செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ்.செம்மணியில் எலும்புகூட்டு எச்சங்கள் மீட்பு !

யாழ்.செம்மணியில் எலும்புகூட்டு எச்சங்கள் மீட்பு !

யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில், கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பல விடயங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவோடு கைது செய்யப்பட்ட அவருடைய விசுவாசிகள் செம்மணியில் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக மாத்தையா அணியைச் சேர்ந்த ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

விகாரையை இடிக்க அழைத்த துண்டுப்பிரசுரம் – பா.உ கஜேந்திரகுமாருக்கு ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணை !

விகாரையை இடிக்க அழைத்த துண்டுப்பிரசுரம் – பா.உ கஜேந்திரகுமாருக்கு ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணை !

 

தையிட்டியில் கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பாலாலி பொலிஸார் கொடுத்திருந்த வழக்கு தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது.

தையிட்டி விகாரை கட்டப்படும் போதோ அதன் பின்போ அதற்கு எதிராக எவ்வித வழக்கையும் தாக்கல் செய்யாது, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக விகாரை கட்டப்பட்டது என்று பிரச்சாரம் செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு எதிராக பொலஸார் வழக்குத் தாக்கல் செய்து தற்போது அவர் ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப் பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபாய் சொந்த பிணையில் விடுவித்த நீதவான் வழக்கை ஜீன் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்ட நிலையில் அது போலியானது என தெரிவித்து ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளத்திலும் போலிச் செய்தி என குறிப்பிட்டு பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காணிகளை விடுவிக்க தயார் என தையிட்டி விகாரை நிர்வாகம் அறிவிப்பு !

காணிகளை விடுவிக்க தயார் என தையிட்டி விகாரை நிர்வாகம் அறிவிப்பு !

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தையிட்டி விகாரை விவகாரம் விரைவில் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும். உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்பவிடக் கூடாது. அதனால் அடிப்படையில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகுவதை அனுமதிக்க முடியாது.

விகாரை விவாகரத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், அப்பிரதேச மக்கள், மத தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் முதலிய தரப்பினர்களுடன் விரைவில் பேசவுள்ளோம். விகாரை கட்டப்பட்டுள்ள காணியை மாத்திரம் தருமாறும், விகாரையை சுற்றியுள்ள ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்கத் தயாராக உள்ளதாகவும் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, விகாரை விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதனை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தெற்கில் வலைத்தளங்களில் நிதி திரட்டிய இருவர் கைது – வடக்கில் எப்போது..? 

தெற்கில் வலைத்தளங்களில் நிதி திரட்டிய இருவர் கைது – வடக்கில் எப்போது..?

 

லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற போலி கணக்கின் மூலம் சமூக வலைகளில் 2.9 மில்லியன் ரூபா மோசடி செய்ததற்காக சமூக ஆர்வலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கணக்கின் மூலம் நன்கொடைகளை வசூலிப்பதன் மூலம் சந்தேக நபர்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கிலும் நன்கொடை என்ற பெயரில் கோடி ரூபாய்கள் வரை மோசடி செய்யப்படுவதும் கவனிக்கத்தக்கது. யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் தங்களை தமிழ்தேசியவாதிகளாகவும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தொகைகள் வழங்குவதாகவும் கூறி பலர் புலம்பெயர் தேசங்களில் வசிப்போரிடம் இருந்து நிதி உதவிகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதுடன் குறித்த பணத்தை பயன்படுத்தி ஆடம்பரமான வாகனங்கள், வீடுகள் கூட கட்டும் அசம்பாவிதங்கள் தமிழர்கள் பகுதிகளில் அண்மை காலமாக நடந்தேறுவதையும் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆறுதிருமுருகனின் உறவுகளால் நிர்வகிக்கப்படும் சிவபூமி நிறுவனமும் கோடிக்கணக்காண பணத்தையும் சொத்துக்களையும் புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் திரட்டி வருகின்றது. ஆனால் இவற்றுக்கான முறையான பொறுப்புக் கூறல் இல்லாததுடன் ஆறுதிருமுருகன் தனது புகழுக்காக வினைத்திறனற்ற செயற்திட்டங்களில் நிதியைச் செலவிட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்

வலம்புரியில் அடித்தவரும் ஆடிவாங்கியவரும் கட்டி அணைத்தனர் !

