நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த வியாழக்கிழமை இரு கைதிகளை மற்றொரு கைதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தெடர்பாக உயர் மட்ட விசாரணை மேற்கொண்டுவரும் சிறைச்சாலைத் திணைக்களம் அச்சிறைச்சாலையில் இரு உயர் அதிகாரிகள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை பிரதான அதிகாரி மற்றும் சிறைச்சாலை அத்தியட்சர் ஆகிய இருவருமே இடைநிறுத்தப்பட்டவர்களாவர்.
இச் சம்பவத்தின்போது கைதி ஒருவருக்கு துப்பாக்கி எவ்வாறு சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்லப்பட்டது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன. சிறைச்சாலைக்குள் வருபவர்கள், கைதிகளுக்கு கொண்டுவரப்படும் உணவுப்பொருட்கள் என்பன சிறைக்காவலர்களால் சோதனையிடப்பட்ட பின்னரே உட்கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இவ்வாறான பாதுகாப்புகளின் மத்தியில் கைதி ஒருவருக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதேவேளை சிலர் நீர்கொழும்புச் சிறைச்சாலையில் பணிபுரியும் வேறு சில சிறைக்காவலர்களும் இடமாற்றம் செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.