்னைப் பற்றி: நான் 3 கம்பஸில் படித்தன், நான் யாழ்ப்பாணத்தான், நான் தமிழன், நான் சைவன் என்று தன் சைவ வெள்ளாள ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

குறிப்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை அவருடைய மலையகப் பின்னணியை மிகக் கீழ்த்தரமாக கைநாட்டு, எழுதப்படிக்கத் தெரியாதவர், கப்பலில் கூலியாக வந்தவர் என்றெல்லாம் விமர்சித்துள்ளார். இவ்வாறான மிக ஆபத்தான வக்கிர மனநிலைகொண்டவராக அர்ச்சுனா உள்ளார்.

அர்ச்சுனாவின் இந்த வக்கிர மனநிலையை தொலை தூரத்திலிருந்து இருந்து பார்ப்பவர்களுக்கே எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்குகின்றது. அதேநேரம் அர்ச்சுனாவுடன் நான்கு ஆண்டுகள் குடும்பம் நடத்திய அவருடைய முதலாவது மனைவியின் நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்.

“நீ யாரையடி மனதில் வைத்திருக்கிறாய், எத்தனை பேரோடு சுத்தினாய், எத்தினை பேரோடு படுத்தாய், நீ விபச்சாரி, …” என்றெல்லாம் அர்ச்சுனா தன்னுடைய மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் எப்போதும் சந்தேகப்பட்டு வன்முறையில் இறங்குவதாகவும், அர்ச்சுனாவின் முன்னால் மனைவியின் கனடாவில் வாழும் சினேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அந்தச் சினேகிதி நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களுடைய திருமணம் நரகமாக அமைந்ததாக விபரிக்கின்றார். இவ்வாறு தான் கட்டிய மனைவியைச் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய ஒரு கொடூரன் ‘புலிகளையும் மாவீரர்களையும் பிரபாகரனையும்’ போர்த்திக்கொண்டு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது, தமிழ் பெண்களுக்கே சாபக் கேடு என அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ரிக்ரொக் சாளினி, ஊடகவியலாளர் சங்கவி, சட்டத்தரணி சுவஸ்திகா ஆகியோரை விபச்சாரி என்று பாராளுமன்றத்திலும் பொதுவெளியிலும் சொல்கின்ற மனநிலை திடீரென வரவில்லை என்று தெரிவிக்கும் அர்ச்சுனாவின் முன்னாள் மனைவியின் சினேகிதி. இந்த வசையாடல்களை நான்கு ஆண்டுகள் அனுபவித்து இதற்கு அப்பால் தன்னால் முடியாது என்ற நிலையிலேயே அர்ச்சுனாவின் முன்னாள் மனைவி விவாகரத்துச் செய்துகொண்டார்.

அர்ச்சுனாவின் முதல் மனைவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த இதேமாதிரிப் பாதிக்கப்பட்ட முக்கிய பொறுப்பில் உள்ளவரின் மகளும் தன்னுடைய கதையை தேசம்நெற்றிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண் தான் காதலித்து திருமணம் செய்தவன் , திருமணத்திற்குப் பின் சந்தேகபுத்திகொண்டு தன் மீது வீட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும் குறிப்பிட்டார். வன்முறையின் உச்ச கட்டமாக தன்னை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தாகவும் தெரிவித்தார். இறுதியில் தலைகீழாகக் கட்டி கட்டையால் முகத்தில் அடித்து கடுமையாக காயமடைந்துள்ளார். இதற்குமேல் தாங்க முடியாது என்ற நிலையில் தான் விவாகரத்துப் பெற்றதாகவும் அந்தப் பெண் தன்னுடைய கண்ணீர் கதையை பகிர்ந்து கொண்டார் . அத்துடன் அர்ச்சுனாவின் முன்னாள் மனைவி எவ்வாறான துன்பங்களை அனுபவித்திருப்பார் என்பது என் கண்முன்னால் காட்சிகளாக நகருவதாக அவர் தெரிவித்தார். இந்த சந்தேக மனநிலையுடய ஆண்களோடு வாழுவது என்பது ஒரு வெறிகொண்ட மிருகத்தோடு குடும்பம் நடத்துவதற்குச் சரியென்கிறார் அப்பெண். இவ்வாறான வெறிகொண்ட சில நூற்றுக்கணக்கானோரிடம் எங்கள் பிள்ளைகள், சகோதரிகள், உறவுகள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்.

