சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்த காலத்தினுள் தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி தனது மருமகனின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கம்பனியூடாக ஆயுதக் கொள்வனவு செய்துள்ள விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள ப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். மகாவெலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன் றிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர்களுடன் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்கவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். சரத் பொன்சேகாவின் மருமகனின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கம்பனியொன்றினூடாக ஆயுத கொள்வனவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் எ ம்மிடம் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நாம் இதனைக் கூறவில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.