வலம்புரியில் அடித்தவரும் ஆடிவாங்கியவரும் கட்டி அணைத்தனர்: சாட்சிக்காரனிடம் செல்லாமல் சண்டைக்காரனிடம் பேசி முடித்த பா உ அர்ச்சுனா !

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனிடமும் சட்டத்தரணி கௌசல்யா நரேனிடமும் வலம்புரி ஹோட்டல் உணவகத்தில் வம்பிழுத்து அடி வாங்கிய நபர் பொலிஸ் நிலையத்தில் பிரச்சினையை சுமூகமாக முடித்தார். இதனை எம்பி அர்ச்சனா தனது உத்தியோகபூர்வ யுரீயூப் சனலினூடாக அறிவித்துள்ளார்.

எம்பி அர்ச்சுனாவின் பொறுமையை சீண்டி அவரிடம் அடி வாங்கிய இளைஞர் இந்த விடயம் தொடர்பாக தான் கொடுத்த பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற்றுக் கொண்டு தன்னுடைய செயலுக்கு மனம் வருந்தினார் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

அதேசமயம் அர்ச்சுனா தான் உயிரை காக்கும் வைத்தியராக இருந்து கொண்டு தற்காப்புக்காகவும் ஒரு பெண்ணின் மானத்திற்காகவும் தாக்குதலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைக்கு தான் தள்ளப்பட்டதற்கு தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.

வலம்புரி உணவு விடுதிச் சம்பவத்தில் தன்னிடம் அடி வாங்கியவர் ஒரு சாதாரண சாரதி எனவும். ஜேர்மனியில் இருந்து விடுமுறையில் வந்திருந்த புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரனிடம் சம்பந்தப்பட்ட இளைஞன் சாரதியாக பணியாற்றுகிறார் என குறிப்பிட்ட அர்ச்சுனா, நடந்த விவகாரத்திற்கு முழுமையான பொறுப்பையும் இரத்தினம் ஶ்ரீஹரனே எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரன் வழக்கு நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியாது எனவும் இவ்விடயம் அறிவிக்கப்பட வேண்டிய இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒருவழியாக பரஸ்பரம் பொலிஸ் முறைப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டு பிரச்சினை தீர்ந்தது. பா உ அர்ச்சுனாவுக்கு இன்னுமொரு வழக்கு வராமல் தவிர்த்துக்கொண்டுள்ளார்.

தலைவர் சீமானை அழைத்தது எங்களுக்காக பிரச்சாரம் செய்ய ! ஆனால் சீமான் இப்ப RAW வுக்கு வேலை செய்கிறார் போல் தெரிகிறது

தலைவர் சீமானை அழைத்தது எங்களுக்காக பிரச்சாரம் செய்ய ! ஆனால் சீமான் இப்ப RAW வுக்கு வேலை செய்கிறார் போல் தெரிகிறது ! தவிபு தலைவரின் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாய்வாளர் முல்லை மதி உடன் நேர்காணல்

மூன்று லட்சம் ரூபா நிலுவைத்தொகையை செலுத்தாத மகிந்த ராஜபக்ச..? 

மூன்று லட்சம் ரூபா நிலுவைத்தொகையை செலுத்தாத மகிந்த ராஜபக்ச..?

