கொழும் பிலிருந்து மன்னாருக்கான இ.போ.ச பஸ் சேவை இன்று புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.போ.ச. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் 10 பஸ்கள் இச் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் இதன் நேர அட்டவணை இன்று அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் மன்னாருக்கு செல்லும் பயணிகள் மதவாச்சி சோதனை நிலையத்தில் இறங்கி வேறு பஸ்களில் மன்னாருக்குச் சென்றனர். அதேபோல மன்னார் மக்களும் அங்கிருந்து ஒரு பஸ்ஸில் வந்து மதவாச்சியில் இறங்கி வேறு பஸ்களில் பயணம் செய்தனர். மதவாச்சி சோதனை நிலையம் ஊடக வாகனங்கள் வடக்கே சென்றுவர பாதுகாப்பு அமைச்சு கடந்த சனிக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளது.