செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இடம்பெயர்ந்தோர் நலனைக் கவனிக்க அரசாங்க அதிகாரிகள் நியமனம்

chandresiri.jpg
இடம்பெயர்ந்தோரின் நலன்கள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைமை அதிகாரியாக இராணுவ உயர்மட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது மேற்பார்வையின் கீழேயே இடம்பெயர்ந்தோர் தொடர்பான சகல நடவடிக்கைகளும் இனிமேல் மேற்கொள்ளப்படும். இடம்பெயர்ந்தோர் நலன் தொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளும் இணைப்பாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர நிவாரணப் பணிகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் கண்டி,  அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் இணைப்பாளர்காளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கோத்தாபய ஜயரத்ன முகாம்கள் அமைத்தல் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குதல் என்பவற்றுக்குப் பொறுப்பாகவும்,  பொலன்நறுவை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.ஏ. லால் விமல் உணவு,  சுகாதாரம் மற்றும் பொதுவசதிகள் என்பவற்றுக்கும் அநுராதபுர மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.கே. ஹேரத் நீர்விநியோகம், மின்சாரம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் என்பவற்றுக்கும் பொறுப்பாளர்காளக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுடர் ஒளி நாளிதழின் ஆசிரியர் இன்று விடுதலை!

vidyatharan.jpg பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சுடர் ஒளி நாளிதழின் ஆசிரியர் என். வித்தியாதரன் இன்று காலை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

புலிகள் கடந்த 20ஆம் திகதி கொழும்பில் நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இவரைக் கடந்த 26ஆம் திகதி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பிரபாகரனை கொ‌ல்ல ‘ரா’ உளவு‌த்துறை ச‌‌தி‌ : பழ.நெடுமாற‌ன்

neduma2.jpg”விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் ‌பிரபாகரனை கொலை செ‌ய்ய ‘ரா’ உளவு‌த்துறை ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டியு‌ள்ளது” எ‌ன்று த‌மி‌ழீழ ‌விடுதலை ஆதரவாள‌ர் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க் குழு‌வி‌ன் அமை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌ : இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌தீ‌விரமாக நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் இ‌ந்த கால‌க் க‌ட்ட‌த்தை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ண்டு ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் ‌பிரபாகர‌னை படுகொலை செ‌ய்ய ‘ரா’ உளவு‌த்துறை ச‌தி‌த் ‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டியு‌ள்ளது என்று ‌மிக ந‌ம்பகமான‌த் தகவ‌ல் ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது.

போ‌ர் ‌நிறு‌த்த‌த்தை இ‌ந்‌திய அரசு வ‌லியுறு‌த்த மறு‌த்து வருவ‌தி‌ன் ‌பி‌ன்ன‌ணி இதுதா‌ன் எ‌ன்பது அ‌ம்பலமா‌கி‌யிரு‌க்‌கிறது. கட‌ந்த கால‌த்‌திலு‌ம் பல முறை ‌பிரபாகரனை ஒ‌‌‌ழி‌‌த்து‌விட ‘ரா’ உளவு‌த்துறை செ‌ய்த பல முய‌ற்‌சிக‌ள் வெ‌‌ற்‌றிகரமாக மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டதை‌ப் போலவே இ‌ம்முறையு‌ம் இ‌ச்ச‌தி‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் மு‌றியடி‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்ப‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லை.

எனவே இ‌ச்ச‌‌தி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள ‘ரா’ அ‌திகா‌ரிக‌ள் ‌மீது உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் மு‌ன்வர வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் இ‌ந்த‌ச் ச‌தி‌க்கு அவரு‌ம் உட‌ந்தை எ‌ன்ற முடிவு‌க்கு‌த் ‌த‌மி‌ழ் ம‌க்க‌ள் வர நே‌ரிடு‌ம். இத‌ன் ‌விளைவாக வரலாறு காணாத வகை‌யி‌ல் பெரு‌ம் கொ‌ந்த‌‌ளி‌ப்பு த‌மிழக‌த்த‌ி‌ல் ஏ‌‌ற்படு‌ம் எ‌ன்று நா‌ன் எ‌ச்ச‌ரி‌க்க ‌விரு‌ம்பு‌கிறே‌ன் எ‌ன்று அந்த அறிக்கையில் பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ள‌ா‌ர்.

வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளமாட்டார் – படையினரிடம் சரணடைந்த ஜோர்ஜ் தகவல்

geargemaster.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த ஒரு காலகட்டத்திலும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளமாட்டார் எனவும் அவர் வாழ்வதற்கு மிகவும் ஆசைகொண்ட மனிதன் எனவும் படையினரிடம் சரணடைந்த ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம தெரிவித்துள்ளார்.

படையினரிடம்  சரணடைந்துள்ள புலிகளின் இரு முக்கியஸ்தர்களான புலிகளின் மூத்த உறுப்பினரும் ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி,  புலிகளின் முக்கிய ஆவணக்காப்பாளரும் மொழிபெயர்பாளருமான ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் பல முக்கிய தகவல்களை இராணுவத்திருக்கு வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரணடைந்துள்ள ஜேர்ஜ்,  தாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாராக விளங்கிய தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புலிகள் இயக்கத்தினரால் ஒதுக்கப்பட்டதாவும் அவ்வியக்கத்திற்கும் தமக்குமான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வியக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் தாம் வன்னியில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தகாகவும் இடம்பெயரும் மக்களுடன் மக்களாக இடம்பெயர்ந்து வன்னியில் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து யுத்த சூனியப் பிரதேசத்திலுள்ள கூடாரங்களில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தாம் யுத்த சூனியப் பிரதேசங்களில் இருந்தபோது புலிகள் மக்களுக்கு கொடுத்த துயரங்களை தாமும் அனுபவித்ததாக கூறும் அவர்கள் பிரபாகரனும் எஞ்சியுள்ள முன்னணித் தலைவர்கள் அனைவரும் யுத்த சு10னியப் பிரதேசத்திற்குள் அடங்கும் வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே உள்ளனரெனவும் தெரிவித்துள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியில் சிக்கியிருந்த மக்கள் அனைவருமே புலிகளின் கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறுவதற்கு மிகுந்த விருப்பத்துடன் காணப்பட்டனர். ஆனால் புலிகள் மக்களின் நடமாட்டத்தை நன்றாக அவதானித்து அங்கிருந்து வெளியேற முற்பட்ட பலரை கொன்றதை கண்ணுற்று தமக்கும் அக்கதி ஏற்படும் என்ற பயத்தில் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்தாகவும்  கடந்த இரு தினங்களில் அங்கிருந்த 90 சதவீதமான மக்கள் வெளியேறிய நிலையில் மேலும் அங்கு 10000 தொடக்கம் 15000 மக்கள் எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

‘அன்பு சகோதரர்’ வைகோவை அவமானப்படுத்திய ஜெயலலிதா

jayalalitha.jpgவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவின் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே சொன்னார்.

வைகோவுக்காக ஓட்டு கேட்க வந்தபோதும்கூட, வைகோவை மேடையில் வைத்துக் கொண்டே அவரது பெயரை ஒரு முறைக்கு மேல் உச்சரிக்காமல் தனது ஒரு மணி நேர உரையை அவர் முடித்தார். அதுவும் கூட வைகோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுகையில் மட்டும் மறந்துபோயோ என்னவோ வைகோவின் பெயரைச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக அன்புச் சகோதரர் என்று வைகோவை ஜெயலலிதா கூறுவார். ஆனால், இம்முறை பெயரையே சொல்லாமல் தவிர்த்தார். ஆனாலும் பெயரைச் சொல்வார் என்று மதிமுக தொண்டர்களும், ஏன் வைகோவும் கூட எதிர்பார்ப்புடன் இருக்க, அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்விட்டு ஜெயலலிதா பேச்சை முடித்தபோது மேடையில் இருந்த ‘அன்பு சகோதரர்’ அவமானத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.

வாக்களியுங்கள் என்று சொன்னபோது, தனது பெயரை ஜெயலலிதா சொல்லாவிட்டாலும் எழுந்து நின்று மக்களைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தார் வைகோ. பாவம் வைகோ..!

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் 13 மில்லியன் ரூபா கொள்ளை

வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை வங்கி வைப்பைறையிலிருந்து இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாப்பாக வங்கியை விட்டு வெளியேறும் வரையிலும் வங்கி ஊழியர் ஒருவரை பணயக் கைதியாக கொள்ளைக் கோஷ்டியினர் பிடித்து வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

11வது நாளாக தொடரும் பெண்கள் உண்ணாவிரதம்

20-fast.jpgஈழத் தமிழர்களைக் காக்க்க கோரியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையி்ல பெண்கள் கூட்டமைப்பினர் நடத்தி வரும் உண்ணாவிரதம் 11வது நாளாக இன்றும் தொடருகிறது. மேலும் 6 பெண்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து பெண்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சற்றும் கவலைப்படாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த 13ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பேராசிரியை சரஸ்வதி (இவர்தான் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்), வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பழனியம்மாள், லித் வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகிய 6 பேருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது. நேற்று இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை ரோகிணி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த பெண்களை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நாளை மேல்மாகாணசபைத் தேர்தல்

sri-lanka-election.jpgநாளை சனிக்கிழமை மேல் மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

நாளை காலை 7.00மணி முதல் 4.00மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தேசம்நெற் க்குத் தெரிவித்தது. 319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ண ப்படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், நாளையதினம் தேர்தல் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாண தேர்தல் கடமைகளில் 43 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல்கள் செயலகம் தகவல்

மேல்மாகான சபைத் தேர்தல் கடமைகளுக்காக 43 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 12, 180 அரச ஊழியர்கள் தேர்தல் மத்திய நிலையங்களில் கடமையாற்றவுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் நிலையங்களில் 8,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கம்பஹா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 12, 000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளுக்காக 1,500 பேர் பணியாற்றவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 ஊழியர்கள் சேவையாற்றவுள்ளனர். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக 2,500 வாகனங்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய உயர்மட்டத் தூதுக் குழு இன்று இலங்கை விஜயம்

india.jpgஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக் குழுவினர் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் – இந்தியா

mugarsjee_piranap.jpg இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுதில்லியில் நடந்துள்ளன. வியாழன்றைய கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில், இலங்கை அரசிடம் இந்தியாவின் கரிசனைகளை தெரிவிப்பதற்காக இரண்டு விசேட தூதுவர்கள் இலங்கை செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவிர இலங்கை நிலவரம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மட்டும் தீர்வாகிவிட முடியாது. அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்படவே வேண்டும் என்பதை இலங்கையிடம் இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.