எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புதுமாத்தளனில் புலிகளின் காவல் நிலையம் படையினரால் மீட்பு!

ltte_police.pngபுதுக் குடியிருப்பு பகுதியில் புலிகளுக்கெதிராக கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் படையினர் நேற்று புலிகளின் காவல் நிலையம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ-39 வீதியில் புதுமாத்தளன் பிரதேசத்துக்கு அருகில் அமைந்திருந்த புலிகளின் இந்தக் காவல் நிலையத்தை நேற்றுக் காலை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 8ஆவது கஜபா படையணியினர் பல மணிநேர கடும் தாக்குதல்களின் பின்னர் கைபற்றியுள்ளனர்.

இங்கு இடம்பெற்ற மோதல்களின்போது 9 எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். படை வீரர்கள் சிலரும் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.

முள்ளியவெளி பகுதியில் புலிகள் நடாத்தி வந்த காவல் நிலையமே புதுமாத்தாளன் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்ததாக களமுனையிலுள்ள படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவல் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதம நீதியரசர் மீண்டும் சேவையில் – பாகிஸ்தான் பிரதமர் தொலைக்காட்சியில் அறிவிப்பு

ifthikar_pakistan_justis.jpg பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரியை மீண்டும் அப்பதவியில் அமர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

இத்தீர்மாணத்தை இன்று பாகிஸ்தான் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றும்போது உத்தியோகபூர்வமாக அறிவித்த பிரதமர் கிலானி, பிரதம நீதியரசர் இம்மாத இறுதியில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் எனக் கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் ஆட்சியின்போது பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரி உட்பட 60 நீதிபதிகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையில் எதிர்க் கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கிச் செல்வதையடுத்தே பாகிஸ்தான் அரசாங்கம் இத்தீர்மாணத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. 

கொழும்பில் வாழும் வட-கிழக்கு மக்கள் பொலிஸில் பதிய வேண்டும் :ரஞ்சித் குணசேகர

ranjeth-gunasekara.jpgவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கொழும்பில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் மக்கள் அனைவரையும் எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன் பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் . 

நாயன்மார்கட்டில் இராணுவத்தினர் மீது கிரனைட் தாக்குதல்.

jaffna.jpgயாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் நேற்று (15.03.2009) இரவு 8.30 மணியளவில் இராணுவத்தினர் பயணித்த உழவு இயந்திரம் மீது புலிகள் கிரனைட் தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரியவருகின்றது. குறித்த வீதியூடாக உணவு எடுத்துச் சென்ற இராணுவத்தினர் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாகவும் எனினும் இதன்போது காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தப்பி வருவோர் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் பலி! – ஐ.நா. வின் பெண் பணியாளருக்கும் காயம்

navy_civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை நோக்கி வருகை தந்த பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நேற்று 5 படகுகள் மூலம் 66 பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தப்பி வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் முனைப் பிரதேசத்தை நோக்கி வருகை தந்த இந்த சிவிலயன்களை இலக்கு வைத்து புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான படகில் வந்த தவநாயகம் தனூஷன் எனும் 9 வயது சிறுவன் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

புலிகளின் இத்துப்பாக்கிச் சுட்டில் 14 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் ஐ.நா. வின் பெண் பணியாளரான சுதர்ஷினி தர்மிலா என்பவரும் அடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 ஆண்கள்,17 பெண்கள்,15 சிறுவர் மற்றும் 11 சிறுமியர் அடங்கலான இந்த 66 பேரையும் சுன்டிக்குளம்-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்றுக் காலை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.   

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு கப்பலில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டோர் விபரம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் 440 பொதுமக்கள் அழைத்து வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் காயமடைந்தோர் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை 265. இவர்களுக்கு வழித்துணையாக வந்த உறவினர்களின் எண்ணிக்கை 175. இவர்களில் இருவர் வரும்போது உயிரிழந்தனர்.
 
01. ஹரிஹரன், கிளிநொச்சி, (வயது 23),
02. ஏ. வித்தியா, முள்ளியவாய்க்கால் (வயது 23),
03. கோவழகி, முள்ளியவாய்க்கால், (23 வயது),
04. பிரசன்னா, பொக்கணை, (வயது 11),
05. பி. பிரேமலதா, பொக்கணை, (வயது 08),
06. பி. கௌரி, அம்பலன்பொக்கணை, (வயது 43),
07. பி. நவநீதேன், மாத்தளன், (வயது 27),
08. என். அரசி, மாத்தளன், (வயது 26),
09. சடாட்சரலட்சுமி, கிளிநொச்சி, (வயது 60),
10. எம். அழகம்மா, ஒட்டுசுட்டான், (வயது 54),
11. மாஸ்டர் கோகுலன், கிளிநொச்சி, (வயது 08),
12. எம். மகாதேவன், முள்ளியவாய்க்கால், (வயது 57),
13. கஜிதரன், வலையர்மடம், (வயது 26),
14. கலைச்செல்வி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 36),
15. ஜீவானந்தன், புதுக்குடியிருப்பு, (வயது 37),
16. கலைச்செல்வன், புதுக்குடியிருப்பு, (வயது 1.5),
17. ராமு துரைராஜா, பூநகரி, (வயது 55),
18. ரி. சாந்தகுமாரி, குமுழமுனை, (வயது 47),
19. எஸ். செல்வராணி, ஒட்டுசுட்டான், (வயது 63),
20. தர்மகலாதேவி, குமுழமுனை, (வயது 57),
21. பூவரசன், பூநகரி, (வயது 02),
22. ரி. கவிதா, பூநகரி, (வயது 26),
23. பவானி, மல்லாவி, (வயது 25),
24. அனுஷியா, மல்லாவி, (வயது 04),
25. பெயர் தரப்படவில்லை.
26. சிவானி, கிளிநொச்சி, (வயது 48),
27. அகிலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 40),
28. சிவமுகா, பூநகரி, (வயது 1.5),
29. பெருமகை, உடையார்கட்டு, (வயது 62),
30. வை. ஹரிஹரன், உடையார்கட்டு (வயது 26),
31. வைத்திலிங்கம், புங்குடுதீவு,
32. ஈ. சரஸ்வதி, (வயது 60),
33. சுதர்சன், இரணைப்பாலை, (வயது 27),
34. சோதிநாதன், இரணைப்பாலை, (வயது 69),
35. விக்னேஸ்வரன், முரசுமோட்டை, (வயது 59),
36. ஜே. சாஜாய், முரசுமோட்டை, (வயது 01),
37. வசந்தகுமாரி, முரசுமோட்டை (வயது 37),
38. புருசோத்துமன், நெடுங்கேணி, (வயது 06),
39. ஆர். ராஜேந்திரன், நெடுங்கேணி, (வயது 30),
40. அவசர சிசிச்சைப்பிரிவில்.
41. பிரசாந்தி, சிவபுரம், (வயது 16),
42. எஸ். கோபிகா, புதுக்குடியிருப்பு, (வயது 21),
43. சபாரத்தினம், கிளிநொச்சி, (வயது 44)
44. அமுதாஜினி, கிளிநொச்சி, (வயது 19),
45. பி. முருகையா, கிளிநொச்சி, (வயது 58),
46. பி.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது 53),
47. தில்லைநாதன், துணுக்காய், (வயது 63),
48. ரி. தங்கம்மா, கிளிநொச்சி, (வயது 61),
49. திவ்வியன், கிளிநொச்சி, (வயது 04),
50. கஜந்தினி, கிளிநொச்சி, (வயது 25),
51. சுபாஷினி, பாலமுனை (வயது 30),
52. சுலக்ஷனா, பாலமுனை, (வயது 18),
53. மதுஷா, பாலமுனை, (வயது பத்து மாதம்),
54. கேதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 30),
55. பிரியங்கா, பாலமோட்டை, (வயது 07),
56. ரத்தினம், பாலமோட்டை, (வயது 60),
57. சுபாஷினி, பாலமோட்டை, (வயது 30),
58. எம். ரமேஷ், கிளிநொச்சி, (வயது 25),
59. கே. சந்தனம், கிளிநொச்சி, (வயது 62),
60. விஜேகுமார், மாத்தளன், (வயது 32),
61. கனகதேவி, பரந்தன், (வயது 32),
62. உகதீஸ், பரந்தன், (4 மாதம்),
