சுற்ற றறிக்கைக்கு முரணாக நிதி அறவிட்ட அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கைக்கு ஏற்ப பாடசாலை மாணவர்களிடம் சேவை மற்றும் வசதிக்கட்டணம் அபிவிருத்திக் கட்டணம் ஆகியவற்றை மட்டுமே அறவிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
சுற்றறறிக்கைக்கு மாறாக கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களிடம் அதிபர்கள் கட்டணம் ஏதும் அறவிட்டிருந்தால் அவற்றை திருப்ப ஒப்படைப்தற்கான உத்தரவை நாளை விடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.