திருகோணமலை மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயாந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள மக்கள் கட்டைபறிச்சான் தில்லங்கேணி பகுதியில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக கிழக்குமாகாண மீள் குடியேற்ற இணைப்பாளர் இ. செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசஅதிபர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 200 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்கென கட்டைபறிச்சான் பகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் பணியினை திருகோணமலை மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்