பேஸ்லைன் வீதியின் மூன்றாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 700 கட்டடங்களை அகற்றவேண்டியுள்ளதால்; அதனைத்தவிர்ப்பதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
மாற்று நடவடிக்கையாக கொழும்பு ஹொரனை வீதி அடங்கலாக ஹைலெவல் வீதியில் கிருலப்பனை முதல் காலி வீதியின் இரத்மலானை வரையிலான பகுதி மறுசீரமைக்கப்படவுள்ளது. இதேவேளை இத்திட்டத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படவுள்ளன.