எதிர் வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டைகள் காணாமல் போனவர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடமாடும் சேவை ஒன்றை நடத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக மொனறாகலை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டமாக பதுளை மாவட்டத்தில் நடமாடும் சேவையை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி அந்த மாவட்டத்தில் நாளை முதல் எதிவரும் 21 ஆம் திகதி வரை இந்தச் சேவை இடம்பெறவுள்ளது. ஹல்துமுல்லை மற்றும் ஹாலிஎல பிரதேச செயளக காரியாலயங்களிலும் உப காரியாலயத்திலும் நாளை நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
ஹப்புத்தலை மற்று வெலிமட பிரதேச செயலக காரியாலயங்களிலும் ஹப்புத்தலை நகர சபையிலும் பொரலந்த விவசாய மத்திய நிலையத்திலும் இச்சேவை நாளை மறுதினமான 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளை மற்றும் ஊவாபரணகம பிரதேச செயலக அலுவலகங்களிலும் அம்பகஸ்தென்ன விவசாய மத்திய நிலையத்திலும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
பஸ்ஸர பதுளை லுணுகல தோட்டங்களுக்காக பஸ்ஸர கரவனல்ல வித்தியாலயம் மற்றும் லுணுகல பிரதேச செயலக அலுவலகம் ஆகியவற்றில 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் சோரணாதொட்ட பிரதேச செயலக அலுவலகம் மற்றும் கந்தேகெதர விகாரையிலும் இச்சேவை இடம்பெறவுள்ளது.
பதுளை மற்றும் கந்தேஹெட்டிய பகுதிகளுக்கான விநியோகம் எதிர்வரும் 21 ஆம் திகதி பதுளை பாரதி வித்தியாலயம், பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் கலஉட நூராணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளது.(