பிரதமராக 2வது முறையாக இன்று மன்மோகன் சிங் பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டு நடைபெறுகிறது.
2வது முறையாக மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள். 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி , உள்துறைக்கு ப.சிதம்பரம், பாதுகாப்புக்கு ஏ.கே.அந்தோணி, வெளியுறவுத்துறைக்கு கமல்நாத், மனித வளத்துறைக்கு கபில் சிபல், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படக் கூடும்.