பில்கேட்ஸின் பரிசோதனை எலிகளாக இந்தியர்கள் – செறிவூட்டப்பட்ட அரசி விவகாரத்துக்கு அடுத்து புதிய சர்ச்சையில் பில்கேட்ஸ்!
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் பேசிய விடயங்கள் பாரிய சர்ச்சையாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. குறித்த பேட்டியில் பில்கேட்ஸ், பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அறக்கட்டளை அலுவலங்களில், இந்தியாவில் இருக்கும் அலுவலகம் மிகப் பெரியது. உலகின் பல இடங்களில் நாங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான திட்டங்கள் இந்தியாவுடன் தொடர்புடையதுதான். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.
இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியர்கள் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். குறித்த பதிவுகளில் ‘‘இந்தியா சோனைக்கூடம் தான். இந்தியர்கள்தான் பில்கேட்ஸ் போன்றோர்களுக்கு பரிசோதனை எலிகள். பில்கேட்ஸ் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், ஊடகம் என அனைவரையும் சமாளிக்கிறார். இந்தியாவில் அவரது அலுவலகம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துக்கு உட்படாமல் செயல்படுகிறது. நமது கல்விமுறை அவரை ஹீரோவாக்கியுள்ளது. நாம் எப்போது விழிப்போம் என தெரியவில்லை’’ என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரம், கொவிட் தடுப்பூசி விவகாரம் போன்றவற்றில் பில்கேட்ஸ் இந்தியர்களை பரிசோதனை எலிகளுக்கு நிகராக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் அவருடைய புதிய கருத்து மேலும் பல விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது.