வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளமாட்டார் – படையினரிடம் சரணடைந்த ஜோர்ஜ் தகவல்

geargemaster.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த ஒரு காலகட்டத்திலும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளமாட்டார் எனவும் அவர் வாழ்வதற்கு மிகவும் ஆசைகொண்ட மனிதன் எனவும் படையினரிடம் சரணடைந்த ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம தெரிவித்துள்ளார்.

படையினரிடம்  சரணடைந்துள்ள புலிகளின் இரு முக்கியஸ்தர்களான புலிகளின் மூத்த உறுப்பினரும் ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி,  புலிகளின் முக்கிய ஆவணக்காப்பாளரும் மொழிபெயர்பாளருமான ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் பல முக்கிய தகவல்களை இராணுவத்திருக்கு வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரணடைந்துள்ள ஜேர்ஜ்,  தாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாராக விளங்கிய தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புலிகள் இயக்கத்தினரால் ஒதுக்கப்பட்டதாவும் அவ்வியக்கத்திற்கும் தமக்குமான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வியக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் தாம் வன்னியில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தகாகவும் இடம்பெயரும் மக்களுடன் மக்களாக இடம்பெயர்ந்து வன்னியில் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து யுத்த சூனியப் பிரதேசத்திலுள்ள கூடாரங்களில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தாம் யுத்த சூனியப் பிரதேசங்களில் இருந்தபோது புலிகள் மக்களுக்கு கொடுத்த துயரங்களை தாமும் அனுபவித்ததாக கூறும் அவர்கள் பிரபாகரனும் எஞ்சியுள்ள முன்னணித் தலைவர்கள் அனைவரும் யுத்த சு10னியப் பிரதேசத்திற்குள் அடங்கும் வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே உள்ளனரெனவும் தெரிவித்துள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியில் சிக்கியிருந்த மக்கள் அனைவருமே புலிகளின் கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறுவதற்கு மிகுந்த விருப்பத்துடன் காணப்பட்டனர். ஆனால் புலிகள் மக்களின் நடமாட்டத்தை நன்றாக அவதானித்து அங்கிருந்து வெளியேற முற்பட்ட பலரை கொன்றதை கண்ணுற்று தமக்கும் அக்கதி ஏற்படும் என்ற பயத்தில் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்தாகவும்  கடந்த இரு தினங்களில் அங்கிருந்த 90 சதவீதமான மக்கள் வெளியேறிய நிலையில் மேலும் அங்கு 10000 தொடக்கம் 15000 மக்கள் எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • BC
    BC

    மனித துயரங்களெல்லாம் அடங்காத அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன என்று சொல்லி தனது வளர்சிக்காக மற்றவர்களை உயிர் வாழ மறுத்தவருக்கு தான் மட்டும் உயிர் வாழ மிகவும் ஆசை!!

    Reply
  • palli
    palli

    அப்படி செய்வதானால் முப்பது வருடத்துக்கு முன்பே செய்திருப்பார். மற்றவர்களை சாகடிப்பதில் இன்பம் கானும் ஒருவர் தானாக சாக விரும்ப
    மாட்டார் என்பது நியாயம்தானே.

    Reply
  • thevi
    thevi

    நல்ல ஆடைகள் மீதும் நல்ல சுவை மிகுந்த உணவின் மீதும் ஆடம்பர வாழ்வின் மீதும் அடங்காத விருப்பமுடையவர் பிரபாகரன். ஈபிஆர்எல் எவ் உறுப்பினர்களை பிடிக்காமல் அவர்களை கொலை செய்ததற்கு காரணம் அந்த போராளிகளின் அழுக்கு உடைகளும் எண்ணெய் வைத்து படிய வாரப்படாத தோற்றமுமே என அடேல் பால சிங்கம் தனது புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்.

    Reply
  • மாயா
    மாயா

    //BC on April 24, 2009 9:02 am மனித துயரங்களெல்லாம் அடங்காத அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன என்று சொல்லி தனது வளர்சிக்காக மற்றவர்களை உயிர் வாழ மறுத்தவருக்கு தான் மட்டும் உயிர் வாழ மிகவும் ஆசை!!//

    நீங்கள் மட்டுமல்ல நான் அங்கே அகப்பட்டு இருந்தாலும் அவரது நிலைக்கே தள்ளப்பட்டிருப்பேன். இங்கு எழுதும் எவர் நிலையும் இதுதான்.
    இவர்கள் சாகவில்லை அல்லது சாகடிக்கப்படவில்லை என புலிகள் குமுறுகின்றனர். நீங்களோ அவரை எள்ளி நகையாடுகிறீர்கள்.

    ஆனால் தமிழர்கள், எதிரிகளாகப் பார்க்கும் – சித்தரிக்கும் சிங்களமோ , மனம் திரும்பி வந்தவர்களை பாதுகாத்து புனர்வாழ்வழித்து பராமரிக்க முயல்கிறது. இவர்கள் எம் நாட்டு மக்கள் என படையில் உள்ளவன் கூட பிஞ்சு குழநநதைகளை தூக்கி கொஞ்சுகிறார்கள். புலிகளோ தம் உயிர் காக்க பிஞ்சுகளுக்குக் கூட நஞ்சை ஊட்டுகின்றனர்.

    தமிழனுக்கும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். தமிழனோடு வாழ்வதை விட சிங்களவனோடு நிம்மதியாக வாழலாம் தமிழனைத் திருத்தவே ஏலாது.

    Reply
  • மாயா
    மாயா

    உண்மையிலேயே சிங்களவன் அன்று தனியாக முடிவெடுத்திருந்தால் தமிழனுக்கு எப்போதோ சுயாட்சியாவது கிடைத்திருக்கும். சிங்களவனுக்கு முன்னால் காது சொறிந்த தமிழனாலேயே தமிழனுக்கு இந்த நிலை அன்று உருவானது.

    நம் கண்ணுக்கு மலை போல் தெரியும் உதாரணம், மலையக இந்தியத் தமிழனுக்கு குடியுரிமை கொடுக்காது தடுத்தமை.மலைக தமிழனின் இன்று வரையுள்ள அவலம். ஆனால் இந்தியா உதவவில்லை என ஒரே ஊளையிடல். குற்றச் சாட்டு. தன்வினை தன்னைச் சுடும்.

    வெளிநாடு ஓடி வந்தவனே புனைப் பெயரில் பயத்தில் கருத்து எழுதுற அவலம். அச்சம்.உயிர் பயம். நம் நிலையே அப்படி இருக்க அங்கு இருந்த மக்கள் அல்லது போராளிகள் குறித்து பேச எமக்கு என்ன தகுதி.

    புலிகளோடு இருந்து சரணடையும் வீரர்களை அல்லது போராளிகளை அல்லது பணியாளர்களை மதிக்க நீங்களாவது கற்றுக் கொள்ளுங்கள்.ஒரு காலத்தில் புலிகள் ஏனைய இயக்கங்களையும் அப்பாவிகளையும் அழித்ததற்காக நாமும் அந்த வரலாற்று தவறை செய்ய எவரையும் ஊக்கப்படுத்தக் கூடாது.அதுவே புலிகளுக்கும் ஏனையவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆக்கிவிடும்.

    அரசின் பேச்சை நம்பியே அவர்கள் சரணடைகிறார்கள். அவர்கள் தவறிழைத்தவர்களாக் கூட இருக்கலாம். ஆனாலும் அவர்களை தமிழர்கள் யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. அப்படி நீங்கள் அவர்களைக் கொச்சைப்படுத்துவதாக இருந்தால் இடைத் தங்கல் முகாங்களில் வந்து நிற்கும் அல்லது அரசை நம்பி வரும் அனைவரையும் நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்கள்.

    எவராவது சரணடைவோரை கொச்சைப்படுத்துவதாக இருந்தால் , புலிகள் மட்டுமே மன நோயாளர்கள் அல்ல. நாங்களும்தான். சரணடைவோர் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக இருக்க வேண்டும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கியூபா விடுவிக்கப்படும் பொழுது எங்களுக்கெதிராக போராடி உயிரிழந்தவர்களின் மனைவிகளுக்கும் குழைந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பையும் உதவிகளையும் நாங்கள் அளிப்போம். கியூபாவின் துயரங்களுக்கு அவர்கள் காரணமல்ல. இந்த மோசமான சூழ்நிலைக்கு அவர்களும் பலியானார்கள் என்பது தான் உண்மை.-பிடல்கஸ்ரோ-
    இப்படியான உயரிய நோக்கமான சிந்தனைகள் எமது மனத்தில் விழுந்து முளைவிட்டபடியால் தான் ரெலோவாக இருக்கட்டம் வேறு மாற்று இயக்கங்கங்களாகட்டும் விடுதலை வேட்கையில் பற்பல இயக்கங்களாக அணிதிரண்டோம். எந்தவொரு காலத்திலும் இன்னொரு இயக்கத்தை அழிக்க வேண்டும்மென்று கனவும் கண்டதில்லை” தகாத காலத்தில் பிறந்தவனால் அந்த வம்சமே அழியும்” என்பதற்கு இன்று பிரபாகரனே கண்முன் நிற்கும் சாட்சி அதற்கு புலத்துபுலிகளும் உடந்தையாக இருந்தார்கள் என்பதே அடுத்த உண்மை. இந்த தவறை இனியொருவன் செய்வான் என நினைப்பதே மாபெரும் தவறு.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    am most greatful to mr george for drawing our attention to the tremendous success of propaganda in the community. we are enjoying.

    Reply