விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவின் பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே சொன்னார்.
வைகோவுக்காக ஓட்டு கேட்க வந்தபோதும்கூட, வைகோவை மேடையில் வைத்துக் கொண்டே அவரது பெயரை ஒரு முறைக்கு மேல் உச்சரிக்காமல் தனது ஒரு மணி நேர உரையை அவர் முடித்தார். அதுவும் கூட வைகோவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட கேட்கவில்லை. மாறாக முதல்வர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுகையில் மட்டும் மறந்துபோயோ என்னவோ வைகோவின் பெயரைச் சொல்லிவிட்டார்.
வழக்கமாக அன்புச் சகோதரர் என்று வைகோவை ஜெயலலிதா கூறுவார். ஆனால், இம்முறை பெயரையே சொல்லாமல் தவிர்த்தார். ஆனாலும் பெயரைச் சொல்வார் என்று மதிமுக தொண்டர்களும், ஏன் வைகோவும் கூட எதிர்பார்ப்புடன் இருக்க, அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்விட்டு ஜெயலலிதா பேச்சை முடித்தபோது மேடையில் இருந்த ‘அன்பு சகோதரர்’ அவமானத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.
வாக்களியுங்கள் என்று சொன்னபோது, தனது பெயரை ஜெயலலிதா சொல்லாவிட்டாலும் எழுந்து நின்று மக்களைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தார் வைகோ. பாவம் வைகோ..!
மாயா
புலிகள் தமிழ் நாட்டு அரசியலிலும் சதுரங்கம் ஆடுகின்றனர். ராமதாஸ் மற்றும் திருமாவை அதிமுக மற்றும் திமுகவுக்குள் திட்டமிட்டு பிரித்து தள்ளி விட்டனராம். வைகோ பலம் இல்லாததால் வைத்தியரை சகோதரியோடு அணைந்து கொண்டுபோக தள்ளி விட்டதாக தகவல்.
அது தமிழகத்தில யார் ஆட்சிக்கு வந்தாலும் தமக்கு பிரச்சனை வரக் கூடாதென்று….அடுத்து பீஜேபீ வந்தால் புலித் தலைவர் உயிருக்கு பாதிப்பு வராதெண்டு புலித் தலைமை நினைச்சு குஞ்சு குறுமானுகளை உலக ஆக்கரமிப்பில இறக்கிவிட்டிட்டினம்.
இப்படித்தான் மகிந்த வரவையும் ஓபாமா வரவையும் எதிர்பார்த்து தீர்க்க தரிசனம் சொல்லிப் போட்டு இப்ப ஓடித்திரியறவை……. புலிகளுக்கு மண்டை சுகமில்லைதான்.
பார்த்திபன்
வைகோ எப்போது ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்ந்தாரோ அன்றே அவரது மானம் போய்விட்டது. பிறகு எப்படி அவருக்கு அவமானம் ஏற்படும்.