சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குரைசி ஆகியோர் அடங்கலாக சார்க் நாடுகளின் சகல வெளிவிவகார அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
சார்க் வெளிவிவகார அமைச்சுக்களின் அதிகாரிகள் மட்ட மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்கள் 26ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். தற்போதைய நிலையில் சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு வருவது மிகவும் முக்கிய விடயமாகும். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வலய நாடுகளின் ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டின்போது ஆராயப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.