நீர்த்தேக் கங்களில் நீர் மட்டம் பெருமளவு குறைந்து வருவதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்வலு எரிசக்தி அமைச்சு பொது மக்களிம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளதையடுத்து விக்டோரியா, ரன்தம்பே ரன்தெனிகலை, கொத்மலை, சமனலவௌ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கங்களினூடாக 1260 கிலோ வோர்ட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மழை குறைந்துள்ளதை யடுத்து 400 கிலோ வோர்ட் வரை மின் உற்பத்தி குறை ந்துள்ளது. இதனால் எரிபொருளைப் பயன்படுத்தி கூடுதலான மின் உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.