பாராளுமன்றில் அழுதவண்ணம் உரையாற்றிய பத்மினி பா.உ.

11padmini.gifவவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் படுகின்ற அவலநிலைகளை எடுத்துக்கூறி உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.  மக்கள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போதே கண்ணீர் விட்டு அழுது தனது உரையை விட்டு விட்டு  உரையாற்றினார்.

சர்வதேசத் திடமிருந்து நற்பெயரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையே இன்று மேலோங்கியுள்ளது. எனது பாராளுமன்ற அனுபவத்தின் படி அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களின் வாயை மூடுவதற்கே பயன்பட்டுள்ளது. மூன்று இலட்சம் தமிழ் மக்கள் விருப்பமின்றி அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மக்களின் பெறுமதியான சொத்துக்கள் அழிந்துவிட்டன.

இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ நாடு யுத்தத்துக்கு முன்னுரிமையளித்து வந்தது. எனினும் இனியாவது பிரச்சினைக்குத் தீர்வுகாணப் பட வேண்டும். முகாம்களில் வாழும் மூன்று இலட்சம் மக்கள் படும் அவஸ்தைகளினால் முழு தமிழ் சமூகத்தின் மனங்களும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளன. இம்மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

முகாம்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும். அப்போது அங்குள்ள அடர்த்தி குறைந்து நோய்களும் இறப்புக்களும் குறைவடையும். பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பத்மினி சிதம்பரநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Comments

 • rajai
  rajai

  அடடா……என்ன பாசம் … எனன பாசம்…

  இந்த மக்கள் புலிகள் பிடியில் இருந்து கொண்டு மரண அவதிப்பட்ட போது இந்த கண்ணீர் எங்கே போனதாம்…

  Reply
 • சட்டம் பிள்ளை
  சட்டம் பிள்ளை

  ஐயோ….நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கு

  Reply
 • nallurkantha
  nallurkantha

  This is not to insult her.There were more than 100 occasions before this originated from the LTTE’s cruel politics.Thousands of jaffna people were crying and suffering in silence. Collection of gold, sittur avai, LTTE police, pass system, tax system, forcible recruitment to their ranks, torture camps and so on. Where was this lady? She was trying to show the world thro Tamil osai BBC and other media to discredit our motherland.

  Reply
 • valam
  valam

  இந்த சனத்தை அகதியாக்கியது புலிகள்.

  Reply
 • vanthijathevan
  vanthijathevan

  பத்மினி அழுவது மக்களை நினைத்தல்ல. இளம்பருதிக்காக!

  Reply
 • watch
  watch

  //இந்த சனத்தை அகதியாக்கியது புலிகள்.//
  புலிகள் உருவானாது யாரால்? எதால்? எதற்காக?

  முட்டாள் கதை கதைத்து, புலியை குறை சொல்லி, பொழுது போக்குவதே உங்கள் தொழிலாகப் போச்சு?

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  எனக்கு இந்தச் செய்தியைப் பாரக்கவே கண்ணைக் கட்டுது. நடிப்பிலை நடிகை பத்மினியையே இந்தப் பத்மினி விஞ்சிவிட்டார். இந்த வருட ஆஸ்கார் விருதை இவருக்கே வழங்கலாம் போலுள்ளது. பொறுத்த போரின் போது மக்களின் துன்பத்தை கூட நினைத்துப் பார்க்காமால் பிரித்தானியாவில் சுற்றுலாவில் இருந்தவர். ஜனனியின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் விளம்பர மாடலாக படம் காட்டி மகிழ்ந்தவர். இவருக்கு அந்த அகதிகளான பெண்களையும் சிறுவர்களையும் நினைக்க கண்ணீர் வருகின்றதென்றால், நேரில் பார்த்திருந்தால் மயக்கம் போட்டிருப்பார் போலும். இனியும் இது பற்றி எழுதினால் நானும் அழுதுடுவேன். ஆமா………

