எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna-20.jpgஅவசர காலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல என்று தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, புலிகள் பெருந்தொகையான அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு எதிராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பியது கிடையாது. என்றாலும் பயங்கரவாதம் இப்போது ஒழித்துக் கட்டப்பட்டிருக்கின்றது. கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுமார் மூன்று தசாப்தங்களாகப் பின்னடைந்துள்ள பிரதேசங்களை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது. வெற்றிபெற முடியாத திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அபிவிருத்திக்கான சர்வகட்சிக்குழு கூட்டத்தில் அண்மையில் பங்கு பற்றினார்கள். இது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றி இருக்கமாட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.ஒருவர், பிரபாகரன் உண்மையில் கொல்லப்பட்டு விட்டாரா என்று என்னிடம் கேட்டார். அந்தளவுக்கு அவர்கள் பிரபாகனுக்கு பயந்து செயற்படுகிறார்கள்.

அவசரகாலச் சட்டம் முழு நாட்டிலுமே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. மாறாக இது தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கில் மட்டும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. இச்சட்டம் நடைமுறையில் இருப்பதன் பயனாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுகின்றனர்.

இதேவேளை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிழல் அரசாங்கம் என்ற மாயை கே.பி. பரப்பி வருகின்றார். முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கும் புலிகளால் இதனை ஒரு போதும் சாத்தியப்படுத்த முடியாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நிவர்த்திக்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளேன். தமிழ் மக்களின் குறைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி போன்ற தேசிய கட்சியில் இணைந்து செயற்படுவது அவசியம்.

தமிழ் மக்கள் மத்தியில் சுமார் 15 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. இவற்றை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

அதிபர்கள் சுற்றறிக்கைக்கு மாறாக பணம் அறவிட்டால் ஒழுக்காற்று விசாரணை – பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர்

26parliament.jpgசுற்ற றறிக்கைக்கு முரணாக நிதி அறவிட்ட அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கைக்கு ஏற்ப பாடசாலை மாணவர்களிடம் சேவை மற்றும் வசதிக்கட்டணம்  அபிவிருத்திக் கட்டணம் ஆகியவற்றை மட்டுமே அறவிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

சுற்றறறிக்கைக்கு  மாறாக கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களிடம் அதிபர்கள் கட்டணம் ஏதும் அறவிட்டிருந்தால் அவற்றை  திருப்ப ஒப்படைப்தற்கான உத்தரவை நாளை விடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

அபிவிருத்திப் பணிகளில் புனர் வாழ்வளிக்கப்பட்ட சிறுவர்கள் – வன்னிப் பிரதேச கட்டளைத் தளபதி தகவல்

tamil_ex_child.jpgபுலிகளின் படையில் இருந்து  அரசாங்கத்திடம் சரணடைந்த சிறுவர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திப் பணிகளில்; ஈடுபடுத்தப்படுவர் என வன்னிப் பிரதேச கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.தம்பமடுவ மற்றும் பூந்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் இயங்கும் சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முகம்களுக்கு அவர் அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இத்தகவலைத் தெரிவித்தார். இது தொடர்பில்; கட்டளைத் தளபதி மேலும் கூறியதாவது,

புலிகளின் பிடியிலிருந்த தப்பி அரசாங்கத்திடம் சரணடைந்த சிறுவர்களுக்கு புனர் வாழ்வளிக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் புலிகளினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டவர்களே. அவர்கள் இப்போதுதான் சுதந்திரக் காற்றை சுவாசித்து சுயமாக இயங்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு விருப்பமான துறைகளில் அவர்களை வழி நடத்தி நாட்டின் நற்பிரஜைகளாக்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். 

விலா எலும்பில் காயத்தால் முதல் போட்டியில் பிரட்லீ இல்லை?

cricket.jpgஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், அபாரமாக பந்துவீசி வரும் பிரட் லீ திடீரென இடது விலா எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக ஸ்கேன் எடுக்க லண்டன் அனுப்பப்பட்டுள்ளார். இதனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
சோபியா கார்டன்ஸில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியில் பிரட் லீ கலந்து கொள்ளவில்லை. மேலும், இந்தத் தொடர் முழுதும் அவர் விளையாடுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சோதனைச் சாவடிகள் பெருமளவில் அகற்றம்

batticheckpoint.gifஇலங் கையின் கிழக்கு மாகாணத்தில் நெடுஞ்சாலைகளிலுள்ள காவல் துறையினரின் சோதனைச் சாவடிகளும், வீதித்தடைகளும் கனிசமான அளவில் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் எளிதாகியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் அதிகமான வீதித்தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு இடையேயான பயண நேரம் பாதியளவாக குறைந்துள்ளதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் போல கெடுபிடிகள் ஏதுமின்றி தங்களால் பயணிக்க முடிவதாகவும் பயணிகள் கூறுகிறார்கள்.