300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட எந்த தகவலும் உண்மையானது இல்லை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்ட நீர் வழங்கல் சபை, முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு நீர் விநியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், மகிந்தவின் வீட்டிற்கு அருகில் உள்ள முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் வசித்து வந்த பகுதியொன்றில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே செய்திகளின் உண்மைத்தன்மை – அதனுடைய பின்னணி எதனையும் நோக்காது தென்னிலங்கை மற்றும் வடக்கு இலங்கை ஊடகங்கள் பலவும் மகிந்த ராஜபக்ச தொடர்பான போலியான தகவல்களை பகிர்ந்திருந்த நிலையிலேயே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பரீட்சை பாஸ் பண்ணாட்டிலும் தற்கொலை : காதலி பார்க்க வராவிட்டாலும் தற்கொலை’ – சவால்களை எதிர்கொள்ள திணறும் இளைஞர்கள் !

‘பரீட்சை பாஸ் பண்ணாட்டிலும் தற்கொலை : காதலி பார்க்க வராவிட்டாலும் தற்கொலை’ – சவால்களை எதிர்கொள்ள திணறும் இளைஞர்கள் !

 

யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல குறித்த இளைஞர் அழைத்துள்ளார். இதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததன் காரணமாக இளைஞர் கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து தர்மபுரம் காவல்துறையினர் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காலங்களில் வடக்கு மாகாணத்தில் தற்கொலைகள் மலிந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. போதைப்பொருள் பாவனைக்காக பணம் இல்லை, பரீட்சை பெறுபேறுகளில் திருப்தி இல்லை, பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை போன்ற சாதாரண காரணங்களுக்கு கூட இளைஞர்கள் தற்கொலை செய்வதை அவதானிக்க முடிகிறது

பயனற்ற தன்மை காரணமாக இலங்கையில் நிறுத்தப்பட்ட எலன்மஸ்கின் திட்டங்கள் !

பயனற்ற தன்மை காரணமாக இலங்கையில் நிறுத்தப்பட்ட எலன்மஸ்கின் திட்டங்கள் !

 

‘ஸ்பேஸ் எக்ஸ்’ உரிமையாளர் எலொன் மஸ்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தால் பயனற்றதாகக் கருதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.

அமெரிக்காவின் அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின் பிரகாரம், பயனற்ற செயற்திட்டங்களாகக் கருதப்பட்டு 199 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 35 முகவரமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கடந்த இரு தினங்களாக பரந்துபட்ட ரீதியில் ஆராயப்பட்டு இந்த 199 திட்டங்களும் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவந்த ஆசிய பசுபிக் – இலங்கை காலநிலை மாற்ற சவால்களை இழிவளவாக்கல் செயற்திட்டம் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறைகளை நடாத்தல் ஆகிய இரண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?

அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?

 

இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய குழு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதானி குழுமம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி முழுமத்தின் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் சமூக மட்டங்களில் எழுந்திருந்தன. கடந்த 2022ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது மன்னாரில் தொடங்கப்பட இருந்த காற்றாலை திட்டம், எந்த விதமான போட்டியாளரும் இன்றி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கே அரசும் அந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுத்தது.

இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று அன்றைய எதிர்த்கட்சிகள் குற்றஞ்சாடின. அதேபோல் மன்னார் பகுதிவாசிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், முக்கியமான பறவைகள் சரணாலயம் உயிர்பல்வகைமைக்கான பாதிப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் இடர்பாடுகளை சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன.

2024 அக்டோபரில், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் காற்றாலை மின் திட்டத்திற்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்களை மறுபரிசீலனை செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த முடிவு அக்டோபர் 7, 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது. நவம்பர் 14 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டி, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இறுதி செய்ய கூடுதல் அவகாசம் கோரியது.

கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதானி குழுமம் மீது முன்வைக்கப்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டையடுத்து அனுர அரசு ஜனவரியில் மன்னார் மற்றும் பூநகரியில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சார திட்டத்திற்கான விலைக் குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீளாய்வு செய்ய குழுவொன்றை அமைத்தது. இந்தப் பின்னணியிலேயே அதானி குழுமம் குறித்த திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது