செய்திகள்

செய்திகள்

செய்திகள்

செம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்துக்கு அவுஸ்திரேலியா தெரிவு

021009untitled.bmpசாம்பி யன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று இரவு பகல் ஆட்டமாக  சென்சூரியனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 257 ஓட்டங்களை தனது இனிங்சில் பெற்றது. சென்சூரியன் மைதானம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமான மைதானமாகும். இங்கிலாந்து அணி 5.56 ஓட்ட வீதத்தைப் பேணியும் கூட மைதானத்தைப் பொறுத்தமட்டில் இது குறைவான ஓட்டமென்றே கிரிக்கட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா பந்து வீச்சில் களத்தடுப்பும் மிகவும் உயரிய மட்டத்திலே காணப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த வேளையில் மைதானத்தின் புற்றீசல்கள் அதிகமாக இருந்ததினால் ஆட்டம் சற்று தாமதித்தே ஆரம்பமானது. புற்றீசல்களை அகற்ற மைதான ஊழியர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டனர்.

பின்பு இப்போட்டியில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி தனது முதல் விக்கட்டை 6 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இழந்தது. தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வொட்சனும் ரிக்கி பொன்டினும் மிகவும் அவதானமாக போட்டிநேரம் முடியும் வரை ஆடுகளத்திலே ஆட்டமிக்காமல் நிதானமாக ஆடி அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்ற வொட்சன் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இதன் மூலம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சம்பியன் கிண்ண இறுதியாட்டத்துக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவு செய்யப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் களத்தடுப்பும் பந்து வீச்சும் கிரிக்கட் விமர்சகர்களின் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது.

இன்று இப்போட்டியின் இரண்டாவது இறுதிப்போட்;டி நிவுசிலாந்து பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

England won the toss and elected to bat

England innings

 AJ Strauss*  c Hopes b Siddle  14
 JL Denly  not out  21 
 OA Shah  c †Paine b Lee  0
 PD Collingwood  c †Paine b Johnson  34  
 EJG Morgan c †Paine b Watson 9
 SM Davies† b Watson 5
 LJ Wright  c †Paine b Siddle  48
 TT Bresnan  b Lee  80
 GP Swann  run out (Hauritz/†Paine)  18
 JM Anderson  not out  5
 G Onions  run out (Ferguson/†Paine)  1
 
 Extras (w 6, nb 1) 7    
     
Total (all out; 47.4 overs) 257 (5.39 runs per over)
Fall of wickets1-15 (Strauss, 1.6 ov), 2-16 (Shah, 2.4 ov), 3-71 (Collingwood, 11.2 ov), 4-91 (Denly, 17.2 ov), 5-100 (Davies, 18.5 ov), 6-101 (Morgan, 20.2 ov), 7-208 (Wright, 39.6 ov), 8-245 (Swann, 45.1 ov), 9-251 (Bresnan, 46.2 ov), 10-257 (Onions, 47.4 ov)
       
 Bowling 
 B Lee 9 0 46 2
 PM Siddle 10 0 55 3
 JR Hopes 4 0 28 0 
 MG Johnson 10 1 61 1
 SR Watson 8.4 1 35 2
 NM Hauritz 6 0 32 0 5.33 

 Australia innings

 SR Watson  not out  136 
 TD Paine†  c †Davies b Onions  4
 RT Ponting*  not out  111
 Extras (lb 2, w 5) 7    
     
 Total (1 wicket; 41.5 overs; 176 mins) 258 (6.16 runs per over)
Did not bat MEK Hussey, CL White, CJ Ferguson, JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, PM Siddle
Fall of wickets1-6 (Paine, 1.3 ov)

Bowling
 JM Anderson 8.5 0 48
 G Onions 8 0 47 1
 TT Bresnan 8 0 51 0
 PD Collingwood 8 0 50 0
 GP Swann 5 0 31 0
 LJ Wright 3 0 18 0 
 OA Shah 1 0 11 0 

Player of the match SR Watson (Australia)

தில்லியின் இலங்கை தூதரகம் மீது புதிய தமிழகம் கட்சியினர் தாக்குதல்; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

03srilankanhighcommissioninde.jpgஇந்தியத் தலைநகர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக வளாகத்துக்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை, தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தக் கோரியும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் புதிய தமிழகம் மற்றும் தெளஹீத் ஜமாத் மற்றும் யாதவ மகாசபை ஆகிய அமைப்புக்களின் சார்பில் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர், இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள கெளடில்யா மார்க் பகுதிக்குச் சென்று, அத்துமீறி உள்ளே நுழைந்தார்கள். வளாகத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்துச் சேதப்படுத்தினார்கள்.

இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் குறித்து மிகுந்த வருத்தப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய பூகம்பம் : 40 மணி நேரத்திற்குப் பின் மாணவி ஒருவர் மீட்பு

01-indonesia.jpgஇந்தோ னேசியாவில் பூகம்பம் ஏற்பட்ட பதாங் நகரில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 40 மணி நேரத்திற்கு பின் 21 வயது மாணவி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள பதாங் நகரில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.

ஒட்டுமொத்த நகரமே தரைமட்டமாகி விட்டதைப் போல் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டி விட்டது. மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் ஏராளமான பிணங்கள் கிடக்கின்றன. எனவே பிணங்களை முழுமையாக அகற்றிய பின்னர்தான் சரியான இறப்பு எண்ணிக்கை தெரியவருமெனக் கூறப்படுகின்றது.

பதாங் நகரில், இடிந்து விழுந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடத்தின் இடிபாடுகளை மீட்புக்குழுவினர் அகற்றிய போது ஒரு பெண்ணின் குரல் லேசாக கேட்டது. இதனால் உஷாரான அவர்கள் இடிபாடுகளை மெதுவாக அகற்றி உள்ளே சிக்கி இருந்த சாரி என்ற 21 வயது மாணவியை மீட்டனர். மிகவும் தாகமாகவும், பசியாவும் இருப்பதாக சாரி கூறியதை தொடர்ந்து அவருக்கு உடனடியாக பால் கொடுக்கப்பட்டது. அவர் மீட்கப்பட்டதும் அங்கு திரண்டு இருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவி சாரி உடனடியாக அம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்து 40 மணி நேரத்திற்கு பின் அந்த மாணவி உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். பள்ளிக்கூட கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தெரிய வந்து உள்ளது. அவர்களையும் பத்திரமாக மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கே.பி.க்கு சுமார் 600 வங்கி கணக்குகள் இருக்கின்றன – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

KP_Selvarajah_Pathmanathanவிடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திய நிலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்று கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி.யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.பி.யிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு சுமார் 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இலங்கையில் மோசமான காலநிலை, காற்றில் மரம் சரிந்து ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

021009monsoon-rains.jpgதற்போதைய இலங்கையின் காலநிலை நாடு முழுவதும் மோசமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்தங்களை ஏற்படுத்தி வருகிறது. காலி, கல்வடுகொட பிரதேசத்தில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பஞ்சுமரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக ஐந்து பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.
பலியானவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும், இரு சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடும் மழை காரணமாக காசல் நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக களனி கங்கையின் கரையோரத்தில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போதைய காலநிலை தொடந்தும் நிலவும் என கால நிலைய அவதான நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான கடற்பிரதேசங்களில் தற்போது 40 கிலோமீற்றர் தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையிலான காற்றின் வேகம், 60 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவை

மாத்தறை ரயில் நிலையத்துக்கு இரவு 8.25க்கு சென்றடையும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவையை நடத்த போக்குவரத்துச் சபை முன்வந்துள்ளது.

ரயில்வே திணைக்களமும், இலங்கை போக்குவரத்துச் சபையும் இணைந்து கூட்டு சேவையாக இதனை நடத்துகின்றன.

சூறாவளி தாக்கக்கூடிய பிலிப்பைன்ஸில் பேரிடர் அவசர நிலை

01-indonesia.jpgபிலிபைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ நாடு முழுவதும் பேரிடர் அவசர நிலையை அறிவித்துள்ளார். புதிய சூறாவளியான பார்மா தாக்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை இந்த சூறாவளி கரையை கடக்கும் என்றும் இதன் வேகம் மணிக்கு 230 கிலோமீட்டர் வரை வீசும் என்றும் நாட்டின் வானிலை மையம் கணித்துள்ளது.  இந்த சூறாவளி காரணமாக 18 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. கூறுகிறது. கடந்த சனிக்கிழமை வேறோரு சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தென் கிழக்கு ஆசியாவில் நானூறு பேர் உயிரிழந்தனர்.

மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம்: வீடுகளுக்கு சேதம்; போக்குவரத்து துண்டிப்பு

011009rain-in-upcountry.jpgநாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனை, ஹட்டன் வீதியில் மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளி எனக் கருதப்படும் அளவுக்கு மரங்கள் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளன. பிரமாண்டமான மாறாமரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து விழுந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.

இதே போன்று கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன. உடனடியாக இந்த மாம ரம் வீதி அதிகார பிரிவினால் அகற்றப்பட்டது. இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் நேற்று முதல் மின்வெட்டு இடம் பெற்றுள்ளது.

தமிழ்ச் சங்கத்தில் வாசிப்பு மாத நிகழ்வுகள்

வாசிப்பு மாதத்தையொட்டி ஒக் டோபர் மாதம் முழுவதும் வாசி ப்புக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் முழுவதும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் அறிவோர் ஒன்றுகூடல் மற்றும் படித்ததும் பிடித்ததும் நிகழ் வுகளில் வாசிப்பை ஊக்குவிப்ப தற்கான சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு தமிழ்ச் சங்க நூல் நிலையத்தை அங்கத்தவரல்லாதவர்களும் பாவிப்பதற்கு ஒக்டோபர் மாதம் முழுவதும் அனுமதி வழங்கு வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் நூலக அங்கத்தவர்களாகச் சேருபவர்களுக்கு அங்கத்துவப் பணத்தில் 50% கழிவு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு மாதத்தில் வாசிப்பை ஊக்குவிப்பதற்கென புதிய நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தெனவும் தமிழ்ச் சங்கச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.

தமிழருவி மணியனின் ‘காந்திய அரசியல் இயக்கம்’ ஆரம்பம்

Maniyan_thamilaruvi‘காந்திய அரசியல் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்னற தமிழருவி மணியன் இன்று (02 ஒக்ரொபர் 2009) ஆரம்பித்து வைத்தள்ளார். காந்தியின் பிறந்த தினமான ஒக்ரோபர் 2 அன்று உலக அகிம்சை தினமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு இருந்த நாளான இன்று ‘காந்திய அரசியல் இயக்கம்’ தமிழருவி மணியனால் இன்று  சென்னை பிலிம்-செம்பரில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களாக மேற்குலக விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு நாடுகளில் வதியும் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து வந்த தமிழருவி மணியன் இவ்வரசியல் இயக்க வேலைகளைக் கவனிப்பதற்காகவே அவசரமாக நாடு திரும்பியதாக தமிழருவி மணியனின் வருகையை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தமிழருவி மணியன் வன்னி அவலத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசு யுத்த நிறுத்தத்தைச் செய்வதற்கான நிர்ப்பந்தத்தை வழங்கத் தவறியதற்காக தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும் தமிழருவி மணியன் துறந்தார்.

மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்து கூட்டங்களில் உரையாற்றிய தமிழருவி மணியன் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மீது கொண்ட நம்பிக்கையும் அவர்களின் அரசியல் பலவீனமுமே இந்த அவலநிலைக்குக் காரணம் எனத் தெரிவித்து வந்தார். எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் மூலம் எதனையும் சாதித்து விடமுடியாது எனவும் தமிழருவி மணியன் தான் கலந்துகொண்ட ஒவ்வொரு மேடையிலும் தெரிவித்து உள்ளார்.

‘காந்திய அரசியல் இயக்கம்’ ஒரு அரசியல் இயக்கம் அல்ல என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். காந்திய அரசியல் இயக்கம் கட்சி அரசியல் செய்கின்ற இயக்கமல்ல என்ற வகையில் அவர் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.