புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை விடுவிக்கும் 2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் நேற்று 14ஆம் திகதி மீட்கப்பட்டதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 59ஆம் படைப்பிரிவினரிடம் 3250 சிவிலியன்களும், 58ஆம் படைப்பிரிவினரிடம் 206 சிவிலியன்களும் 53ஆம் படைப்பிரிவினரிடம் 309 சிவிலியன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை 122,128 சிவிலியன்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.