63. நாகபூஷனி, பொக்கணை, (வயது 49),
64. வி. ரஞ்சன், (வயது 12),
65. கீதரூபா, கிளிநொச்சி, (வயது 23),
66. பார்வதி, கிளிநொச்சி, (வயது 64),
67. சுப்பையா, கிளிநொச்சி, (வயது 65),
68. எஸ். சிவானந்தனி, நெடுங்குளம், (வயது 36),
69. வேலு, கிளிநொச்சி, (வயது 69),
70. கே. மயில்வாகனம், முள்ளியவளை, (வயது 60),
71. செல்வநாயகம், முள்ளிக்குளம், (வயது 53),
72. சுப்பையா, சுதந்திரபுரம், (வயது 65),
73. ஜுடித்ருஷா, மாத்தளன், (வயது 36),
74. பரமேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 63),
75. தினா, புங்குடுதீவு, (வயது 03),
76. மேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 39),
77. பிரவினா, புங்குடுதீவு, (வயது 07),
78. பார்த்தஸ்ரீ, புங்குடுதீவு, (வயது 12),
79. கிட்ணர், கொடிகாமம், (வயது 62),
80. பிரிங்கா, காரைதீவு, (வயது 08),
81. ரஞ்சனி, காரைதீவு, (வயது 27),
82. பிரசிந்தன், நடுகண்ணி, (வயது 10),
83. அனோஜன், நடுங்கண்னி, (வயது 08),
84. குணராஜா, விசுவமடு, (வயது 52),
85. வீரசிங்கம், மூங்கிலாறு, (வயது 56),
86. தவமணி, பயிரத்தம்பண்ணை, (வயது 59),
87. மாருதரஞ்சிதம், நடுகண்ணி, (வயது 87),
88. தனுஷியா, யாழ்நகர், (வயது07),
89. பரமேஸ்வரி, புத்தளம், (வயது 33),
90. தயாளன், யாழ்நகர், (வயது 32),
91. காத்தமுத்து, நெடுங்கேணி, (வயது 72),
92. திவாந்திரன், சுதந்திரபுரம், (வயது 63),
93. ஏ. தயாகரன், துணுக்காய், (வயது 30),
94. வண்ணுவன், பாலமோட்டை, (வயது 03),
95. ஜெயசீலன், பாலமோட்டை, (வயது 30),
96. டின்னோ, மாத்தளன், (வயது 02),
97. அம்ஷா, யாழ்ப்பாணம்,
98. செல்வரஞ்சினி, மாத்தளன், (வயது 25),
99. குணநாயகி, உடையார்கட்டு, (வயது 48),
100. சசிகுமார், பாலமோட்டை, (வயது 32),
101. ராமதாஸ், கிளிநொச்சி, (வயது 45),
102. பிரிங்ககா, பாலமடு, (வயது 10),
103. மரியாயி, கிளிநொச்சி, (வயது 60),
104. ரட்னேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 63),
105. சசிரேகா, முரசுமோட்டை, (வயது 25),
106. சபாபதிப்பிள்ளை, முள்ளியவளை (வயது 84),
107. ராதிகா, மாத்தளன், (வயது 30),
108. ஜீவிதா, நெடுங்கேணி, (வயது 14),
109. வளர்மதி, திருகோணமலை, (வயது 11),
110. மதுஷா, திருகோணமலை, (வயது 08),
111. ஜெனோட்ராஜா, திருமலை, (வயது 23),
112. மலர், திருகோணமலை, (வயது 33),
113. மதுஜா, திருகோணமலை, (வயது 03),
114. கமில்டன், கிளிநொச்சி, (வயது 13),
115. சரஸ்வதி, கிளிநொச்சி, (வயது 53),
116. சுந்தரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 50),
117. கேதீஸ்வரநாயகி, நாச்சிக்குடா, (வயது 39),
118. இனியவன், நாச்சிக்குடா, (வயது 01),
119. எம். மதுராஜ், வள்ளானை, (வயது 03),
120. சிந்துஜா, வள்ளானை, (வயது 08),
121. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
122. அருட்செல்வம், வலையர்மடம், (வயது 30),
123. வி. அரவானன், வலையர்மடம், (வயது 1.5),
124. உவனேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 24),
