யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் நேற்று (15.03.2009) இரவு 8.30 மணியளவில் இராணுவத்தினர் பயணித்த உழவு இயந்திரம் மீது புலிகள் கிரனைட் தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரியவருகின்றது. குறித்த வீதியூடாக உணவு எடுத்துச் சென்ற இராணுவத்தினர் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாகவும் எனினும் இதன்போது காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.