அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna-20.jpgஅவசர காலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல என்று தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, புலிகள் பெருந்தொகையான அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு எதிராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பியது கிடையாது. என்றாலும் பயங்கரவாதம் இப்போது ஒழித்துக் கட்டப்பட்டிருக்கின்றது. கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுமார் மூன்று தசாப்தங்களாகப் பின்னடைந்துள்ள பிரதேசங்களை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது. வெற்றிபெற முடியாத திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அபிவிருத்திக்கான சர்வகட்சிக்குழு கூட்டத்தில் அண்மையில் பங்கு பற்றினார்கள். இது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றி இருக்கமாட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.ஒருவர், பிரபாகரன் உண்மையில் கொல்லப்பட்டு விட்டாரா என்று என்னிடம் கேட்டார். அந்தளவுக்கு அவர்கள் பிரபாகனுக்கு பயந்து செயற்படுகிறார்கள்.

அவசரகாலச் சட்டம் முழு நாட்டிலுமே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. மாறாக இது தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கில் மட்டும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. இச்சட்டம் நடைமுறையில் இருப்பதன் பயனாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுகின்றனர்.

இதேவேளை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிழல் அரசாங்கம் என்ற மாயை கே.பி. பரப்பி வருகின்றார். முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கும் புலிகளால் இதனை ஒரு போதும் சாத்தியப்படுத்த முடியாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நிவர்த்திக்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளேன். தமிழ் மக்களின் குறைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி போன்ற தேசிய கட்சியில் இணைந்து செயற்படுவது அவசியம்.

தமிழ் மக்கள் மத்தியில் சுமார் 15 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. இவற்றை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • rohan
    rohan

    உங்க வாயால வந்தா சரியாத்தான் இருக்கும்.

    பிரிஞ்ச பிறகும் பிரபாகரனைக் கடவுள் எண்டு சொன்னவரில்லீங்களா நீங்க?

    Reply
  • nsk
    nsk

    Paramasivan Kaluthil Irunthu Paambu Sonnathu Karuda Sowkiyma.

    It is our time.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    எதற்காக கருணா ஏகப்பட்ட ராணுவ முகாம்களை தாக்கி அழித்து கொண்டு திரிந்தார்?

    Reply
  • jalpani
    jalpani

    “ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு எழுந்துள்ளதாக டாக்டர் சின்னத்துரை சிவபாலன் நேற்றுத் தெரிவித்தார்”

    அவர் தமிழ் புலியுடன் இருந்தபோது எவ்வாறு பேசினாரோ அதே போல் இப்போது சிங்களப் புலியுடன் இருக்கும் போதும் பேசுகிறார்.

    யாழ்ப்பாணி

    Reply
  • real jalpani
    real jalpani

    “ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு எழுந்துள்ளதாக டாக்டர் சின்னத்துரை சிவபாலன் நேற்றுத் தெரிவித்தார்.

    இரண்டு மாத கவனிப்பு பாவம் உங்களை இப்படி பேச வைக்கிறது.

    நீங்கள் நல்லவரோ கெட்டவரோ எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியாததற்கு மன்னித்து விடுங்கள். நண்பரே இந்த உலகம் உங்களை மறந்து விடும். இதை சொன்னதற்காக உங்களை திட்டவில்லை. உங்களை புரிந்து கொள்கிறோம். நீங்கள் வன்னியில் கொலை செய்திருக்க மாட்டீர்கள். ஏராளமான உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி. நீங்கள் புலிகளை ஆதரித்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இங்கிருந்து வெறும் வாயை மெல்லுபவர்களை விட உங்கள் மருத்துவ சேவை போற்றப்படக் கூடியதே.

    காலம் இதற்கு பதில் சொல்லும்.

    றியல் யாழ்ப்பாணி.

    Reply
  • msri
    msri

    அவசரகாலச்சட்டம்> முழுநாட்டிற்குமான சட்டம்தான்> நீங்கள் பிரபாப் புலியோட இருந்த நாள் முதலாய் அது வடகிழக்கு தமிழ மக்களைத்தான் கொன்றது! நீங்கள் மகிநத ஐனநாயகப் புலியாகியும் கள்ளம்கபடமற்ற சின்னஞ் சிறிசுகளையும் சேர்த்தெல்லோ கொல்லுது! மொத்தத்தில்> அவசரகாலச்சட்டம் கடந்த 30ஆண்டுகளில் தமிழ்மக்களையே கொன்று குவித்துள்ளது!

    Reply
  • Amirthakaliyan
    Amirthakaliyan

    நீங்கள் எல்லாம் அடக்கி வாசித்தால் நல்லா இருக்கும். அதிகம் வாசித்தால் நாங்கலும் உரத்து வாசிக்க வேன்டி இருக்கும்! என்னத்துக்கு தேவை இல்லாம் இன்னும் நசல்.

    Reply