விகாரையை இடிக்க அழைத்த துண்டுப்பிரசுரம் – பா.உ கஜேந்திரகுமாருக்கு ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணை !

விகாரையை இடிக்க அழைத்த துண்டுப்பிரசுரம் – பா.உ கஜேந்திரகுமாருக்கு ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணை !

 

தையிட்டியில் கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பாலாலி பொலிஸார் கொடுத்திருந்த வழக்கு தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது.

தையிட்டி விகாரை கட்டப்படும் போதோ அதன் பின்போ அதற்கு எதிராக எவ்வித வழக்கையும் தாக்கல் செய்யாது, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக விகாரை கட்டப்பட்டது என்று பிரச்சாரம் செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு எதிராக பொலஸார் வழக்குத் தாக்கல் செய்து தற்போது அவர் ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப் பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபாய் சொந்த பிணையில் விடுவித்த நீதவான் வழக்கை ஜீன் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்ட நிலையில் அது போலியானது என தெரிவித்து ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளத்திலும் போலிச் செய்தி என குறிப்பிட்டு பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *