இலங் கையில் தனி ஈழம் என்ற கருத்தை இனிவரும் காலங்களில் நாட்டில் அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். புலிகளின் சர்வதேச தொடர்பாடல்களுக்கு பொறுப்பான குமாரன் பத்மநாதன் சர்வதேச தமிழீழ அரசு ஒன்றை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் காரணமாக பல நாடுகள் பிளவு பட்டுள்ளன. எனினும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் அவ்வாறானதொரு சாத்தியம் அற்றுப் போயுள்ளது. இதனை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.
msri
தனிஈழத்தை அனுமதிப்பது> தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க> தமிழமக்கள தங்கள சுயநிர்னய உரிமையை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்! தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைப்போரானது> தற்காலிக தரிப்பில் உள்ளது! அது எதிர்காலத்தில் புதுப் பரிமாணம் பெற்று முன்னேறும்!
palli.
//தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைப்போரானது> தற்காலிக தரிப்பில் உள்ளது:://
இதுவரை பங்கரில் எமது தேசிய தலைவர் குடும்பம் நடத்தினார்; இப்போது உரிமை போர் பங்கரில் ஓய்வு கொள்ளுகுதோ?? விடுதலை என்பது தறுதலையாகி; அதுவே இன்று தறுதலைகள் பேசும் விடுதலையாய் போச்சு.
msri
பல்லி
தறுதலைகளின் சாத்தியமற்ற (புலன் பெயர்ந்த தமிழ்ஈழம்>5-ம் 6-ம்; கட்டப்போர்) வெற்று அரசியல் பெச்சுக்களை விடுவோம்! சாத்தியமானவற்றை பற்றி கதைப்போம்!
மாயா
இன்னும் 2 வருடங்களுக்குப் பின் உரிமைப் போரா? அப்படியென்றால் என்ன என்று கேட்கும் காலம் உருவாகும்.
தென் பகுதி வாழ் யாழ் தமிழரிடம், புலிகளின் அழிவு தமக்கு பாதுகாப்பில்லா நிலையை உருவாக்கியுள்ளளது என்ற கருத்தாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. போருக்கு பயந்தும், புலிகளுக்கு பயந்தும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு இவர்கள் வந்தாலும் தமது சொத்துகளை பாதுகாப்பதற்காக புலி ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள். தவிர இவர்கள் தமிழீழத்தை எதிர்த்தவர்களுமல்ல என்பதை மறக்கலாகாது. பெரும்பாலான வடக்கு கிழக்கை தவிர்ந்த ஏனைய பகுதி மக்களும் தமிழீழத்துக்கு எதிரானவர்களாக இருந்ததில்லை. அவர்களும் ஏதோ ஒருவகையில் தமிழ்நாட்டுத் தமிழர் போல் தமிழீழத்தை ஆதரித்ததால் புலிகளை ஆதரித்தவர்கள். புலிகளது அழிவுக்குப் பின் இவர்களது அச்சத்துக்கு காரணம் அரசல்ல, புலிகளில் இருந்து பிரிந்து அரசோடு இருப்பவர்கள் மற்றும் மாற்று இயக்கங்கள் மேலேயாகும்.
மாற்று இயக்கங்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உதவி செய்வதான போர்வையில் ஏகப்பட்ட ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக முகாமிலிருக்கும் பொது மக்களுக்கு உதவுவதாக வெளிநாட்டிலிருந்து பணம் கறந்து கொண்டு தரகர் வேலைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் பலம் அவர்களது தலைமைகளுக்கு இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. இவற்றை விட பெரிய பிரச்சனையாக அவர்களுக்குள் ஒற்றுமைபட வேண்டும் என்ற போராட்டத்தில் சிதைவுகளை சரிசெய்ய முயல்கின்றனர். இதுவரை ஒற்றுமையாக இருந்தவர்கள் ஒரு சின்னத்துக்காக சின்னாபின்னப்படும் அவலத்தை நம் கண்முண் காணமுடிகிறது. இவர்களது ஒற்றுமை புலிகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்டதானது என்பது உறுதியாகவே தெரிகிறது. இவர்கள் ஒரு போதும் ஒரு சிந்தனைக்குள் ஒற்றுமைப்படப் போவதில்லை. இதுவே இவர்களது பலவீனம். இது அரசுக்கு சாதகமானது.
