இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஆளும் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதிப்புக்கு உட்படுத்தும் வகையிலான இராணுத் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என சந்திரிக்கா இந்தியாவில் தெரிவித்துள்ளார். இராணுவப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், இடம்பெயர நேரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை பாதிப்புக்கு உட்படுத்தி அடையும் இராணுவ வெற்றிகள் விரும்பத் தக்கக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில்தான் இராணுவ நடவடிக்கைகள் துல்லியமாக திட்டமிடப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியே இன்றைய அரசாங்கத்தின் வெற்றி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.