இவர்கள் கொக்குவில் பகுதியில் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர், வடமாகாண சபையில் முக்கிய உறுப்பினராக இருந்த ஒருவர். அவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் பொழுதுபட்டால் அர்ச்சுனா வீட்டிலிருந்து பெரும்பாலும் பெரிய சத்தங்கள் வரும். ஒரே அடிபிடியாகவே இருக்கும். பாவம் அந்தப் பொம்பிளைப் பிள்ளை. இவன் வலம்புரியில் அந்த ரைவர் ஏதோ கொழுவிட்டான் என்று அடித்து நொருக்கின மாதிரித்தான் அந்தப் பிள்ளையின் நிலைமையும். இவன்கள் தான் இப்ப யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என வருத்தப்பட்டார் அவர்.

 

இந்த ஆணாதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்பினால், ஊழல் ஒழிப்பு அணி வன்னி பெண்களின் நிர்வாணப் படங்களைப் பதிவேற்றும். அர்ச்சுனாவுக்கு எதிராக அர்ச்சுனா செய்த கொடுமைகளை அவருடைய முன்னாள் மனைவியோ மற்றும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களோ வெளிக்கொண்டுவந்தால் அப்பெண்கள் சமூகவலைத்தளத்தில் நிர்வாணமாக்கப்படுவார்கள்.

அடுத்ததாக அர்ச்சுனாவின் இரண்டாவது மனைவி சிங்களப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சினையின் சமயம் தான் சிங்களப் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக ஊடகங்களில் தெரிவித்திருத்தார். ஆனால் இதுவரை அந்த இரண்டாவது மனைவி யார் ? அவருக்கு என்ன நடந்தது என்பதே மர்மமாக உள்ளது. இந்த வரிசையில் கடைசியாக நிர்வாணமாக்கப்பட்டவர் கௌசல்யா நரேந்திரன். தற்போது அவர் மௌனிக்க வைக்கப்பட்டுள்ளார். அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஏன் ? கௌசல்யா நரேந்திரனின் முன்னாள் காதலன் சிறந்த சதுரங்க விளையாட்டுக்காரர். அவர் கிளிநொச்சியில் சதுரங்க கழகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு சதுரங்கம் பழக்குவதுடன் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணித்து மாணவர்களை அத்துறையில் வளர்த்து வருகின்றார். கௌசல்யாவுக்கும் அவருடைய காதலனுக்கும் உள்ள உறவில் பொறாமைகொண்டு அதற்குள் தலையிட்டு தங்கை என்று கூறியவளை நான் கட்டுவேன் என்று சொல்லி அந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்தவர் அர்ச்சுனா. தற்போது கௌசல்யாவையும் முகவரியற்றவர் ஆக்கிவிட்டார். தங்கம் என்று சொன்னவளை தங்கச் சங்கிலி போட்டுக் கட்டி வைத்துள்ளார் அர்ச்சுனா.

அதே ஆணாதிக்க ஆண்கள் சமூகத்தைச் சேர்ந்த எம்பி சிவஞானம் சிறிதரன் அர்ச்சுனாவின் கேவலமான பேச்சுக்களை பாராளுமன்றம் தடை செய்யக்கூடாது எனக் கோருகின்றார். எம்பி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அர்ச்சுனாவை தனது கட்சிக்குள் வரவேற்பதாகக் கூறுகின்றார். தமிழ் பெண்கள் விழித்துக்கொண்டு இந்த ஆணாதிக்க வெறியர்களுக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க !

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க !

 

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது. அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாண சபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் – இதனை செய்யக்கூடாது. செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன். நான் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்கள். அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டினார்கள், என தெரிவித்துள்ளார்.

நீதவானாகிறார் மலையக தமிழ் பெண் ! 

நீதவானாகிறார் மலையக தமிழ் பெண் !

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆட்சேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்பு சித்தி பெற்றதன் அடிப்படையில், அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சிப்பெற்று நீதவனாக நியமனம் செய்யப்படவுள்ளார்.

இவர் பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் நீதிபதியும், பெண் நீதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆய்வுகளை செய்யாமல் நிதியை ஒதுக்காதீர்கள் – எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

ஆய்வுகளை செய்யாமல் நிதியை ஒதுக்காதீர்கள் – எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

வடக்கு மற்றும் கிழக்கில் ஆய்வுகளை செய்த பின்னரே அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்று கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் யோசனை கோரியிருந்தார். ஆனால் இதுவல்ல முறை, போரால் பாதிக்கப்பட்டு 35 வருடங்களுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில், மக்களின் பொருளாதாரம் பலவீனமாக இருக்கும் இடத்தில் முழுமையான திட்டமிடல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதென்றால் ஆகக் குறைந்தது முழுமையான தேவைகளை கண்டறியக்கூடிய முழுமையான ஆய்வுகளை செய்த பின்னரே நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். அதனை செய்யாமல் நாங்கள் முடிவுகளை எடுத்தால் அந்த மக்களின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. என தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் – ஜெனிவாவில் அனந்தி சசிதரன் !

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் – ஜெனிவாவில் அனந்தி சசிதரன் !

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலான ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ 2009ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறப்படவில்லை. பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு நேரமும், காலமும் வழங்கப்படுகின்றது. இலங்கை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் தங்கள் புவிசார் அரசியலுக்கு ஏற்றவாறு தீவில் ஆட்சி மாற்றங்களைச் செய்வதற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், தற்போது வரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கானதொரு அதிகாரப்பூர்வமான கட்டமைப்பை அங்கு நிறுவுவதற்கு முடியவில்லை. இதுவொரு மிகப்பெரிய குறைபாடாகும், ஏனெனில் மின்னஞ்சல் மற்றும் பிரதிநிதிகளினால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மூலம் மட்டுமே ஆதாரங்களை சேகரிக்க முடியுமான நிலைமையே தற்போது உள்ளது.

இலங்கை அரசாங்கமானது ஐ.நா.வின் தீர்மானங்களுடன் ஒத்துழைக்கத் தவறியிருப்பதோடு, அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியும் உள்ளது என்றார்.

நாங்கள் ஏன் ஆயுதம் ஏந்தினோம் ..? டில்வின் சில்வா விளக்கம் ! 

நாங்கள் ஏன் ஆயுதம் ஏந்தினோம் ..? டில்வின் சில்வா விளக்கம் !

ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் படுகொலையைச் செய்துள்ளது என கூறுகிறார்கள். அறுபதாயிரம் பேரைக் கொன்று, எங்கள் கட்சியைத் தடை செய்தவர்களுக்கு எதிராகவே நாங்கள் போராடினோம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா, ஆயுதங்களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது நாங்கள் ஆயுதங்களை எடுத்தோம். ஜனநாயக அரசியலை மேற்கொண்ட எங்கள் கட்சி, 1983 கருப்பு ஜூலை மற்றும் ஐ.தே.க. தொடங்கிய கருப்பு ஜூலையை அடிப்படையாகக் கொண்டு, அநீதியான மற்றும் சட்டவிரோத தடையை அடிப்படையாகக் கொண்டு கட்சியைத் தடை செய்தது. மேலும் எங்களை அடக்கத் தொடங்கினார்கள். மறுபுறம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நாங்கள் அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். அன்று நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தேசம்நெற் க்குத் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஈபிஆர்எல்எப் போராளியும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான பாரிஸில் வாழும் சோலையூரான்இ சமூக விடுதலைப் போராட்டங்களில் அப்போராட்ட அமைப்புகள் மேற்கொண்ட படுகொலைகளையும் அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தை தக்க வைக்க மேற்கொள்ளும் படுகொலைகளையும் ஒரே தளத்தில் பார்க்க முடியாது எனத் தெரிவித்தார். ரில்வின் சில்வாவின் கருத்தை அவர் பிரதிபலித்திருந்தார்.

தமிழ் ஆயுத அமைப்புகள் மத்தியிலும் இவ்விதமான படுகொலைகள் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டிய சோலையூரான் தமிழ் அமைப்புகள் மத்தியிலிருந்த கொலைக் கலாச்சாரத்தை கடுமையாகச் சாடினார்.