புலிகள் அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் போதும் அவன் அழியத்தான் வேண்டும் எனும் மனநிலையில் ஒவ்வொரு இயக்கமும் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் ஒவ்வொன்றாக அழிப்பதற்கு புலிகளால் முடிந்தது. அன்று புலிகளுக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்திருந்தால் அந்த மக்களும் புலிகளுக்கு சோடா உடைத்துக் கொடுக்காமல் மாற்று இயக்கத்துக்காக வீதிக்கு இறங்கியிருப்பார்கள். அன்றைய அதே நிலை இன்றும் அடிமனதில் மாறாமல் இருப்பதை இவர்களிடம் பார்க்க முடிகிறது. அரசியல்வாதிகளும் அப்படியேதான் இருக்கிறார்கள். திருந்தியதாக இல்லை. கூத்தமைப்பு புலிகளது பினாமியாக இன்றும் செயல்படுகிறது.
மகிந்த அரசு, ஜேவீபி மற்றும் ஐதேகட்சி போன்றவற்றை மட்டுமல்ல கெலஉருமய போன்ற சிங்கள இனவாத கட்சிகளையே உடைத்து பலவீனப்படுத்தியுள்ள நிலையில் தமிழ் மாற்று அரசியல் மற்றும் இயக்கங்கள் உடைவது தமிழ் ஈழத்தை மட்டுமல்ல தமிழ் உரிமைகளுக்கே பேச முடியாத பலவீனத்தை உருவாக்கும் போது அனைத்து மக்களையும் கவரும் விடயங்களை மகிந்த அரசு முன்னெடுத்து மகிந்த பரம்பரை அரிசியல் தளம் ஒன்றை உருவாக்க வழி வகுக்கும் என்பது புரிகிறது. இங்கே தமிழர் – இஸ்லாமியர் உரிமைகளை மகிந்த அரசு சொல்வது போல் செய்யுமானால் வேறு எந்தவொரு கட்சியும் பதவிக்கு வர வாய்ப்பே இல்லாமல் போகும். கண்டிச் சிங்களவர் ஆதிக்கத்தை உடைத்த பெரும் தலைவராக தென்பகுதி சிங்களவரான மகிந்த திகழ்வார்.
தமிழீழம் என்பதை இலங்கையில் மட்டுமல்ல உலக தமிழரும் நினைக்காதவாறு காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதில் முக்கியமான சிலர் மாட்டினால் புலத்திலும் அதன் தொனி இல்லாமல் போய்விடும்.
nada
புலிகள் அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் போதும் அவன் அழியத்தான் வேண்டும் எனும் மனநிலையில் ஒவ்வொரு இயக்கமும் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் ஒவ்வொன்றாக அழிப்பதற்கு புலிகளால் முடிந்தது. அன்று புலிகளுக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்திருந்தால் அந்த மக்களும் புலிகளுக்கு சோடா உடைத்துக் கொடுக்காமல் மாற்று இயக்கத்துக்காக வீதிக்கு இறங்கியிருப்பார்கள். அன்றைய அதே நிலை இன்றும் அடிமனதில் மாறாமல் இருப்பதை இவர்களிடம் பார்க்க முடிகிறது. அரசியல்வாதிகளும் அப்படியேதான் இருக்கிறார்கள். திருந்தியதாக இல்லை. கூத்தமைப்பு புலிகளது பினாமியாக இன்றும் செயல்படுகிறது.
மாயா சொன்னதை வழிமொழிகின்றேன்