எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இரு அதிகாரிகள் இடைநிறுத்தம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த வியாழக்கிழமை இரு கைதிகளை மற்றொரு கைதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தெடர்பாக உயர் மட்ட விசாரணை மேற்கொண்டுவரும் சிறைச்சாலைத் திணைக்களம் அச்சிறைச்சாலையில் இரு உயர் அதிகாரிகள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை பிரதான அதிகாரி மற்றும் சிறைச்சாலை அத்தியட்சர் ஆகிய இருவருமே இடைநிறுத்தப்பட்டவர்களாவர்.

இச் சம்பவத்தின்போது கைதி ஒருவருக்கு துப்பாக்கி எவ்வாறு சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்லப்பட்டது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன. சிறைச்சாலைக்குள் வருபவர்கள், கைதிகளுக்கு கொண்டுவரப்படும் உணவுப்பொருட்கள் என்பன சிறைக்காவலர்களால் சோதனையிடப்பட்ட பின்னரே உட்கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகின்றன.

இவ்வாறான பாதுகாப்புகளின் மத்தியில் கைதி ஒருவருக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதேவேளை சிலர் நீர்கொழும்புச் சிறைச்சாலையில் பணிபுரியும் வேறு சில சிறைக்காவலர்களும் இடமாற்றம் செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமலையில் நோயாளர்களுக்கு ஸ்ரீ ரெலோ நிவாரணப் பொருள் உதவி

sri_telo.jpgதிரு கோணமலை பொது அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முல்லைத்தீவுப் பொதுமக்களுக்கு திருகோணமலை தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தினர் சுமார் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

ஸ்ரீ ரெலோ இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கே.பரமேஸ்வரன் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர் பாண்டியன் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் இந் நிவாரணப் பொருட்களை நேரடியாக மருத்துவ மனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்தனர். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி

chandrika-bandaranaike-kumaratunga-01.jpgஇராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஆளும் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  பொதுமக்களை பாதிப்புக்கு உட்படுத்தும் வகையிலான இராணுத் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என சந்திரிக்கா இந்தியாவில் தெரிவித்துள்ளார்.  இராணுவப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், இடம்பெயர நேரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை பாதிப்புக்கு உட்படுத்தி அடையும் இராணுவ வெற்றிகள் விரும்பத் தக்கக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில்தான் இராணுவ நடவடிக்கைகள் துல்லியமாக திட்டமிடப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியே இன்றைய அரசாங்கத்தின் வெற்றி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமானத் தாக்குதல் தொடர்பாக உடனடி அறிக்கை சமர்ப்பிக்க பாதுகாப்பு அமைச்சு செயலாளர் பணிப்பு

colombo1.jpgகொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் வெள்ளிக்கிழமை இரவு விடுதலைப்புலிகள் நடத்திய விமானத்தாக்குதல் தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். புலிகளின் இருவிமானங்களும் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடங்களுக்கு சென்று விமானங்களின் சிதைவுகளை பாதுகாப்பமைச்சின் செயலாளர் பார்வையிட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

புலிகளின் முதலாவது விமானம் மோதிய உள்நாட்டு இறைவரிக் கட்டிடத்தொகுதிக்கு கோதாபய முதலில் சென்று பார்வையிட்டார்.  இது இவ்வாறிருக்க, நாட்டின் வருமானம் தொடர்பான சகல விபரங்களும் திரட்டி வைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு இறைவரித்திணைக்கள கணனி வலைப்பின்னல் அமைப்புக்கு விமானத்தாக்குதலால் எந்தவிதமான பாதிப்பும் இல்லையென்று நிதி அமுலாக்கல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்திருக்கிறார்.

நேற்றுக்காலை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சென்று பார்வையிட்ட பின்பே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். திணைக்களப் பணிகளை சாத்தியமான அளவுக்கு துரிதமாக ஆரம்பிக்க அரசு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் 15 மாடிக்கட்டிடங்களையும் உயரதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டதாக கூறிய அமைச்சர், தாக்குதல் சேதம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை!