  Reply
 • chandran,raja
  chandran,raja

  மே மாதம் முற்பட்டகாலப் பகுதிகளில் வன்னிமக்கள் கிராமம்விட்டு கிராமம் தாவி போகிற இடங்களில் எல்லாம் பங்கர்வெட்டி பட்டினிகிடந்து பாம்புக்கடிக்கு பலிகொடுத்து போகிற இடத்தில் எல்லாம் உயிரையாவது பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில்..போன இடமும் பொல்லாத இடமாகமாறி தங்களை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் வந்த பாதிபேர்…. காதுத்தோட்டை கழற்றி தேங்காய் வாங்கி பவுண் சங்கிலையைக் கொடுத்து மிளகாய்காய் வாங்கி அரைவயிறு கால் வயிறு இறுதியில் அதுவும்மில்லாமல் தப்பவிட்டால் போதும் என்ற நிலை வந்தபோது
  அதற்கும் தற்கொலை தாக்குதலை நடத்தி பல அப்பாவிமக்களை கொன்றும் கொல்ல முயன்றபோதும் உங்களுக்கும் உங்கள் சகபாடிகளுக்கும் வராத கண்ணீர் இப்ப என்னவென்று பீரிட்டு வருகிறது.

  பாராளமன்றம் என்ன? கோடம்பாக்கம் என்ற நினைப்பா? நடிகை பத்மினியாக மாறி அனுதாபத்தை தேடலாம் என நினைக்காதீர்கள். சிங்களஅரசு கொடுமை செய்தாக சொல்லுகிறரார்கள். நீங்களும் உங்கள் கூட்டும் தான் புலம்பெயர்தமிழர் செய்த கொடுமையைவிட கொடியது. மனம் வைத்திருந்தால் எவ்வளவோ அழிவுகளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் நல்லொண்ணம் கொண்ட சிங்களமக்களும் உதவிக்கு வந்திருப்பார்கள். சின்னதனம் சுயநலம் உயிரைமதியாமை வறண்டகொள்கை துணிவின்மை இதுவே உங்கள்
  வாழ்வை தேடிக்கொள்வதற்கு ஆதாரமாக இருப்பவை. என்னால் உறுதியாக ஒன்றைமட்டும் சொல்லமுடியும் ஈழத்தமிழரின் வாழ்வில் அரசியலில் தலையிட புலம்பெயர்தமிழருக்கு எந்த அருகதையும் இல்லையோ அதைவிட மோசமான தகமைதான் உங்களுக்கும் உண்டு. மிகுதியை வரலாறே சொல்லட்டும்.

  Reply
 • Constantine
  Constantine

  How do you know the reason why she cried?? It may be very personal… Nothing to do with the people… She may be depressed.

  Reply
 • mano
  mano

  அவ கற்றிருக்கிற துறையே நாடகமும் அரங்கியலும். பொங்குதமிழ் காலங்களில் வீதி வீதியாக நாட்டிய நாடகங்களை நடத்தியும் தேர்தல் காலத்தில் அவவின் நாடகத்தால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் தமது கை விரல்கள் புண்ணாகும் வரை கள்ள வோட்டுப் போட்டு அவவைப் பாராளுமன்றத்திற்கு பெரும்பான்மை வாக்குகளுடன் அனுப்பிவைத்திருந்தார்கள். முடிவு இப்படியாகும் என்று நினைத்துப் பார்த்திராத பத்மினிக்கு அதே பாராளுமன்றத்தில்> அழழாம் அல்லது அழுவது போல் நடிக்கலாம் இது தவிர என்ன செய்ய முடியும்? ஏமாற இன்னும் இருக்கிறார்கள் தமிழ் தேசிய வெறியர்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //முட்டாள் கதை கதைத்து, புலியை குறை சொல்லி, பொழுது போக்குவதே உங்கள் தொழிலாகப் போச்சு. – watch //

  பாகிஸ்தானிலும் தலிபானுக்கெதிராக பாகிஸ்தான் அரசு போர் செய்கின்றது. அங்கு தலிபான்கள் மக்களை தமது கேடயமாக பாவித்துப் போர் புரியவில்லை. மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து வெளியேற விட்டே போர் புரிகின்றார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் தம் மக்களையே காவு கொடுத்து தம்மைப் பாதுகாக்கவே விரும்பினார்கள். இதனால்த் தான் இவ்வளவு சீரளிவுமென்பது உங்களுக்கு கொஞ்சம் கூட உறைக்கவில்லையா?? விடுதலைப்புலிகள் மட்டுமல்ல ஏனைய பல இயக்கங்கள் தோன்றியதற்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளே காரணம். ஆனால் பின்னாளில் விடுதலைப்புலிகளின் பேராசை பிடித்த சுயநலப் போக்கிற்கு எப்படி அடுத்தவரைக் குறை சொல்ல முடியும்??

