செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள்- இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தகவல்

dammika_perera_.jpgஇலங் கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் இலங்ககைக்குக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுகாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலீட்டுச் சபைத் தலைவர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,

இலங்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் அதனால் பெருந்தொகையானோர் வேலையிழந்திருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை.

கடந்த 2008 ஜனவரி மாதம் முதல் 2009 மார்ச் மாதம் வரையில் இலங்கையில் 50 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் 93 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த வருடத்தில் 7000 பேருக்கு இத்தொழிச்சாலைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவ்வருடம் 10 ஆயிரம் பேருக்கான வெற்றிடம் உள்ளது. இதனை எமது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார். 

தீர்மானங்கள் எடுக்கும் போது தொழிலாளர் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் – உப குழுவின் பரிந்துரைக்கு இ.தொ.கா பதில்

பெருந்தோட்டங்கள் சம்பந்தமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, அங்கு நிரந்தரமாக வாழும் தோட்டத் தொழிலாள சமூகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்கள் சம்பந்தமாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பந்தமாகவும் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் அத்தோட்டத்தையே நம்பி வாழும் பல தலைமுறையைச் சேர்ந்த நிரந்தர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, சமூக சேவைகள் மற்றும் நிரந்தர குடியுரிமை எதையுமே கருத்திற்கொள்ளாது வெறுமனே கம்பனிகளின் காணிகளை அளவிட்டு அவற்றை சிறு தேயிலை தோட்டக்காரருக்கு பகிர்ந்தளிக்கலாம் என பரிந்துரை செய்திருப்பது மிகவும் வேதனையும் வருத்தமுமளிப்பதாகவும் உள்ளது.

அமைச்சரவை உப குழுவின் கருத்துகள் முழுமையாக கிராம மக்களின் நலனுக்காகவே அமைகின்றது. 170 ஆண்டு காலமாக தோட்டங்களில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் நலன் பற்றி அவ்வறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, உப குழுவின் பரிந்துரை எவ்வாறு இருந்தாலும், ஜனாதிபதி தோட்ட மக்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் செயற்படுவார் என்ற நம்புக்கை உண்டு.

சிறு தோட்ட விவசாயிகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது அங்கு நீண்ட தலைமுறையாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களையும் தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்ஷா கொலை மேலுமோர் சந்தேக நபர் கைது. .

Regie_Varsaமூன்று
வாரங்களுக்கு முன்னர் மூன்று கோடி ரூபா கப்பம்கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளதுடன் வர்ஷாவின் உடலை தெருவில் உள்ள வாய்கால் ஒன்றினுள் கொண்டுவந்து வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட வானும் திருமலை துறைமுகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவில் மோதல்களில் காயமடைந்தவர்களில் 60 பேர் திருமலையில் உயிரிழப்பு

green-ocean.jpgமுல்லைத் தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இன்று ஏ-9 வீதியூடாக யாழ். குடாவுக்கு உணவுப் பொருட்கள்

lorry_item_food.jpgசித்திரைப் புத்தாண்டையொட்டி ஏ-9 வீதியூடாக முதல் தடவையாக தனியார் வர்த்தக நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அடங்கிய 20 லொறிகள் இன்று  யாழ். குடாநாட்டுக்குப் புறப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ண தெரிவித்துள்ளார்.

ரஸாக் மலேசியா பிரதமராகிறார்

najib-razak.jpgகடும் எதிர்ப்புகள், அதிருப்திகளுக்கு மத்தியில், தனது பிரதமர் பதவியை முகம்மது அப்துல்லா படாவி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதையடுத்து துணைப் பிரதமர் நஜீப் ரஸாக் பிரதமராக பதவியேற்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த மலேசியத் தேர்தலில் ஆளும் கூட்டணியான உம்னோவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சாதாரண மெஜாரிட்டியுடன்தான் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடக்குமுறை நடவடிக்கை காரணமாக அவரது கட்சிக்கு பெரும் அடி விழுந்தது. இதனால் படாவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஆரம்பத்தில் விலக முடியாது என பிடிவாதமாக கூறி வந்தார் படாவி. இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டு விரைவில் பதவி விலகுவேன், நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று அறிவித்தார் படாவி. அதன்படி சமீபத்தில் அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நஜீப் ரஸாக் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது பிரதமர் பதவியையும் படாவி ராஜினாமா செய்துள்ளார். இதை அந்த நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதைத் தொடர்ந்து ரஸாக் பிரதமராக வழி ஏற்பட்டுள்ளது.

