கற்பனை செய்ய முடியாத அளவில் மனிதாபிமானப் பேரவலத்தை இலங்கையில் உள்ள தமது ஊழியர்கள் கண்ணுற்று வருகிறார்கள் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணிகளின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக தமது பணிகள் தடைபட்டு நிற்பதை தங்களால் ஏற்கமுடியவில்லை என்று செஞ்சிலுவைச் சங்க செயல் இயக்குநர் பியெர் கிராஹென்பூல் கூறினார்.
தடையின்றி சென்றுவருவதற்கான அனுமதியும் பாதுகாப்பும் தங்களுக்கு கிடைக்கும் என்றால் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.