  Reply
 • மகுடி
  மகுடி

  //watch on July 8, 2009 9:19 am //இந்த சனத்தை அகதியாக்கியது புலிகள்.//
  புலிகள் உருவானாது யாரால்? எதால்? எதற்காக?//

  ஒருக்கா சொல்லுங்கோ யாரால் என்று? தமிழர்கள் புலிகளை காட்டிலிருந்து கொண்டு வந்து நாட்டுக்குள் விட்டார்களா? இல்லை , மக்கள் வாக்களித்து பதவிக்கு கொண்டு வந்தார்களா?

  ஒரு டெலிபோனில போலீஸைக் கூப்பிடக் கூடிய புலத்தில, கத்தியைக் காட்டி கிரடிட் காட்டிலயே பணம் பறிக்க முடியும் போது, அங்கு ஆயுதத்தைக் காட்டி புலிகள் செய்த அட்டூழியங்கள் சொல்லில் மாளாது. எனது பெரியப்பா குடும்பம் தன் சொத்துகளை எழுதிக் கொடுத்து விட்டுத்தான் வன்னியை விட்டு கொழும்புக்கே வர முடிந்தது. இவர்கள் பணத்துக்காக எதையும் செய்தவர்கள். அநேகர் அப்படித்தான் வன்னியிலிருந்து வெளியேறினர். சும்மா மக்களால் , மக்களுக்கு என்று கதையளக்காதீங்கோ?

  Reply
 • Kumaran
  Kumaran

  This lady all the way supported to LTTE when they killed alternative viewers.

  Now she is sitting in the parliaments and compatibly saying here views. Instead of crocodile tears about IDP, First she should thank for RP to allow her into parliament and enjoy the freedom of speech which were denied for many Tamils under LTTE.

  I thing Padmini need another world tour to get over from VP death.

  Reply
 • palli
  palli

  காலம் கடந்த அழுகை; அன்று அழாமல் இன்று அழுவது ஏன்; அக்கா தயவு செய்து நாட்டைவிட்டு புறப்படுங்கள்; அமைதியாய் எம்மை போல்
  அகதி ஆகுங்கள்; யாரோ சொன்னது போல் இளம் வழுதியும் எப்படியும் புலனை பாவித்து புலம் பெயர்வார்; மக்களுக்கு இடையூறு இன்றீ
  ஏதாவது ஒரு நாட்டில் ஒரு கிராமத்தில் முதல்மரியாதை சிவாஜி ராதா போல் உங்கள் வாழ்வை வளபடுத்துங்கள்; அதை விட்டு இருந்ததையும் கெடுத்தான் கொள்ளி கண்ணன் என்பது போல் கேணைதனம் செய்யாதையுங்கோ; அதுசரி கூட்டமைப்பில் நீங்கள் எந்த பக்கம்; வடக்கா ?கிழக்கா ?.மேற்க்கா? அல்லது தெற்க்கா ..
  ஏனெனில் அதுவே நாலாய் பிரிந்து அதில் மூன்று அரசை நாடி நிற்ப்பதாக வடகிழக்கு செய்தி; நீங்கள் அழவும் வேண்டாம்; ஆராரோ பாடவும் வேண்டாம்; அகதி ஆனாலே தமிழருக்கு நின்மதி;

  Reply
 • palli
  palli

  //புலிகள் உருவானாது யாரால்? எதால்? எதற்காக?//
  அது சரி எமக்கு புலியின் முதல் புராணம் தெரியாது பாருங்கோ; தேசம் படிப்பது புதிதோ; எல்லாம் தெரியும் எப்போதோ தெரியும்; ஏதாவது தெரிய வேண்டுமானால் கேக்கவும்; பிறப்பில் இருந்து இறப்பு வரை புலி பற்றி சொல்கிறோம்;

  Reply
 • thurai
  thurai

  //புலிகள் உருவானாது யாரால்? எதால்? எதற்காக?
  முட்டாள் கதை கதைத்து, புலியை குறை சொல்லி, பொழுது போக்குவதே உங்கள் தொழிலாகப் போச்சு//

  புலிகளே புலிகளை கொன்று தின்னும் காலம் வந்த பின்னும் புலிகளைப் பற்ரி அறியாத பாவியின் குரல்தான் இது.

  துரை

  Reply
 • nsk
  nsk

  vanthijathevan on July 8, 2009 8:38 am
  பத்மினி அழுவது மக்களை நினைத்தல்ல. இளம்பருதிக்காக!

  She was working all throughout here not just enjoying like the readers on here. vanthijathevan please grow up.