1957ம் ஆண்டு முதலே உம்னோ கூட்டணிதான் மலேசியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக படாவி தலைமையிலான உம்னோ அரசுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்திய வம்சாவளியினர் குறித்த பிரச்சினையை படாவி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியதே அந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய அடிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நாளை நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ரோஹித

rohitha_bogollagama_.jpgபயங்கர வாதத்தைத் தோற்கடித்து பொதுமக்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய சேவையைப் பூர்த்தி செய்யும்போது நாட்டின் இறைமை,  ஆட்புள ஒருமைப்பாடு மற்றும் மக்களின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்க அரசாங்கம் தயாரில்லை. சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பை சர்வதேச சமூகம் வற்புறுத்தும் அளவுக்கு அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்பட்டன.

இந்தியா,  சீனா, ரஷ்யா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்காக நேரடியாகக் குரல் கொடுக்கின்றன. இலங்கையின் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை என அந்த நாடுகள் எப்போதும் கூறி வருகின்றன. இலங்கை அதன் நட்புறவு நாடுகளோடு மிகவும் ஒத்துழைப்புடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டு வருதே இதற்குக் காரணமாகும். இதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் லிபியாவுக்குப் பயணமாகவுள்ளார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தியாவசியப் பொருட்களுடன் ‘சிட்டி ஒப் டுப்லின்’ முல்லைத்தீவை அடைந்தது

1029 தொன் பொருட்கள் அடங்கிய ‘சிட்டி ஒப் டுப்லின்’ என்ற கப்பல் முல்லைத்தீவைச் சென்றடைந்துள்ளதாகக் கடற்படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இக்கப்பலில் மருத்துவ மற்றும் அவசர சுகாதார உடைகள் , கூடாரங்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட. – கிழக்கு தமிழர்கள் இணையத்தளத்தில் பதியும் நடமாடும் சேவைப் பிரிவு இன்று ஆரம்பம்

வடக்கு – கிழக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தென்பகுதிக்கு வந்துள்ள தமிழர்களை இணையத்தளத்தின் மூலமாகப் பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் இன்று ஆரம்பிக்கவுள்ளனர்.  அவசரகாலச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கான இணையத்தளம் இன்று வியாழக்கிழமை தொடங்கப்படும். அதேவேளை, இதற்கான நடமாடும் சேவைப் பிரிவு ஒன்றும் இன்று செயற்படத் தொடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இணையத்தளத்தை தொடங்கும் நிகழ்வு வெலிக்கடையில் உள்ள மகிந்தராம விகாரையில் இன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறவிருக்கின்றது.

உலகின் பொருளாதாரப் பிரச்சினை இலங்கையை பெருமளவில் பாதிக்காது – அமைச்சர் சரத் அமுனுகம நம்பிக்கை

pr-con-02042009.jpgஇலங்கையில் விவசாயம்,  சேவைகள், மற்றும் உற்பத்தி ஆகிய துறைகள் சிறப்பாக இயங்குவதால் உலகின் பொருளாதாரப் பிரச்சினை இலங்கையை பெருமளவில் பாதிக்காதென பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,  நாட்டின் விவசாயத்துறை முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிக நெல் அறுவடை கிடைத்துள்ளது.

கடந்த வருடம் உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோதும் அதன் தாக்கம் இலங்கையில் உணரப்படவில்லை. எமக்குத் தேவையான பால் 20 சதவீதமும் சீனி 16 சத வீதமுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த உற்பத்திகள் அதிகரிக்கப்படவேண்டும். எமது நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவனியை அதிகரிக்க புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.