500 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். 300 ஆண்களும், 200பெண்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ.திசநாயக்க அவர்களின் தலைமையில் வவுனியாவில் வைத்து இவர்கள் பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாயா
    மாயா

    அப்பாவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அதனால் நாட்டில் சுமுகமான நிலை உருவாகும்.

    Reply
  • மாயா
    மாயா

    4000 விடுதலை புலி உறுப்பினர்கள் இதுவரையில் விடுதலை
    —————————————-
    விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 4000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் சேர்த்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 6000 பேர் வரையிலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் யுத்தம் முடிவுற்ற இறுதி தினத்தின் போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து நிறுத்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 498 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வவுனியா கலாசார நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விடுதலை செய்யப்பட்ட குழுவில் பெண்கள் தொகை அதிகம் எனக் கூறப்படுகிறது.

    – News

    Reply