125. தாரனிக்கா, கிளிநொச்சி, (வயது 03),
126. நகுலேஸ்வரன், பூநகரி, (வயது 24),
127. எஸ். பூங்காவனம், யாழ்நகர், (வயது 63),
128. ஜெயசிங்கம், யாழ்ப்பாணம், குருநகர், (வயது 37),
129. எஸ். பத்தினிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 80),
130. மரியதாஸ், கிளிநொச்சி, (வயது 61),
131. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
132. மாரியம்மா, கிளிநொச்சி, (வயது 82),
133. குளநாயகம், மன்னார், (வயது 52),
134. சம்புலிக்குசும், முல்லைத்தீவு, (வயது 42),
135. சர்மிலா, மணல்குடியிருப்பு, (வயது 23),
136. சதுர்ஷன், மணல்குடியிருப்பு, (வயது 03),
137. ஜெ. செல்வராணி, உடையார்கட்டு, (வயது 53),
138. ஜெயமலர், முள்ளியவளை, (வயது 28),
139. புலேந்திரன், முள்ளியவளை, (வயது 64),
140. வி.கருஜன், கிளிநொச்சி, (வயது 13),
141. நிஷாந்தினி, யாழ்நகர், (வயது 12),
142. வி. நிதுஷா, கிளிநொச்சி, (வயது 08),
143. துஷாந்தி, கிளிநொச்சி, (வயது 05),
144. சிந்துஜன், கிளிநொச்சி, (வயது 09),
145. பேரழகி, கிளிநொச்சி, (வயது 30),
146. ஜெயதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 45),
147. தீபன், யாழ்ப்பாணம், (வயது 23),
148. ரி. காசிதா, துணுக்காய், (வயது 26),
149. துவாரகா, துணுக்காய், (வயது 4.5),
150. எஸ். பொன்னம்மா, வட்டக்கச்சி, (வயது 57),
151. வாசலிங்கம், மாங்குளம், (வயது 51),
152. கே. ராஜா, கைவேலி, (வயது 65),
153. லேதிஸ்லெஸ், கிளிநொச்சி, (வயது 74),
154. சுப்பிரமணியம், மன்னார், (வயது 60),
155. மேரிஅக்னா, மணல்காடு, (வயது 23),
156. கனகி, பாலமடு, (வயது 80),
157. சாந்தபுஷ்பம், கரவெட்டி, (வயது 50),
158. கோபிதன், கரவெட்டி, (வயது 06),
159. அனிஷன், மாத்தளன், (வயது 1.5),
160. கோமதி, மாத்தளன், (வயது 30),
161. கல்யாணி, மாத்தளன், (வயது 50),
162. சாந்தன், மருதநகர், (வயது 26),
163. சிவரஞ்சினி, தர்மபுரம், (வயது 32),
164. திவாகரன், தர்மபுரம், (வயது 3.5),
165. கமல்ராஜ், தர்மபுரம், (வயது 09),
166. புஸ்பவதி, கிளிநொச்சி, (வயது 47),
167. எஸ். முத்துலிங்கம், நெடுங்கேணி, (வயது 55),
168. எம்.ரஜீவன், விசுவவடு, (வயது 09),
169. ரஜீதா, விசுவமடு, (வயது 26),
170. அபிஷேக், கிளிநொச்சி, (வயது 1.5),
171. திருமுகம், கிளிநொச்சி, (வயது 26),
172. ஆர். துண்டியம்மா, முல்லைத்தீவு, (வயது 54),
173. சத்ரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 38),
174. சத்தியசீலன், முல்லைத்தீவு, (வயது 02),
175. மல்லிகா, தர்மபுரம், (வயது 38),
176. ஜசிவன், தர்மபுரம், (வயது 07),
177. வி. புலந்தன், கிளிநொச்சி, (வயது 59),
178. வி. ஆறுமுகம், முல்லைத்தீவு, (வயது 73),
179. ஆர். கோபிநாத், கிளிநொச்சி, (வயது 10),
180. சஞ்சீவன், கிளிநொச்சி, (வயது 08),
181. ராஜேந்திரன், கிளிநொச்சி, (வயது 50),
182. சின்னத்தம்பி, முள்ளியவளை, (வயது 69),
183. சகுந்தலா, கிளிநொச்சி, (வயது 36),
184. தசாந்தன், கிளிநொச்சி, (வயது 04),
185. சுகந்தி, கிளிநொச்சி, (வயது 25).

“சிறுவர் படங்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை’

sri-lanka-elections.jpgதேர்தல் பிரசாரத்தின்போது சிறுவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுவர்களின் புகைப்படங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது சிறுவர்களின் உரிமைமை மீறும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி உரிமையாளர்கள் மீதும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாணசபைத் தேர்தலில் பிரசார சுவரொட்டிகளில் சிறுவர்கள்,முதியோர்களுடன் அரசியல்வாதிகள் நிற்பது தொடர்பான படங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் சிறுவர்களின் புகைப்படங்களை அரசியல்வாதிகள் தமது பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பொருட்கள் விநியோகம்

sri-lanka-red-cross.jpgவவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளதோடு மேலும் பொருட்களை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என இலங்கை செஞ்சிலுவைச்சங்க வவுனியா கிளையின் பொருளாளர் கே. தனபாலசிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;

பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன், எமது தொண்டர்கள் 50 பேரை பொது அரசினர் வைத்தியசாலையில் 24 மணிநேர மனிதாபிமான பணிகளில் அமர்த்தியுள்ளோம். காயங்களுடன் வந்துள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை எமது தொண்டர்கள் வழங்கிவருகின்றனர்.

சைவப்பிரகாச வித்தியாசாலை, காமினி வித்தியாசாலை நலன்புரி நிலையங்களில் இரவு நேரத்தில் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை நோயாளர்கள் அவசர தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடியும்.

மேலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் வழங்கும் மனிதாபிமான பணிகளை அறிந்துகொண்ட திருமலை கிளை 5 இலட்சம் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட கிளை 3 இலட்சம் ரூபாவினையும், எமக்கு அனுப்பிவைத்துள்ளது. குருநாகல் கிளையினர் 2 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட 20 நீர்த்தாங்கிகளை அனுப்பியுள்ளனர். 3 இலட்சம் ரூபா பணம் கனடிய செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக எமக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியானது நலன்புரிநிலைய மக்களுக்கு உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படும்.

தலைமை அலுவலகத்திலிருந்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட இரண்டு தண்ணீர் பௌசர்கள் கிடைத்துள்ளன. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்றார்.

வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத அவலம் -செஞ்சிலுவைச்சங்கம்

trico.gifமோதல் நடைபெறுகின்ற வன்னிப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதன் காரணமாக அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது இதனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது குடும்பங்களை விட்டு பிரிய வேண்டிய இந்த நிலைமையின் போது நாட்டின் வேறுபகுதிகளில் வாழும் தமது உறவுகளுடனோ அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடனோ எவ்வித தொடர்பையும் அம்மக்கள் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இம்மக்கள் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடன் திரும்பவும் இணைந்து வாழ்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென முதலுதவி சிகிச்சை, நடமாடும் அம்புலன்ஸ் சேவை, உடல் உள விருத்திக்கான சமூக புனர்வாழ்வுத்திட்டங்கள் மற்றும் நடமாடும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பரில் இருந்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பான சூழலில் இம்மக்கள் வாழ்வதற்கான உரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், போதிய தங்குமிட வசதிகள், சத்துணவு மற்றும் சுகாதார அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அத்துடன், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.

அமைச்சர் உடல்நிலை தேறி வருகிறார்

mahinda-wijayaratna.jpg அக்குரஸ்ஸ கொடபிட்டிய தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த தபால் தந்தித் தொலைத் தொடர்பு அமைச்சர் மஹிந்த விஜேசேகர உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்ஹ தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டொக்டர் மேலும் தெரிவித்தார்.