இலங் கையில் தனி ஈழம் என்ற கருத்தை இனிவரும் காலங்களில் நாட்டில் அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். புலிகளின் சர்வதேச தொடர்பாடல்களுக்கு பொறுப்பான குமாரன் பத்மநாதன் சர்வதேச தமிழீழ அரசு ஒன்றை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் காரணமாக பல நாடுகள் பிளவு பட்டுள்ளன. எனினும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் அவ்வாறானதொரு சாத்தியம் அற்றுப் போயுள்ளது. இதனை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
நியுசிலாந் துடனான இருபது 20 உலகக் கிண்ண “சுப்பர் 8′ போட்டியில் 48 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி “எப்’ பிரிவிலிருந்து அரையிறுதிக்கு இலகுவாகத் தெரிவாகியது. இத் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடையவில்லை.
நொட்டின் ஹாமில் “எப்’ பிரிவுக்காக இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கையணி டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய நியுசிலாந்து அணிக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அதே நேரம் “எப்’ பிரிவுக்காக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.
இலங்கை
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/
டிஎம் தில்ஷான் பி. பிபி மெக்குல்லம் ப. டிஎல் வெட்டோரி 48 37 5 0
எஸ்டி ஜெயசூர்யா பி. ஆர்எல் டெய்லர் ப. நாதன் மெக்கல்லம் 0 1 0 0
எல்பிசி சில்வா பி. ஜேடிபி ஓரம் ப. கெய்த் மில்ஸ் 13 10 2 0
கேசி சங்கக்காரா பி. எஸ்பி ஸ்டைரிஸ் ப. டிஎல் வெட்டோரி 35 35 3 0
டிபிஎம்டி ஜெயவர்தனே அவுட்டில்லை 41 29 6 1
துஷார் இம்ரான் எல் பி டபுள்யூ ஐஜி.பட்லர் 8 5 1 0
ஆங்லோ மேத்யூஸ் அவுட்டில்லை 6 4 0 0
மொத்தம்: 158/5 (20.0) | ரன் விகிதம்: 7.90 | உதிரிகள்: 7 (பைஸ்- 1, வைடுகள்- 4, நோ பால்- 1, லெக் பைஸ்- 1, அபராதம் – 0)
விக்கெட் வீழ்ச்சி
1-3(0.3), 2-25(3.5), 3-87(11.3), 4-137(17.4), 5-147(18.5)
(பந்து வீச்சாளர் /ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால்)
நாதன் மெக்கல்லம் 4.0 0 22 1 0 0
கெய்த் மில்ஸ் 4.0 0 41 1 1 0
ஜேடிபி ஓரம் 4.0 0 23 0 0 0
ஐஜி.பட்லர் 3.0 0 29 1 0 0
டிஎல் வெட்டோரி 4.0 0 32 2 2 1
எஸ்பி ஸ்டைரிஸ் 1.0 0 9 0 0 0
நியூ ஸீலாந்து
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/)
பிபி மெக்குல்லம் பி. துஷார் இம்ரான் ப. இசுரு உதனா 10 12 2 0
ஏ.ஜெ. ரெட்மாண்ட் பி. எல்பிசி சில்வா ப. எஸ்எல் மலிங்கா 23 13 3 1
எம்.ஜே.குப்டில் பி. ஆங்லோ மேத்யூஸ் ப. எஸ்டி ஜெயசூர்யா 43 34 4 1
ஆர்எல் டெய்லர் ஸ்ட. கேசி சங்கக்காரா ப. அஜந்தா மென்டிஸ் 8 8 1 0
எஸ்பி ஸ்டைரிஸ் போல்டு அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
ஜேடிபி ஓரம் போல்டு இசுரு உதனா 7 12 0 0
பி.டி.மெக்லாஷன் பி. துஷார் இம்ரான் ப. அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
நாதன் மெக்கல்லம் ரன் அவுட் எம் முரளிதரன் 2 4 0 0
டிஎல் வெட்டோரி பி. எஸ்எல் மலிங்கா ப. எம் முரளிதரன் 3 5 0 0
கெய்த் மில்ஸ் ரன் அவுட் டிஎம் தில்ஷான் 4 6 1 0
ஐஜி.பட்லர் அவுட்டில்லை 2 2 0 0
மொத்தம்: 110/10 (17.0) | ரன் விகிதம்: 6.47 | உதிரிகள்: 4 (பைஸ்- 0, வைடுகள்- 3, நோ பால்- 0, லெக் பைஸ்- 1, அபராதம் – 0)
விக்கெட் வீழ்ச்சி
1-30 (2.6), 2-39 (4.5), 3-64 (8.1), 4-66 (8.4), 5-93 (12.6), 6-95 (13.4), 7-98 (14.3), 8-100 (15.1), 9-102 (15.4), 10-110 (16.6)
(பந்து வீச்சாளர்/ ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால் )
இசுரு உதனா 3.0 0 17 2 0 0
எஸ்டி ஜெயசூர்யா 3.0 0 28 1 0 0
எம் முரளிதரன் 4.0 0 18 1 0 0
எஸ்எல் மலிங்கா 3.0 0 26 1 2 0
அஜந்தா மென்டிஸ் 3.0 0 9 3 0 0
டிஎம் தில்ஷான் 1.0 0 11 0 1 0
ஆட்ட நாயகன் அஜந்தா மென்டிஸ்
இங்கி லாந்தில் நடக்கும் பெண்கள் உலக கோப்பை டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மழை காரணமாக போட்டி18 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி18 ஓவரில் 6 விக்கெட் இழப்பற்கு 94 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா அணி சார்பில் பூனம் ராவுட் 40 பந்துகளில் 30 ரன்களும், மிதாலி ராஜ் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது. தென் மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.
குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ள நகரங்களில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மதுரை நகரமும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் ஏற்கனவே உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் மூலம் வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் மற்றும் வட மாகாண ஆளுநர் டிக்சன் தெல ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்துக்குட்பட்ட சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
புலிகளுக்கு பெருமளவு மருந்துப் பொருட்களை வழங்கியதாக நம்பம்படும் மருந்தக உரிமையாளர் ஒருவர் கொழும்பு, வெள்ளவத்த பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.
வெள்ளவத்த, பெரேரா ஒழுங்கை எனும் முகவரியில் இயங்கி வரும் நீலம் மருந்தகத்தின் உரிமையாளரான செல்வநாயகம் பாலசந்திரன் எனும் இந்த சந்தேக நபரை பயங்கரவாத புலணாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர்.
45 வயதான இவர் பதிவு செய்யப்பட்டுள்ள தமது மருந்தகத்தினூடாக பல மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை புலிகளுக்கு வழங்கியுள்ளதோடு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்களிடமிருந்தும் பெருமளவு மருந்துகளைக் கொள்வனவு செய்து புலிகளுக்கு விநியோகித்திருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் கைது செய்யப்படும்போது புலிகளுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 32 வகையான மருந்துப் பொருட்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.புலிகளது மருத்துவப் பிரிவின் முக்கிய ஆதரவாளராக நம்பப்படும் இவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு மியன்மார் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 14ஆம் திகதி மியன்மாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அந்நாட்டின் தலைவர், பிரதமர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார,வர்த்தக மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இலங்கையிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டைகள் காணாமல் போனவர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடமாடும் சேவை ஒன்றை நடத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக மொனறாகலை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டமாக பதுளை மாவட்டத்தில் நடமாடும் சேவையை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி அந்த மாவட்டத்தில் நாளை முதல் எதிவரும் 21 ஆம் திகதி வரை இந்தச் சேவை இடம்பெறவுள்ளது. ஹல்துமுல்லை மற்றும் ஹாலிஎல பிரதேச செயளக காரியாலயங்களிலும் உப காரியாலயத்திலும் நாளை நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
ஹப்புத்தலை மற்று வெலிமட பிரதேச செயலக காரியாலயங்களிலும் ஹப்புத்தலை நகர சபையிலும் பொரலந்த விவசாய மத்திய நிலையத்திலும் இச்சேவை நாளை மறுதினமான 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளை மற்றும் ஊவாபரணகம பிரதேச செயலக அலுவலகங்களிலும் அம்பகஸ்தென்ன விவசாய மத்திய நிலையத்திலும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
பஸ்ஸர பதுளை லுணுகல தோட்டங்களுக்காக பஸ்ஸர கரவனல்ல வித்தியாலயம் மற்றும் லுணுகல பிரதேச செயலக அலுவலகம் ஆகியவற்றில 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் சோரணாதொட்ட பிரதேச செயலக அலுவலகம் மற்றும் கந்தேகெதர விகாரையிலும் இச்சேவை இடம்பெறவுள்ளது.
பதுளை மற்றும் கந்தேஹெட்டிய பகுதிகளுக்கான விநியோகம் எதிர்வரும் 21 ஆம் திகதி பதுளை பாரதி வித்தியாலயம், பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் கலஉட நூராணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளது.(
கொரிய குடியரசைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சோய் யொங் மற்றும் டே ச்சியொங் எனும் பெயர்களைக் கொண்ட கொரிய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல்களை இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் சொய் கீ சுல்லுடன் கொழும்பில் உள்ள 200க்கும் மேற்பட்ட தென்கொரிய மக்கள் நேற்று கொழும்பு துறைமுகத்துக்குச் சென்று வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கப்பல்களை வரவேற்கும் வைபவத்தின்போது இலங்கைக் கடற்படையினர் 21 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தி இந்தக் கப்பல்களை வரவேற்றனர்.
இக்கப்பல்களில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு விநியோகிப்பதற்காக நிவாரணப் பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. தென்கொரியாவினால் நட்புறவு அடிப்படையில் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பொருட்களை கப்பல்களிலிருந்து இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மூன்று நாட்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இவ்விரு கப்பல்கள்களும் எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளன. இக்கப்பல்கலில் வந்துள்ள தென்கொரிய கடற்படையினருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையில் கப்பல் தரித்து நிற்கும் 3 நாட்களும் நட்புறவு ரீதியான விளையாட்டுப் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இருபது- 20 உலகக் கிண்ண போட்டியின் தீர்க்கமான “சுப்பர் 8′ ஆட்டத்தில் நியூஸிலாந்து இலங்கை அணிகள் இன்று மோதவுள்ளன.
நொட்டின் ஹாமில் “எப்’ பிரிவுக்காக இன்று இலங்கை நேரப்படி ஆறு மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் இலங்கையணி வென்றால் நேரடியாக அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும்.
நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் ரண்டேட் முறையில் நியூஸிலாந்தா அல்லது இலங்கையா “எப்’ பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக்கப்படும்.
அதே நேரம் “எப்’ பிரிவுக்காக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.