செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றம்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்திருந்தார். கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,  நீதித்துறையின் மாண்பு மீள உறுதி செய்யப்படும், ஊழல் – பக்கச்சார்பற்ற அரசசேவை முன்னெடுக்கப்படும், இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை, இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை, நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் போன்ற விடயங்களை வலியுறுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது.

 

கிளிநொச்சியில் 16 புதிய மதுபான சாலைகள் – போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட பார் பெர்மிட் அபிவிருத்தி !

கிளிநொச்சியில் 16 புதிய மதுபான சாலைகள் – போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட பார் பெர்மிட் அபிவிருத்தி !

 

தேசிய மக்கள் சக்தியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டது முதல் பார்பெர்மிட் தொடர்பான விடயங்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில் புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

”இக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.

மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.

சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாவட்ட ரீதியாக பார்க்கும் பொழுது அதிகூடிய மக்கள்தொகையையும் – மிகப்பெரிய வியாபார மையங்களாகவும் காணப்படும்  கொழும்பு மாவட்டத்துக்கு 24 அனுமதிகளும், கம்பஹா மாவட்டத்துக்கு 18 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ள அதே வேளை இவற்றுக்கு அடுத்தபடியாக வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியான மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள விடயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு மாகாணத்தை பொருத்த வரையில் புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் அடிப்படையில் யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2 என்ற வகையிலும் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள் தொடர்பில் அப்பகுதி அரசியல்வாதிகளான சிறீதரன் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மறந்தும் இதுவரை வாய்திறந்தது கிடையாது. ஏற்கனவே கிளிநொச்சி பகுதிகளில் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, என சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ள நிலையில் புதிதாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான சாலைகளில் பெட்டிக்கடைகள் போல மதுபான சாலைகள் குவிந்து போயுள்ளது என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை அண்மித்த வகையில் மதுபான சாலைகள் அமைக்கப்படக்கூடாது என்ற தியதி காணப்படும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பிரதான நகரப் பாடசாலைகளுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று என்ற வகையில் சாராயக் கடைகள் காணப்படுவது எதிர்கால தலைமையினருக்கு கல்வி மீதான நாட்டம் குறைவடைய காரணமாக அமையும் எனவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்கினேஸ்வரன் ஓர் மதுபான சாலைகளுக்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்று ஓர் பெண்ணுக்கான வாழ்வாதார உதவி வழங்கியதாக கூறியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

34 ஆண்டுகளின் பின் ஆரம்பிக்கப்பட்ட ஆலய வழிபாடு- கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்!

34 ஆண்டுகளின் பின் ஆரம்பிக்கப்பட்ட ஆலய வழிபாடு- கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்!

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று (4) இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டார்.

ஆளுநருடன் , யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியாக அனுரகுமார பதவியேற்ற பின் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின் மக்களை செல்ல அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பில்கேட்ஸின் பரிசோதனை எலிகளாக இந்தியர்கள் – செறிவூட்டப்பட்ட அரசி விவகாரத்துக்கு அடுத்து புதிய சர்ச்சையில் பில்கேட்ஸ்!

பில்கேட்ஸின் பரிசோதனை எலிகளாக இந்தியர்கள் – செறிவூட்டப்பட்ட அரசி விவகாரத்துக்கு அடுத்து புதிய சர்ச்சையில் பில்கேட்ஸ்!

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் பேசிய விடயங்கள் பாரிய சர்ச்சையாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. குறித்த பேட்டியில் பில்கேட்ஸ்,  பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அறக்கட்டளை அலுவலங்களில், இந்தியாவில் இருக்கும் அலுவலகம் மிகப் பெரியது. உலகின் பல இடங்களில் நாங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான திட்டங்கள் இந்தியாவுடன் தொடர்புடையதுதான். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.

இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியர்கள் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். குறித்த பதிவுகளில்  ‘‘இந்தியா சோனைக்கூடம் தான். இந்தியர்கள்தான் பில்கேட்ஸ் போன்றோர்களுக்கு பரிசோதனை எலிகள். பில்கேட்ஸ் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், ஊடகம் என அனைவரையும் சமாளிக்கிறார். இந்தியாவில் அவரது அலுவலகம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துக்கு உட்படாமல் செயல்படுகிறது. நமது கல்விமுறை அவரை ஹீரோவாக்கியுள்ளது. நாம் எப்போது விழிப்போம் என தெரியவில்லை’’ என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.  ஏற்கனவே செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரம், கொவிட் தடுப்பூசி விவகாரம் போன்றவற்றில் பில்கேட்ஸ்  இந்தியர்களை பரிசோதனை எலிகளுக்கு நிகராக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் அவருடைய புதிய கருத்து மேலும் பல விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது.

அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான மூவரும்  விடுதலை –  அன்புக்குரியவர்களை நினைவேந்தும் உரிமை உள்ளது – பாதுகாப்பு அமைச்சு!

அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான மூவரும்  விடுதலை –  அன்புக்குரியவர்களை நினைவேந்தும் உரிமை உள்ளது – பாதுகாப்பு அமைச்சு!

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சமீபத்தில் மாவீரர்கள் நாள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிலரும் கைதாகியிருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு. தற்போதும் இதுவே எங்கள் நிலைப்பாடு ,தெற்கிற்கும் இந்த நிலைப்பாடு பொருந்தும். எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதால் நினைவுகூரலின் போது அவர்களின் கொடிகள் இலச்சினைகளை பயன்படுத்த அனுமதியில்லை. இதேவேளை சமூக ஊடகங்களை பயன்படுத்தி திட்டமிட்ட அடிப்படையில் தெற்கில் பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டது, இந்த பிரச்சாரத்திற்கு அவர்கள் 2018 – 2022 இல் எடுக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தினார்கள். இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இதனை செய்துள்ளனர். எனவும் அவர் குற்றச்சாட்டினார்.

இதனிடையே அண்மையில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்ற நேரத்தில் இனவாத கருத்துக்களை முன்வைத்து பயங்கரவாதத்தை தூண்டிய அடிப்படையில் கைதான தென்னிலங்கையை சேர்ந்த இருவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தமைக்காக கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

13வது திருத்தச்சட்டத்தின் எதிரகாலம் என்ன? ஜேவிபி எங்கு நோக்கிச் செல்கின்றது? 13வது திருத்தச் சட்டத்தில் முஸ்லீகள் எந்தப் பக்கம்?

13வது திருத்தச்சட்டத்தின் எதிரகாலம் என்ன? ஜேவிபி எங்கு நோக்கிச் செல்கின்றது? 13வது திருத்தச் சட்டத்தில் முஸ்லீகள் எந்தப் பக்கம்?

சட்டத்தரணி, மனித உரிமைவாதி மற்றும் அரசியல் ஆய்வாளர் செயட் பசீர்

 

புலிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்த மாகாண சபை முறையை கட்டிப்பிடித்துத்தொங்கும் தமிழ்தேசியம்!

புலிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்த மாகாண சபை முறையை கட்டிப்பிடித்துத்தொங்கும் தமிழ்தேசியம்!

 

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை கொஞ்சம் கூட முஸ்லீம் மக்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை என சட்டத்தரணியும் – சமூக செயற்பாட்டாளருமான பஷீர் செய்யத் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களும் – தமிழ் அரசியல்வாதிகளும் தங்களை பெரும்பான்மை சிங்களவர்கள் அடக்குகிறார்கள் என கூறிக்கொண்டே தங்களுக்குள் உள்ள இன்னுமொரு இனத்தவர்களான தமிழ்பேசும் முஸ்லீம்களை – அவர்களின் அரசியல் உரிமைகளை கிஞ்சித்தும் கணக்கெடுக்காத துயரம் தொடர்கிறது. புலிகளின் வழியில் முஸ்லீம் எதிர்ப்பு அரசியல் தொடர்வதாக பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் ஓர் இணைப்பான சூழல் உள்ள நிலையில் முஸ்லீம் எதிர்ப்பை சூசகமாக வெளிப்படுத்தியே இரா.சாணக்கியன் தன் பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக் கொண்டார் என சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே முஸ்லிம்களுக்கு கொஞ்சமும் சாதகமான சூழல் இல்லாத மாகாண சபை முறையை தமிழ்தேசிய அரசியல் தரப்பு மீள மீள வலியுறுத்தி வருகிறது.