  Reply
 • Suthi
  Suthi

  பத்மினிக்கு வெளிநாட்டில் சூட்டிங் எல்லாம் முடிஞ்சு இப்போ பார்லிமென்ட்டில் சூட்டிங் நடக்குதாக்கும். அதுவும் வன்னி மக்களை நினைத்து கண்ணீர் மல்கி -கசிந்துருகி- மூக்குச்சீறி- நாடாளுமன்ற உறுப்பினர் பதவியென்றால் சும்மாவாவா? எத்தனை சீன்ஸ்சுகளுக்கு எத்தனை விதமாக நடிக்கவேண்டும். கனவு கண்டவன் கட்டிலால் விழுந்து கண்ணை கசக்கியது போல். பத்மினிக்கு தீடீர் என்று வன்னிமக்கள் ஞாபகம் வந்துட்டுதோ?…. பத்மினி அழுதவிட்ட செய்தியை பார்த்து புலன் பெயர்ந்து இருக்கிறவன்களும் கண்ணை கசக்கப்போறாங்கள்….. ம்..ம்..ம்! இனி அடுத்து எப்போ தங்கள் வெளிநாட்டுப்படப்பிடிப்புகள்?..
  -சுதி-

  Reply
 • vanthijathevan
  vanthijathevan

  பத்மினி இளம்பருதியோடு சேர்ந்து என்னவெல்லாம் செய்தா பா.உ. ஆவதற்காக இளம்பருதிக்கு என்னவெல்லாம் சப்ளை செய்தா என்பதை யாழ் மக்கள் நன்கறிவார்கள். அப்போது புலிகளின் துப்பாக்கிகளின் கீழ் மெளனமாகி விட்டனர். இனியும் அப்படி இருக்க மாட்டார்கள். தயவு செய்து எனது கீபோர்ட்டை தட்ட வைக்காதீர்கள்.

  Reply
 • தாமிரா மீனாக்ஷி
  தாமிரா மீனாக்ஷி

  லண்டனுக்கு ஓடி வந்த போது அவர் கணவர் மக்கள் சேவைக்காக டக்ளஸ் தேவானந்தாவிடம் இரகசியமாக வாங்கிய பணத்தை கொடுத்துத் தீர வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததை நினைத்து அழுதிருக்கவும் வாய்ப்புண்டு. இதே விஷயமாக வேறு தொண்டு நிறுவனங்களும் நாடக ஜோடிக்கு வலை விரித்துள்ளதாகக் கேள்வி. அதை நினைத்தும் அவர் கன்ணீர் சிந்தியிருக்கலாம். எல்லாம் அந்த சிதம்பரத்து நாதனுக்கே வெளிச்சம்.

  Reply
 • msri
  msri

  பத்மினியின் பாராளுமன்ற அழுகையை> அரசியல் தளத்தில் வைத்து விவாதியுங்கள்! விமர்சியுங்கள்! சில நண்பர்கள் யோசிக்க வேண்டும்> இப்படி ஓரு பத்மினி அல்ல> எவ்வளவோ “பத்மினி போன்றவர்களை” தமிழ் சமுதாயம் பெற்றெடுத்துள்ளது! குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!

  Reply
 • Amirthakaliyan
  Amirthakaliyan

  பத்மினி அழுதது மக்களை நினைத்து அல்ல. பத்மினிக்கு இந்த பதவி கிடைத்திருகாது புலி இல்லாவிட்டால். இப்பொழுது புலி போய்விட்டது. பதவியும் போய்விடுமோ என்று பயம் வந்துவிட்டது போலும். ஐயோ பாவம் பத்மினி அக்கா.

  அக்கா எம் பி பதவி அழுவதற்கு அல்ல. சட்டம் இயற்றுவதற்கு. இது புரோக்கர் பதவியும் அல்ல. அடிப்படை சட்ட அறிவு இல்லாமல் நீங்கள் எல்லாரும் பாராளுமன்றுக்கு வந்து படி ஏறி இலவச சாப்பாடு சாபிட்டு இந்த உடம்புடன் என்ன பண்ண போறியளோ? எல்லாம் பெரிய லொள்ளு !!!

  Reply
 • msri
  msri

  உந்தப் பாராளுமன்றத்தில்> அடிப்படைச் சட்ட அறிவு இல்லாத கனபேர் (கொலை கொள்ளை றவுடிக்கூட்டம்)எம்.பி.களாக மந்திரிகளாக உள்ளனர்!

  Reply