அடுத்த வருடம் முதல் அரசாங்கப்பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவே சமர்பித்திருந்தார்.
கடந்த வருட புது மாணவர் அனுமதியின் போது பாடசாலைக்கு அருகில் உள்ளவர்களுக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதையடுத்தே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. அதன்படி விண்ணப்பிக்கும் பாடசாலைக்கு அருகில் உள்ள மாணவர்களுக்கு 50 புள்ளிகள் பழைய மாணவரின் பிள்ளை என்றால் 25 புள்ளிகள் சகோதரர்கள் கற்கிறார்கள் என்றால் 15 புள்ளிகள் மற்றும் இடமாற்றம் பெற்ற அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அரச ஊழியர்கள்மற்றும் கல்வித்துறையைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள் என்றால் 10 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.