electricitypowerlinesss.jpgநீர்த்தேக் கங்களில் நீர் மட்டம் பெருமளவு குறைந்து வருவதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்வலு எரிசக்தி அமைச்சு பொது மக்களிம்  கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளதையடுத்து விக்டோரியா, ரன்தம்பே ரன்தெனிகலை,  கொத்மலை, சமனலவௌ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கங்களினூடாக 1260 கிலோ வோர்ட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மழை குறைந்துள்ளதை யடுத்து 400 கிலோ வோர்ட் வரை மின் உற்பத்தி குறை ந்துள்ளது. இதனால் எரிபொருளைப் பயன்படுத்தி  கூடுதலான மின் உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு 27ஆம் திகதி ஆரம்பம்! – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

saarc_flagss.jpgசார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குரைசி ஆகியோர் அடங்கலாக சார்க் நாடுகளின் சகல வெளிவிவகார அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

சார்க் வெளிவிவகார அமைச்சுக்களின் அதிகாரிகள் மட்ட மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்கள் 26ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். தற்போதைய நிலையில் சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு வருவது மிகவும் முக்கிய விடயமாகும். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வலய நாடுகளின் ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டின்போது ஆராயப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சேனைப்பயிர்ச் செய்கை விவசாயிகள்மீது புலிகள் துப்பாக்கிச்சூடு- 14 பேர் மரணம்

uthaya_nanayakara_.jpgஅம்பாறை இங்கினியாங்கலை ரத்மல்கம பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது புலிகளால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணமானதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தத் தாக்குதலினை தோல்வியின் விளிம்பில் விரத்தியடைந்துள்ள புலிப்பயங்கரவாதிகளே மேற்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

வரலாறு படைப்பாரா ரஹ்மான்?

ar-rhman.jpgஉலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா இன்றிரவு நடைபெறும் நிலையில், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதை வென்று புதிய வரலாறு படைப்பாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருது உட்பட பல்வேறு விருதுகளை இந்தப்படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் வென்றுள்ளனர்.
.
ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட்டின் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.

கட்டுநாயக்காவில் சுட்டு வீழ்த்திய விமான விமானியின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில்

041.jpgவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று கட்டுநாயக்காவில் விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அந்த விமானம் விழுந்த இடத்திற்கு நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் சென்று விசாரணை நடத்தினார்.  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் கட்டுநாயக்க ரயில் நிலையத்துக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த விமானம் விழுந்த இடத்தில் இறந்து கிடந்த விமானியின் சடலத்தை நீர்கொழும்பு நீதிவான் பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

வெள்ளை நிறத்திலான விமானியின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை இரவு வந்த விடுதலைப்புலிகளின் இரு விமானங்களில் ஒன்றை விமானப்படையினர் கட்டுநாயக்காவில் சுட்டுவீழ்த்தியதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.

இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்ட விமான சிதைவுகள்

ltte-2nd-fight-03.jpg

ltte-2nd-fight-01.jpg

ltte-2nd-fight-02.jpg

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

பொதுமக்கள் பாதுகாப்பு அதிக கரிசனைக்குரிய விடயம் ஜோன் ஹோம்ஸுடனான சந்திப்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ

holmes-rajapakse.jpgவிடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பே தமது கரிசனைக்குரிய விடயம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜோன் ஹோம்ஸ் நேற்று சனிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று முன்தினம் சென்று இடம்பெயர்ந்த மக்களை ஹோம்ஸ் பார்வையிட்டிருந்தார். இச்சந்திப்பின்போது புலிகள் கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் விமானத்தாக்குதல் நடத்தியது பற்றி குறிப்பிட்டபோது, இத்தாக்குதலில் பலியாகியவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பாக தனது அனுதாபத்தை ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

புலிகள் பொதுமக்களை பயன்படுத்துவதற்கு இது சான்று என்றும் ஜனாதிபதி இச்சந்திப்பில் ஹோம்ஸிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.அத்துடன் இது தொடர்பாக புலிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இவர்கள் எனது மக்கள், எனது நாட்டின் பிரஜைகள், அவர்களின் பாதுகாப்பு எனக்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து சரியாகக் கூற முடியாது. பொதுமக்கள், சிறுவர்களை ஆயுதங்கள் வைத்திருக்க புலிகள் பயன்படுத்துவது அறிந்த விடயம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் இந்தப் பொதுமக்களை பாதுகாப்பாக கொண்டுவர முடியும். இது தொடர்பாக நாம் திரும்பத்திரும்ப அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வின் சாத்தியப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டபோது, சகல மக்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வில் ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பாக வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் தேவை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.