தேர்தல் பிரசாரத்தின்போது சிறுவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுவர்களின் புகைப்படங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது சிறுவர்களின் உரிமைமை மீறும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி உரிமையாளர்கள் மீதும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேல்மாகாணசபைத் தேர்தலில் பிரசார சுவரொட்டிகளில் சிறுவர்கள்,முதியோர்களுடன் அரசியல்வாதிகள் நிற்பது தொடர்பான படங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் சிறுவர்களின் புகைப்படங்களை அரசியல்வாதிகள் தமது பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.