இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது தனி ஈழம் அமைத்துக் கொடுத்தே தீருவேன் என்று முழங்கி வந்த ஜெயலலிதா, தனது அறிக்கையில், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், பிற பிரிவினருக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று மட்டும் கூறிக் கொண்டு நிறுத்தி விட்டார். தனி ஈழம் குறித்த தனது நிலை குறித்து அவர் இந்த அறிக்கையில் எதையும் கண்டு கொள்ளவில்லை.
நண்பன்
ஜெ தமிழர்களுக்கு தமிழீழம் அமைத்துக் கொடுப்பேன் என்று அறிக்கை விட்டதால் புலிகளினால் பெருந் தொகை பணமும், 10 தொகுதிகளில் வெற்றியும் கிடைத்தது. இல்லாவிட்டால் ஜெக்கு ஒரு தொகுதி கூட கிடைத்திருக்காது.
பாவம் டாக்குத்தரும், வைகேவும் ( இவரது வாய்தான் புலிகளுக்கு கேடு செய்வதில் முதன்மையாக இருந்தது) தா. பாண்டியனும். வியாபாரம் டல்தான்.
rohan
புலிகளின் சார்பில் அவர்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள்? புலிகளே துண்டைக் காணோம் துணியை காணோம் என்று நின்ற நேரம் அது.
10 வெற்றி என்பது பெரிய விடயம் தான், இல்லையா?
BC
புலிகளின் சர்வதேச புலனாய்வுத்துறையின் பொறுப்பாளர் அறிவழகன் என்று ஒருவர் இருக்கிறாரா?
chandran.raja
பால் தொடர்ந்தும் கறப்பது தான் எனமுடிவெடித்தால் அது அறிவழகன் என்றால் என்ன? அறிவழகியாகியாக இருந்தால் என்ன? அதைபற்றி நீங்கள் ஏன் அலட்டிக்கொள்கிறீர்கள் பி.சீ.!
Thaksan
அறிவழகர்கள் மட்டுமல்ல இன்னுமெத்தனையோ பேர் தோன்றுவார்கள் புலன்பெயர்த்தோரிடம் நிதி வசூலிக்க. அவதானம்! அவதானம்!!