 

தமிழர்களுக்கான தீர்வு என இந்திய நலன்விரும்பிகள் எதிர்பார்த்த மாகாண சபை முறை முழுவதுமாக ஊழல் நிறைந்ததாகவும் – பக்கச்சார்பாகவும் காணப்பட்ட நிலையில் அது தோல்வியடைந்த அமைப்பாக மாறியது அறிந்ததே. இதேநேரம் தமிழர்களை காக்க வந்த மீட்பர் என கஜா – கஜா அணியினர், தமிழரசுக்கட்சியினர் விலையேற்றிய நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் பதவியையும் அனுபவித்து பார்பேர்மிட் பெற்றது தான் மிச்சம். இதேவேளை 13ஆவது திருத்தம் வேண்டாம், மாகாண சபை வேண்டாம் என கூறி தெருத்தெருவாக கோசமிட்டு திரிந்த கஜா கஜா அணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது. இப்படியான நிலையில் எந்த பயனுமே இல்லாத மாகாண சபை முறையை நீக்கி அதற்கு மேலான அதிகாரங்களுடன் கூடிய ஓர் அரசமைப்பு முறையை கொண்டுவர எண்ணுகிறோம் என தேசிய மக்கள் சக்தி கூறியதற்கு தான் இத்தனை எதிர்ப்புக்களை முன்வைக்கின்றனர் குறுந்தேசியவாதிகள். இந்த நிலையில் தேசம் நெட் நேர்காணலில் பேசிய சட்டத்தரணி பஷீர் செய்யத் “மாகாண சபை முறையால் முஸ்லீம்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மாறாக அது புதிய பல சிக்கல்களைத்தான் தோற்றுவித்தது. இதனாலேயே மூத்த அரசியல்வாதி அஷ்ரப் 13ஆவது திருத்தம் முஸ்லீம்களின் மீது எழுதப்பட்ட அடிமைசாசாசனம் என கூறுகிறார். தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களுக்கும் பயனளிக்க கூடிய ஓர் அரசியலமைப்பு முறையை உருவாக்க எத்தனிக்கிறது. அதற்கு சிறுபான்மை இனங்களின் தலைவர்கள் இடமளிக்க வேண்டும் என்கிறார். இதேவேளை பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , இன்னும் மூன்று வருடங்களில் தான் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும். அனைத்து தரப்பினருடனும் பேசியே அரசியலமைப்பு பற்றிய தீர்மானங்கள் எட்டப்படும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பார் பெர்மிட் பெற்றவர்கள் விபரம் இன்று மாலை அறிவிக்கப்படும் !

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.

மாவீரர் தினத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை  என கொழும்பு பிரதான நீதவான் கேள்வி !

இனவாதத்தை தூண்டியதாக கைதான தென்னிலங்கையை சேர்ந்தவர் விடுதலை – மாவீரர் தினத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை  என கொழும்பு பிரதான நீதவான் கேள்வி !

நாட்டில் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் , மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு ஏன் அவர்களை கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக திரித்து இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிலங்கையில், கெலும் ஹர்ஷன கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதவான் , சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு , குற்ற விசாரணைப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் – ஆளுநர் வேதநாயகன்

யாழ்ப்பாணம், குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

“விவசாயம் மற்றும் கடற்றொழில் வடக்கு மாகாணத்தின் முக்கியமான தூண்கள். இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன். அன்றும் இன்றும் உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலராக இருக்கின்ற சா. சுதர்சனும் இதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இராமலிங்கம் சந்திரசேகர், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். அவர் பலவற்றை உங்களுக்காகச் செய்வார்.

கடந்த காலத்தில் உங்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பகுதிக்கு துறைமுகம் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. அதன் தேவைப்பாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து அதைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்”- என்றார்.