வவுனியா மாவட்ட முதலாவது மீள்குடியேற்றம் அடுத்தவாரம் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தகவல்

risadbadurudeen.jpgவவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள எட்டு கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் இந்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் அண்மையில் நடைபெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு வடக்கே புலிகளின் பிடியிலிருந்த சுமார் 20 கிராம சேவகர் பிரிவுகளைச்சார்ந்த  எட்டு கிராமங்களில் முதற்கட்டமாக மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவாகும் என்பதுடன் வவுனியாவுக்கு வடக்கே மூன்றாம் கட்டமாக நடை பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கையாகும். முதற்கட்டமாக மன்னார் சிலாவத்துறையிலும்ää இரண்டாம் கட்டமாக மன்னார் முசலியிலும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் நெடுங்கேணி தெற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள மருதன்குளம், புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கலீமடு, புலியன்குளம்,  கனகராயன்குளம், குஞ்சுகுளம்,  பரந்தன், நெடுஞ்கேணி,  மன்னார்குளம் ஆகிய எட்டு கிராமங்களிலுள்ள மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர

ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு புலிகள் முயன்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – பிரதமர்

pmsrilaka.jpgவன்னி யில் ஆயுதங்கள், பணம், நகைகள் தொகை தொகையாக மீட்கப்படுவதனால் புலிகளின் ஆட்டம் என்னவென்பது தற்போது புரிகின்றது. அதுமட்டுமல்லாது புலிகள் ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு முயன்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தென்னிலங்கை மக்களை தமிழர்கள் அன்று இருண்ட கண்ணாடி கொண்டே பார்த்தனர். எனினும் இன்று அவநம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் அழுதவண்ணம் உரையாற்றிய பத்மினி பா.உ.

11padmini.gifவவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் படுகின்ற அவலநிலைகளை எடுத்துக்கூறி உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.  மக்கள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போதே கண்ணீர் விட்டு அழுது தனது உரையை விட்டு விட்டு  உரையாற்றினார்.

சர்வதேசத் திடமிருந்து நற்பெயரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையே இன்று மேலோங்கியுள்ளது. எனது பாராளுமன்ற அனுபவத்தின் படி அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களின் வாயை மூடுவதற்கே பயன்பட்டுள்ளது. மூன்று இலட்சம் தமிழ் மக்கள் விருப்பமின்றி அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மக்களின் பெறுமதியான சொத்துக்கள் அழிந்துவிட்டன.

இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ நாடு யுத்தத்துக்கு முன்னுரிமையளித்து வந்தது. எனினும் இனியாவது பிரச்சினைக்குத் தீர்வுகாணப் பட வேண்டும். முகாம்களில் வாழும் மூன்று இலட்சம் மக்கள் படும் அவஸ்தைகளினால் முழு தமிழ் சமூகத்தின் மனங்களும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளன. இம்மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

முகாம்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும். அப்போது அங்குள்ள அடர்த்தி குறைந்து நோய்களும் இறப்புக்களும் குறைவடையும். பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பத்மினி சிதம்பரநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கிலுள்ள வைத்தியசாலையில் சோதனைக் குழுக்களை அமைக்க திட்டம்

hizbullah.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ள பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட சுகாதர சேவையை மேம்படுத்தல் தொடர்பான கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால், வைத்தியசாலைப் பரிசோதனைக் குழுவொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் விடுத்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள், சுகாதரத் துறையின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் உடனுக்குடன் மீள்குடியமர்வு – அமைச்சர் அமீர் அலி

ameerali.jpgநிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் உடனுக்குடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ். எஸ். அமீர் அலி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

எதிரணியினர் குறிப்பிடுவது போல் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருக்கும் எண்ணம் அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கி இருக்கும் நலன்புரி நிலையங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாதிருப்பதற்காக மல்வத்து ஓயாவிலிருந்து 50 லட்சம் லீட்டர் நீரைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் காலத்திற்குக் காலம் வெவ்வேறுவிதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.  இது வழக்கமானது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் எமது ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். இது தெளிவானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இனியாவது இனவாதம் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர் எவருமே அங்கம் வகிக்கவில்லை என்பது அபத்தமானது. அச்செயலணியில் இரண்டு தமிழ் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். இதனைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லையெனக் கூறுவது எமக்கு கவலை அளிக்கிறது.