ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா. செயலாளர் இன்று நள்ளிரவு 11.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வவேதச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட ஐ.நா. செயலாளர் நாளை அங்கு செல்லவுள்ளார் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, பயங்கரவாதப் பிடியிலிருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கும்; முதலாவது சர்வதேசப் பிரதிநிதி ஐ.நா. செயலாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது.