எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு அமைச்சு துரித நடவடிக்கை – அமைச்சர் மிலிந்தமொரகொட சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை

moragoda.jpgபயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்ப ட்டுள்ள 650 தமிழ் இளைஞர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்ப டுத்துவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் பேசியுள்ளதாக நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஏற்கனவே அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள் ளது. தடுப்புக் காவலில் உள்ளவர்க ளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் விடயம் நீதி அமை ச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இணைக் கூட்டங்களின் போது பேசப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சட்ட மாஅதிபர் ஏற்கனவே விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள தமிழ் இளைஞர்களில் 59 பேரை சட்ட மாஅதிபர் கடந்த இரு மாதங்களில் விடுதலை செய்துள்ளார்.

இம்மாதத்தில் மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் இளைஞர் களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சர்வதேச நபர்கள் மீதான விசாரணைகளை துரிதமாக முடித்து அவர்களது கோவைகளை பூரணப்படுத்தி அனுப்புமாறு தமது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கு மாறு பொலிஸ் மாஅதிபரை சட்டமா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என்று அமைச்சர் மொரகொட நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் வெளிநாட்டு பயணம் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல்

rohitha-bogollagama_s.jpgமுன்னாள் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவின் வெளிநாட்டுப் பயணங்களினால் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அங்கு விசா ரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, எந்த இராணுவத் தளபதிக்கும் தனிப்பட்ட ரீதியிலோ உத்தியோகபூர்வ மாகவோ வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு வைக்கமுடியாது. ஆனால் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியான பொன்சேகா வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு வைத்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை தொடர்பான தகவல்கள் வெளியாருக்குச் செல்லலாம். இதனால் நாட்டின் ஆள்புல ஒருமைப் பாட்டிற்கும் இறைமைக்கும் அச் சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொன்சேகா அமெரிக்கா சென்றபோது அங்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவரின் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக நாட்டின் இறைமைக்கும் ஆள் புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இது தொடர்பில் சர்வதேச நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி. எஸ். பி. சலுகை தொடர்பில் முன்பு காணப்பட்ட நெருக்கடி நிலை தற்பொழுது கிடையாது.  ஜி.எஸ்.பி. சலுகை மீண்டும் இலங்கைக்கும் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரினிடேட் என்ட் டுபாக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் 2013ல் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பிரேரணையை முன் வைத்தது குறித்து பிரித்தானிய பிரத மருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

2013ல் பொதுநலவாய மாநாட்டை இலங்கை யில் நடத்து வதற்கு சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கின. இது தொடர்பில் சகல நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எமக்கு மொரிஸ் நாடு போட்டியாக வந்த போதும் இறுதியில் 2013ல் இலங்கையில் மாநாட்டை நடத்தவும் 2011ல் அவுஸ்திரேலியாவிலும் 2015ல் மொரிஸிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளினால் நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது. நாட்டில் அமைதியான சூழல் காணப் படுகிறது. இந்த ஜனாதிபதித் தேர்தல் சகல இன மத மக்களுக்கும் மிக முக்கியமானதாகும். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக சுதந்திரமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வரலாற்றில் முதற் தடவையாக ஐ. தே. க வேட்பாளர் ஒருவரின்றி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மாகாண சபைத் தேர்தல்களில் மக்கள் ஜே.வி.பியை நிராகரித்துவிட்டனர். இன்று ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் கூட்டு வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளனர். அவர் பொது வேட்பாளரல்ல. அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எதுவும் கிடையாது என்றார்.

இலவச பாடநூல் விநியோகிக்கும் தேசிய வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில்

அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு 2010ஆம் ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்களை உத்தியோக பூர்வமாக பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெறவுள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்

அரசசேவை ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவியுயர்வுகளை இடைநிறுத்துக – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

dayananda_disanayake.jpgஜனாதி பதித் தேர்தல் காலத்தில் அரச சேவைகளில் ஆட்சேர்ப்புக்கள், இடமாற்றங்கள், மற்றும் பதவியுயர்வுகள் இடம்பெறுவதை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் ஊடாக விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் ஜனவரி 5ம் திகதி வரை ஒத்திவைப்பு

parliament.jpgபாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வருடம் ஜனவரி 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பது தொடர்பான பிரேரணை 35 மேலதிக வாக்குகளால் நேற்று (8) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 89 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்ற அமர்வுகளை 2010 ஜனவரி 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஐ.தே.க., ஜே. வி.பி ஆகிய கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததோடு இந்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரின.

இந்த வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்ததோடு ஐ.தே.க, ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். பாராளுமன்றம் டிசம்பர் 8, 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கூடும் என பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் ஏனைய தினங்களில் பாராளுமன்றம் கூடுமா என ஜே. வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

இந்த வருடத்தில் டிசம்பர் 8ஆம் திகதி மட்டுமே பாராளுமன்றம் கூடும் என கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அரசாங்கம் அறிவித்தது. சில எதிர்க்கட்சிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால் இது தொடர்பான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் இவ்வாறு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருமகனின் பெயரில் பதிவு செய்த கம்பனி மூலம் ஆயுதக் கொள்வனவு விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிறார் அமைச்சர் அளுத்கமகே

alutgamage.jpgசரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்த காலத்தினுள் தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி தனது மருமகனின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கம்பனியூடாக ஆயுதக் கொள்வனவு செய்துள்ள விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள ப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். மகாவெலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன் றிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்களுடன் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்கவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். சரத் பொன்சேகாவின் மருமகனின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கம்பனியொன்றினூடாக ஆயுத கொள்வனவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் எ ம்மிடம் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நாம் இதனைக் கூறவில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானோர்: விடுதலை தொடர்பில் ஆராய 10 பேர் கொண்ட குழு நியமனம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வது தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக சட்ட மா அதிபர் திணைக்களம் பத்துப் பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக நீதி, சட்ட மறு சீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

மேற்படி குழு தடுத்துவைக்கப்பட்டுள்ள 631 பேர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நிரபராதிகளை விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்குமென பிரதியமைச்சர் தெரிவித்தார். தேசிய இணக்கச் சபை தின நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

கட்சிக்குள் குவியும் பணங்களை ரணில் கொள்ளையடிக்கிறார் – ஐ.தே.க. சார்பில் வேட்பாளர் இன்றேல் கடும் நடவடிக்கை – ஜோன்ஸ்டன் எம். பி

jon.jpgஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த முறை தேர்தலின் போது 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 09 மில்லியன் டொலர்களே தேர்தலுக்கு செலவானது. மிகுதி பணத்துக்கு என்ன நடந்தது? என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். எமது கட்சிக்கு மூடை மூடையாக பில்லியன்களில் பணம் வந்து குவிகின்றது. கட்சித் தலைவர் அப் பணத்தை நன்கு கொள்ளயடிக்கிறார். ‘ஐக்கிய தேசியக்கட்சி’ எனும் பெயரில் அங்கு ரணில் விக்கிரமசிங்க கொம்பனிதான் நடக்கிறதெனவும் ஜோன்ஸ்டன் எம். பி. நேற்றுக் கூறினார். நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களைக் கூட சந்தித்து பேச நேரமில்லாத ஐ.தே.க. தலைவர் அறைக் குள்ளிருந்து எவ்வாறு பணத்தை சுருட்டலாம் என்பது பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருப்பார். அவருக்கு கட்சி பற்றியோ ஆதரவாளர்கள் பற்றியோ சிறிதும் கவலையில்லை.

பல்வேறு வழிகளிலும் கட்சிக்கு கிடைக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தனது தலைவர் பதவியை இழக்க விருப்பமில்லாமல் கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தியுள்ளாரென்றும் ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவித்தார்.

அரசியல் அனுபவமில்லாத ஜெனரல் சரத் பொன்சேகா எப்படி பொது மக்களுக்காக சேவையாற்ற முடியும். எவ்வாறு அவரை நம்பி முழு நாட்டையும் ஒப்படைக்க முடியும். எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னதாக ஐ.தே.க. கட்சிக்குள்ளிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் இல்லையேல் நாம் கட்சித் தலைமைத் துவத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை யெடுக்க நேரிடுமெனவும் அவர் கூறினார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம். பி. மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக பொது வேட்பாளராக ஜெனரலை நியமிக்க ஐ.தே.க. சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வர்களில் நானும் ஒருவன். நான் ஊட கங்களில் அது குறித்து விளக்கமளித்த தையடுத்து அதனை நிறுத்துமாறும் கூறி எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தன. தான் அதற்கு அஞ்சவில்லை. கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் எனக் குண்டு. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கி ரமசிங்க ஒரு தலைவருக்குரிய இலட் சணங்களுடன் நடந்து கொள்கின்றார் இல்லை. எஸ். பி. திஸாநாயக்க போன்ற திறமையானவர்கள் கட்சியை விட்டு செல்லக் காரணம் இவரது நடத்தையே. திறமையானவர்கள் கட்சியை விட்டுப் போவது குறித்து தலைவர் ரணிலுக்கு சிறிதும் கவலையில்லை. செயற்குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தையடுத்தே இவர் கட்சியை விட்டு விலகியிருப்பதாக ஒரு ஊடகத்தில் அவர் சிரித்துக் கொண்டு பொய் கூறுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்துப் போட்டியிட தைரியமில்லாவிடில் முதுகெலும்புடைய எஸ். பி., சஜித் பிரேமதாச போன்றவர்களை வேட்பாளர்களாக நியமித்திருக்க வேண்டும். எமது கட்சி ஆதரவற்றிருந்த சமயத்தில் எதிர்க்கட்சியிலிருந்து ஏழெட்டு பாராளு மன்ற உறுப்பினர்களுடன் ஐ.தே.கவுக்கு வந்து அதனை கட்டியெழுப்ப உதவியவர் எஸ்.பி. அந்த நன்றியை ரணில் மறந்து விட்டார். திறமை மிக்கவர்கள் போன பின்னர் தொடர்ந்தும் கட்சியில் தானே தலைவராகவிருக்க வேண்டுமென்பதே அவரது விருப்பம். இவ்வாறான குறுகிய உள்நோக்கம் கொண்டவர்கள் இருக்கும் கட்சி எவ்வாறு முன்னேற முடியும். சந்திரிகா ஐ.தே.க.வுக்கு எதிராக செய்த மோசடிகளை மறந்து விட்டு இன்று சந்திரிகாவுடனும் மங்களவுடனும் இணைந்து இணையத்தளத்தில் எமக்கு சேறு பூசுகிறார். இந்தப் பயணம் நீடிக்காது.

ஐ.தே.க. வின் கொள்கைகளில் முரண் பட்டிருக்கும் எனக்கு இன்னமும் கட்சி யிலிருந்து விலகுமாறு கோரி கடிதம் தரா மலிருப்பது அதிசயமாகவுள்ளது. நானும் கட்சியை விட்டு விலகினால் அதை விட பெரிய சந்தோஷம் எமது தலைவருக்கு வெறெதுவுமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மன்னாருக்கு இன்று முதல் இ.போ.ச பஸ் சேவை

buss.jpgகொழும் பிலிருந்து மன்னாருக்கான இ.போ.ச பஸ் சேவை இன்று புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.போ.ச. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் 10 பஸ்கள் இச் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் இதன் நேர அட்டவணை இன்று அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை காலமும் மன்னாருக்கு  செல்லும் பயணிகள் மதவாச்சி  சோதனை நிலையத்தில் இறங்கி வேறு பஸ்களில் மன்னாருக்குச் சென்றனர். அதேபோல மன்னார் மக்களும் அங்கிருந்து ஒரு பஸ்ஸில் வந்து மதவாச்சியில் இறங்கி வேறு பஸ்களில் பயணம் செய்தனர். மதவாச்சி சோதனை நிலையம் ஊடக வாகனங்கள் வடக்கே சென்றுவர பாதுகாப்பு அமைச்சு கடந்த சனிக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளது.

அகதி முகாம்களை பார்வையிட்டார் பிளேக்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட்டதுடன், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக திருப்தி தெரிவித்திருக்கிறார்.

மெனிக் பாமிலுள்ள நிவாரண நிலையத்திற்குச் சென்று பார்வையிட்ட பின்பே தெற்காசிய மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் பிளேக், மாணவர்களுக்கு நிலக் கண்ணி வெடி அபாயம் தொடர்பாக அறிவூட்டல் கல்வி வழங்கப்படுவதையிட்டும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

மெனிக்பாமில் தங்கியிருப்போர் தொகை தற்போது 94 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களை சந்தித்தபோது அவர்களின் நிலைமைகள் தொடர்பாக பிளேக் கேட்டறிந்தார். உணவு, மருத்துவசேவை, சுகாதார வசதிகள் மற்றும் தற்போது நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக இடம்பெயர்ந்த மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். ரொபேர்ட் பிளேக்கை மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும் வவுனியா அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸும் வரவேற்றனர். பிளேக்குடன் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸும் உடன் சென்றிருந்தார்.