செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக வெடி பொருட்கள் அகற்றல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்வதற்காக அப்பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள்குடியமர்த்துவதற்கு வசதியாக துரிதமாக அப்பகுதிகளிலுள்ள மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க ‘ஹலோட்ரஸ்ற்’ மற்றும், இராணுவ பொறியியல் பிரிவு என்பன வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன எனவும், விரையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதுமலையில் இடம்பெற்ற கொள்ளை பிடிபட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் இளம் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. இக்கொள்ளை தொடர்பாக இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.சுதுமலை வடக்கில் வசித்துவரும் மருத்துவர் ஒருவர் மானிப்பாய் மத்திய சந்தைப் பகுதியில் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது வீட்டிலிருந்து ஆறு இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகை மற்றும்,  20 ஆயிரம் ருபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தது. 

இவர் தமது மருத்துவ நிலையத்திற்கு வந்துவிட்டு மாலையில் வீடு சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த நிலையில் இப்பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமையை அவதானித்துள்ளார். பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த மானிப்பாய் பொலிஸார் மருத்துவரின் வீட்டின் ஒரு பகுதியில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்திவரும் 25 வயதான இளம் பெண் மீது சந்தேகம் கொண்டனர்.

அவரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண்ணைக் கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். 300 ஆண்களும், 200பெண்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ.திசநாயக்க அவர்களின் தலைமையில் வவுனியாவில் வைத்து இவர்கள் பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழில் மோசடி!

UK_Visa_Advertயாழ்ப் பாணத்தில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றும் நபர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் நான்கு பேரிடம் வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய நபரொருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

UK_Visa_Advertலண்டனுக்கு அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் நான்கு மாணவர்களிடம் 18 இலட்ச ரூபா பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது. ஒக்ரோபர் 02 இல் கைது செய்யப்பட்ட இந்நபர் ஒக்ரோபர் 04ல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதவான் குறிப்பிட்ட நபரை  75 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த க. அம்பிகைகுமார் என்பவரே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  நால்வரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றவராவார். மூவரிடம் ஐந்து இலட்ச ரூபாவும், ஒருவரிடம் மூன்று இலட்ச ரூபாவும் இவர் பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேலும் ஒருவர் வெளிநாட்டுக்கு கல்வி பயில அனுப்புவதாகக் கூறி மூவரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்ட பச்சிலைப் பள்ளி மக்கள் வெடிபொருட்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

landmines.jpgகிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப் பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் வெடிபொருட்கள் குறித்து அவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பளை நகரம், புலோப்பளை கிழக்கு, புலோப்பளை, முள்ளியடி, தம்பகாமம், தர்மக்கேணி, சோரன்பற்று, மாசார், இயக்கச்சி, ஆகிய கிராமங்களில் மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் தென்பட்டால் அவற்றைக் கைகளால் தொடமாமல் உடனடியாக பிரதேசச் செயலகம் அல்லது பிரதேசசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.  இதே வேளை, குப்பைகளை எரிக்காமல் குழிகளில் வெட்டிப் புதைக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. போரினால் இப்பிரதேசங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._._._._._.

கிளிநொச்சி பச்சிலைப் பள்ளியில் ஒன்பது கிராமங்களில் மீள்குடியேற்றம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட ஒன்பது கிராமங்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் Oct 14 2010 வியாழக்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இடம் பெயர்ந்து வுவனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உணவல்லாத பொருட்கள் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன.  மீள்குடியேறும் இம்மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சுகாதார திணைக்களத்தினால் நடமாடும் சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கரைச்சிப் பிரிவிலுள்ள மக்கள் மீள் குடியேறுவதற்கான பதிவுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டத்தில் இடம்பெற்றது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கயிருந்து பின்னர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வசித்து வந்த பலர் இன்று கரைச்சிப் பிரிவலுள்ள தங்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியமர்வதற்காக பதிவுகளை மேற்கொண்டனர்.

யாழ்பாணத்தில் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றம் அபராதம்.

mos.jpgசுற் றாடலைத் தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருந்ததாக யாழ்ப்பாணம் கூட்டுறவுச்சங்கம் (யாழ்கோ) கல்வியங்காடு பகுதியிலுள்ள ஓர் உணவகம், ‘ஜவ்னா றெஸ்ட்’ என்கிற மதுபானச்சாலை, இலங்கை போக்குவரத்துச் சபையின் கொண்டாவில் டிப்போ ஆகியவற்றிற்கு எதிராகவே வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் இவர்களின் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்கும் படி அறிவித்து அதற்கான கால அவகாசமும் வழங்கியிருந்தனர். ஆனால். இக்கால அவகாசத்திற்குள் அவர்கள் அதனைச் செய்யத் தவறியதால் அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் தலா பத்தாயிரம் ருபா அபரத்தையும் விதித்தது.

Oct 14 2010 இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் யாழ். மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சட்டத்தின்படி விதிக்கப்பட்ட அதி கூடிய அபாராதம் எனபது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு கல்முனையில் சட்டவிரோத ஆயுங்களை ஒப்படைக்க கால அவகாசம்.

Arms_Amnestyகிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பாதகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோத அயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இவ்வாறான ஆயுதங்களை வைத்திருப்போர் கல்முனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியற்றினூடாக அவற்றை ஒப்படைக்குமாறு பொலிஸாhரால் கோரப்பட்டுள்ளது.

Arms_Amnestyமுன்னர் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக சட்விரோத ஆயுத்ங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இதனால், இதன் கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் கிளிநொச்சி கிராமப்புற மக்களே அதிகம் மனநோயாளிகள் ஆகியுள்ளனர்!

Psychologyகிளி நொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் யுத்த அனர்த்தங்களால் உளநலன் பாதிக்கப்பட்ட மக்களில் 60 சதவீதமானவர்கள் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் என கிளிநொச்சி பொது மருத்துவமனை உளநல பொறுப்பதிகாரி மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை இனங்காணப்பட்ட மனநோயாளிகளில் 40 வீதமானோர் கிளிநொச்சி நகரையண்டியுள்ள கிளிநொச்சி, கனகபுரம் பாரதிபுரம், உருத்திரபுரம், ஜெயந்திநகர் முதலான இடங்களில் வாழ்கின்றனர். 60 வீதமானோர் வசதி குறைந்த கிராமங்களான பூனகரி, முழங்காவில், தருமபுரம், வட்டக்கச்சி, பளை ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உளநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள 200 பேருக்கும் மேல் கிளிநொச்சி மருத்தவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles:

அதிகதொகை இளம்பெண்கள் குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கும் யுத்தம் – நீல் புனே

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன்

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

‘மன உளைச்சல் உலகில் மோசமான நோயாக உருவெடுக்கும்’ – உலக சுகாதார ஸ்தாபனம்

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நெருக்கடிகளுண்டு

மக்கள் வழங்கிய பெயர்ப்பட்டியல் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் கையளிப்பு

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடமிருந்து பதிலொன்று கிடைக்கப்பெறுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நீண்ட பட்டியலொன்றைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கையளித்துள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், அவற்றைப் பரிசீலித்து ஒரு வாரகாலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் தலைவர் சில்வா கொழும்பு திருப்பியதும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஓமந்தைத் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர், இளைஞர், யுவதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் விடுதலை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடியதையும் தெரிவித்தார். இது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஒருவார காலத்தில் சாதகமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்க மறியல்

ranjan1.jpgஇரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ள ஐ. தே. க. எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கண்டி பொலிஸாரினால் நேற்று (15) நீதிமன்றில் ஆஜர் செய் யப்பட்டார். இதன்போது இவரை 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி கண்டி மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற விளக்கம் முடியும் வரைக்கும் நாட்டை விட்டு செல்வதற்கு தடை விதிக்கும் முகமாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக் களத்திற்கு அறிவிக்கும் படியும் மேலும் எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்கும்படி பொலிஸார் மஜிஸ்திரேட்டிடம் வேண்டினர்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி பத்து இலட்சம் வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் எனும் குற்றச் சாட்டின் பேரில் குறித்த ஆசிரியை கட்டுகஸ்தோட்ட பொலிஸில் முறைப் பாடு செய்திருந்தார்.