எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கையில் மனிதாபிமானப் பேரவலம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

vanni0002.jpgகற்பனை செய்ய முடியாத அளவில் மனிதாபிமானப் பேரவலத்தை இலங்கையில் உள்ள தமது ஊழியர்கள் கண்ணுற்று வருகிறார்கள் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணிகளின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக தமது பணிகள் தடைபட்டு நிற்பதை தங்களால் ஏற்கமுடியவில்லை என்று செஞ்சிலுவைச் சங்க செயல் இயக்குநர் பியெர் கிராஹென்பூல் கூறினார்.

தடையின்றி சென்றுவருவதற்கான அனுமதியும் பாதுகாப்பும் தங்களுக்கு கிடைக்கும் என்றால் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் எழலாம்: பிரிட்டன் எச்சரிக்கை

mullivaikaal-01.jpgஇலங்கையில் யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களுக்கு எதிரான வன்முறையின் விளைவாக இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் செய்ததாக எழும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தின்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என பி.பி.சி இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிவிலியன்கள் கொல்லப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார தடைகள் மற்றும் இதர தடைகளை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நிலைபாட்டை பிரிட்டனும் சர்வதேச சமூகமும் எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த விவாதத்தின்போது அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியக் கடனை வழங்க இது தருணமல்ல: ஹிலாரி கிளின்டன்

obama-hilari.jpgசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான உரிய காலம் இதுவல்ல என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு சரியான தீர்வு ஒன்று முன்னெடுக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையை வழங்குவதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு பாரியளவிலான நிதி உதவியை தற்போது வழங்கக் கூடாது எனவும் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தை உடனடியாக நிறுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை வழங்குவதில் அமெரிக்க முக்கிய பங்காற்றி வருகின்றது. அமெரிக்காவின் அனுமதியின்றி சர்வதேச நாணய நிதியம் எந்த ஒரு நாட்டுக்கும் கடன் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் மீட்பு

mullivaikaal-02.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை  விடுவிக்கும் 2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் நேற்று 14ஆம் திகதி மீட்கப்பட்டதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
 
நேற்றைய தினம் 59ஆம் படைப்பிரிவினரிடம்  3250 சிவிலியன்களும்,  58ஆம் படைப்பிரிவினரிடம்  206 சிவிலியன்களும் 53ஆம் படைப்பிரிவினரிடம்  309 சிவிலியன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
அதே நேரம் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை 122,128 சிவிலியன்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட 55 இலங்கையர் இந்தோனேஷியாவில் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 55 இலங்கையர்கள் இந்தோனேசியாவின் மேற்குக் கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் வக்கு மாகாண கரைப்பகுதியான ஆச்சேயிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் சேதமடைந்த மரப்படகொன்றில் இவ் 55 பேரையும் மீனவர்கள் பார்த்துள்ளனர்.

மீட்கப்பட்ட 55 பேரும் இரு கிலோமீற்றர்கள் நீந்தி வந்தமையால் சோர்வடைந்து காணப்படுவதாக தெரிவித்த ஆசே நகன் ரயா பொலிஸ் தலைமை அதிகாரி அரிச பியான்டோ இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக அவர்கள் செல்வதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்தர்.

இக்குழுவினர் இலங்கையை விட்டு மே மாதம் 2 ம் திகதி புறப்பட்டுள்ளனர். மே 8இல் மலேசியாவில் தங்கியுள்ளனர். கைதான 55 பேரும் சுமார் 25-30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தங்களுடன் வந்த சிலர் காணாமல் போய்விட்டதாக இந்த இலங்கையர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சர்

maithripalasirisena.jpgபதில் பாதுகாப்பு அமைச்சராக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநலசேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக அவரது அமைச்சு அறிவித்துள்ளது.

ஜேர்தானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நாட்டுக்கு திரும்பிவரும் வரையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமைபுரிவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

முதலாம் தரத்துக்கான மாணவர் அனுமதியில் மாற்றம்

susilpremjayanth.jpgஅடுத்த வருடம் முதல் அரசாங்கப்பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவே சமர்பித்திருந்தார்.

கடந்த வருட புது மாணவர் அனுமதியின் போது பாடசாலைக்கு அருகில் உள்ளவர்களுக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதையடுத்தே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. அதன்படி விண்ணப்பிக்கும் பாடசாலைக்கு அருகில் உள்ள மாணவர்களுக்கு 50 புள்ளிகள் பழைய மாணவரின் பிள்ளை என்றால் 25 புள்ளிகள் சகோதரர்கள் கற்கிறார்கள் என்றால்  15 புள்ளிகள் மற்றும் இடமாற்றம் பெற்ற அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அரச ஊழியர்கள்மற்றும் கல்வித்துறையைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள் என்றால் 10 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.

700 கட்டடங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்க மாற்று நடவடிக்கை

பேஸ்லைன் வீதியின் மூன்றாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 700 கட்டடங்களை அகற்றவேண்டியுள்ளதால்; அதனைத்தவிர்ப்பதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

மாற்று நடவடிக்கையாக கொழும்பு ஹொரனை வீதி அடங்கலாக  ஹைலெவல் வீதியில் கிருலப்பனை முதல் காலி வீதியின் இரத்மலானை வரையிலான பகுதி மறுசீரமைக்கப்படவுள்ளது. இதேவேளை இத்திட்டத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படவுள்ளன.

பிரதமர் ரத்ணசிறி – கென்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை

premier_with_unkn.jpgகென்யா வுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க அந்நாட்டு ஜனாதிபதி எம்வய் கிபகியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கென்ய ஜனாதிபதியின் அழைப்பையேற்று அங்கு சென்றுள்ள பிரதமருக்கும் கென்ய ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு அந்நாட்டின் தலைநகரான நைரோபியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.

இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐந்து நாடுகளைக் கொண்ட கிழக்கு ஆபிரிக்க சமூகத்தில் கென்யா மிக முக்கியமான ஒரு நாடாகும். பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள இலங்கையும் கென்யாவும் 1970ஆம் ஆண்டிலிருந்தே இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேசியப்பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

susilpremjayanth.jpgதேசியப் பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி 86 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேசிய கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் விதி முறைகளுக்கு ஏற்பவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.