எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அதிகாரி மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் மேர்வின் சில்வா குற்றமற்றவர் சு.க. ஒழுக்காற்று குழு தீர்மானம்

gggg1.jpgகளனி யாவில் சமுர்த்தி அதிகாரி ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் தொடர்பாகவிசாரணை நடத்திய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா குற்றமற்றவர் என்று தீர்மானித்துள்ளது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம்கையளிக்கவுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்க தவறியமைக்காக சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவத்திற்கு மேர்வின் சில்வா பொறுப்பு என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதுவும் அவருக்கு எதிராக இல்லை என்று சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கூறியுள்ளது.

கிராமத்தில் பாரம்பரியமாக வழங்கப்படும் தண்டனை தொடர்பாக உதாரணம் காட்டும் விதத்தில் தன்னைத்தானே மரத்தில் கட்டிவைக்க விரும்பியிருந்ததாக சமுர்த்தி அதிகாரி கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தமது கடமையிலிருந்தும் ஏனையவர்கள் தவறி விடக்கூடாது என்பதை வெளிப்படுத்த இவ்வாறு செய்து காண்பித்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தன்னிச்சையாகவே அவர் மரத்தில் தன்னை கட்டியிருந்ததாக குழுவானது அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அததெரண இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.

கிடைத்திருக்கும் ஆதாரங்களை பரிசீலனைக்கெடுத்து கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றம் எதனையும் மேர்வின் சில்வா இழைத்திருக்கவில்லை என்று குழுவானது தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயகொடி மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

luxman_jayakodi.jpgஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் ஜயக்கொடியின் மறைவுச் செய்தியை கேட்டு மிகுந்த சோகமுற்றதாக பிரதமர் தி.மு.ஜயரட்ன கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஷ்மன் ஜயக்கொடி மறையும் வரை அக்கட்சியை கைவிடவில்லை. பணத்துக்காக கட்சியை காட்டிக்கொடுக்கவும் இல்லை என்பதை பெருமையுடன் கூறவேண்டும். கட்சியில் பல பதவிகளை வகித்த அவர் கட்சியின் முன்னேற்றத்துக்காக மட்டுமே செயற்பட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அந்த அனுதாப செய்தியில் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தம்: ஜனநாயகம், இறைமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – தமிழ்க்கட்சிகளுடனும் பேச்சு

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்திற்கோ மக்களின் இறைமைக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது. எதிர்க் கட்சி மற்றும் ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு ஐ.தே.க. தனது ஆதரவை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அரசியலமைப்பில் கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஐ.ம.சு.முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

1978 ஆம் ஆண்டு யாப்பினூடாக கடந்த 32 வருட காலமாக பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் புதிய யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையானவாறே இதில் திருத்தம் செய்யப்படுகிறது.

அபிவிருத்திப் பணிகளுக்குள்ள தடைகள் இதனூடாக நீக்கப்பட்டு அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாப்புத் திருத்தம் செய்தால் அது அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஐ.தே.க. ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். அதலபாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் ஐ.தே.க இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியதாகும். உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க ஆதரவு வழங்க வேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலர்

a9.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கிணங்க வட மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான பாரிய வீதிப் புனரமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைவதுடன், நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வீதியானது நவீனமயப்படுத்தப்படும். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்பருத்தித்துறை வீதி,புத்தூர்மீசாலை வீதி, யாழ்ப்பாணம்பளை வீதி என்பனவும் புனரமைக்கப்படவுள்ளது.

மேலும் முல்லைத்தீவு கொக்கிளாய்புல்மோட்டை வீதி, ஒட்டுசுட்டான்நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவுபுளியங்குளம் வீதிகளும் வெவ்வேறான திட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான மொத்த செலவினத்தில் 85% சீன அரசு வழங்கவுள்ளது. மீதி 15% செலவினத்தை இலங்கை அரசு செலவிடும்.

அரசியலமைப்புத் திருத்த நகல்வரைபை பரிசீலனைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளடங்கிய ஆவணத்தை உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட 5 நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைகளுக்கு மட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் நீக்கப்படுவதையும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி இருக்கவேண்டும் என்ற ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதாக நகல்வரைபு இருப்பதாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

நீதியரசர்கள் ஷிரானி பண்டாரநாயக்கா, கே.ஸ்ரீபவன், பி.ஏ.இரட்நாயக்கா, எஸ்.ஐ. இமாம், ஆர்.கே.சுரேஷ் சந்திர ஆகிய நீதியரசர்கள் குழாமே உத்தேச திருத்தங்கள் அரசியலமைப்புக்கு இசைவானதாக உள்ளதா என்பதை பரிசீலிக்கவுள்ளது.

சு.க.வின் 59 வது மாநாடு நாளை அலரிமாளிகையில்

mini.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (2 ஆம் திகதி) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கடந்த 59 வருடங்களில் 4 பேர் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் அளித்தனர். கட்சியின் 59 வருட வரலாற்றில் அதிகூடுதலாக இம்முறை 118 சு.க. உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்றார்.

மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன

l-m.jpgவடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மூன்று லட்சம் கண்ணி வெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்

அரசியலமைப்பு சபைக்கு பதிலாக பாராளுமன்ற சபை – அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் மாற்றம்

அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபையொன்றை அமைக்க உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ள்ளது. இதற்கு பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

சகல இனங்களும் பிரதிநிதித்துவ மாகும் வகையில் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கும் உறுப்பினர்களை நீக்கும் வகையிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் காலத்திலும் பாராளுமன்ற சபை இயங்கும் வகையிலும் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன எனவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், பிரதமரதும், எதிர்க்கட்சி தலைவரினதும் பிரதிநிதிகளாக எம்.பி. க்கள் இருவர் நியமிக்கப்படுவர்.

இதற்குத் தகுதியானவர்களின் பெயர்களை கட்சித் தலைவர்களால் சிபார்சு செய்ய முடியும். தற்போதைய அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர் ஒருவரை நியமித்தால் அவரை நீக்குவதற்கு தற்பொழுதுள்ள யாப்பின் படி முடியாது. ஆனால் பாராளுமன்ற சட்டத்தின் மூலமே ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தியோ உறுப்பினரை நீக்கும் வகையிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முன்மொழியப்படும் உறுப்பினர்களின் விபரங்கள் ஒருவாரத்தினுள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவேண்டும். இன்றேல் தேவையானவரை ஜனாதிபதியே நியமிப்பார்.

அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபையொன்றை அமைக்கும் வகையில் அரசியலமைப்பில் 41 (அ) என புதிதாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட வுள்ளது. உத்தேச அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன் வழிகாட்டல்களின் படி சட்டபூர்வமாக யாப்பு திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். மூன்று பிரதான அம்சங்களே உத்தேச யாப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட் டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான 31 (2) சரத்து நீக்கப்பட் டுள்ளது.  இதனூடாக ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில்

தெரண தில்கா சமன்மளிக்கு அச்சுறுத்தல்

samanmaliranjan.gif360 என்ற தெரண தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தில்கா சமன்மளிக்கு இரத்தினபுர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

500 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்!

வவனியா தடுப்பு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் விடுதலைப் புலிகள் எதிர்வரும் 4ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சிறைச்சாலை மறுசிரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர, பிரதி அமைச்சர் விஜிதமுனி தலைமையில் வவனியா பம்பைமடு புனர்வாழ்வ நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வ ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வவனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த 500பேர் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட 180 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ள 500 முன்னாள் போராளிகளில் 17  தாய்மார், இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், சிறுவர்கள், உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் என பிரிகேடியர் சுதந்த ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

Related News:

புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!

 முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை