விஸ்வா

விஸ்வா

மன்னாரில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் விதவைப்பெண்கள்!

LandMine_Signவன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அதிகளவான பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் கணவரை இழந்த விதவைப் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எவ்.பி செய்திச்சேவை இத்தகவலை வெளியிட்டுள்ளது. வறுமை காரணமாகவே இப்பெண்கள் ஆபத்தான இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 04ஆம் திகதி சர்வதேச ‘நிலக்கண்ணி வெடி’ விழிப்புணர்வு International Day for Landmine Awareness and Assistance -புன்னியாமீன்

கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்! 

 கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள் )

மாதம் ஒன்றுக்கு 200 டொலர்களை அவர்கள் ஊதியமாகப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு தொழில்களை விடவும் இத்தொழில் அதிகளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதாக அப்பெண்கள் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரினால் வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும். இளம் வயதுப் பெண்கள் பலருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக  இவ்வாறான ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News:

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வெடிபொருட்களின் ஆபத்து காணப்படுகின்றது.

முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

கண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம் – 1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணி வெடியகற்றல் சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

அவுஸ்திரேலியா நிலக்கண்ணிகளை அகற்ற தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு!

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் – ஜெனீவாவில் பேச்சு

கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை – ஜனாதிபதி

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

கண்ணிவெடி அகற்றல்; 25 மோப்ப நாய்களுக்கு கண்டியில் பயிற்சி

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும் – ஜனாதிபதியிடம் யசூசி அகாஷி உறுதி

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ்.குடாநாட்டில் தீவிர நடவடிக்கைகள் ஆரம்பம்.

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் யாழ்.குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மழைக் காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள டெங்கு நோயைக் கட்டப்படுத்தும் நோக்கில் இன்று முதல் 13ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

  டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்விடங்களில் தீவிரமாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வது, வீடுகள் தோறும் சென்று  டெங்கு நோய் குறித்து விளக்கமளித்து பொதுமக்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்குத் தூண்டுவது. டெங்கு நுளம்புகள் பரவக்கூடியதான விதத்தில் சுற்றாடலை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் டெங்கு ஒழிப்பு வாரத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அமர்வுகள் நவம்பர் மாதமே நடைபெறும்!

Lessons_Learnt_And_Reconciliation_Commissionபடிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இம்மாதம் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களை பதிவு செய்யப்போவதாக அறிவித்திருந்த போதும் தற்போது அது இந்நாட்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணைக்குழுவின் அமர்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் நவம்பர் மாதமே யாழப்பாணத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் ஆறு இடங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதிவுகள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” –மாவை சேனாதிராஜா

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணந்திருப்பது அவசியம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாணசபைகள் திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக இணைந்த மாகாணங்களாகவே அவை நிர்வகிக்கப்பட்டு வந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்போது பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே, இம்மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட்டு அவற்றிற்கு பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே தீர்வினைக்காண முடியும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறை தவறானது என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியதே தவிர அவற்றைப் பிரிக்கும்படி உத்தரவிடவில்லை அரசாங்கமே இம்மாகாணங்களைப் பிரித்தது. வடக்கு கிழக்கில் வாழ்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றி முகாம்களை அமைத்து வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததாலேயே இந்த நில ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்தலில் இணைத்துக் கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை.

இலங்கையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆயிரம் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வடக்கில் 120 பாடசாலைகளை அதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரம் கிராமப்புற பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றை நவீன முறையில் புனரமைத்து தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின் நிலையில், வடக்கில் 90 பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றைத் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 120 பாடசாலைகளை இதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் கல்வியமைச்சிடம் கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளைத் தரமுயர்த்தும் திட்டத்தில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடசாலைகளின் விபரம் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மணலுக்கு திடீர் தட்டுப்பாடு. வீடமைப்புப் பணிகள் பாதிப்பு.

வன்னியில் திடீரென மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த காலங்களிலும், மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் வன்னியில் மணலுக்கு பெரிதாகத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஒரு உளவு இயந்திரத்தில் ஏற்றப்படும் மணலை சுமார் 2500 ரூபாவிற்கு பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக திடீரென மணலுக்கு தட்டுப்பாடு எற்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தற்போது வீடமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மணலுக்கு எற்படுத்தப்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இப்பணிகளில் தடை எற்பட்டுள்ளதாக வீடமைப்பு பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவது போல் மணலுக்கான அனுமதி நடைமுறைகளை வன்னியிலும் கொண்டுவரும் நோக்கிலேயே மணலுக்கான தடையும், தட்டுப்பாடும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சரத்பொன்சேகாவின் விடுதலைக்காக வீதிகளில் இறங்கிப் பேராடுவதில் பயனில்லை. அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த.

சரத்பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி வீதிகளில் இறங்கிப் போராடுவதில் எவ்வித பயனும் எற்படப் போவதில்லை என அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமானால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவரை விடுதலை செய்யும்படி ஜனாதிபதியிடமே மேன்முறையீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஜனாதிபதி நீதிமன்ற வழிமுறைகளின்படி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதனை விடுத்து எதிர்க்கட்சியினர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துவதிலும், கையெழுத்து வேட்டை நடத்தவதிலும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு நேற்று செவ்வாய்கிழமை உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்.குடாநாட்டில் அனுமதி பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் மீது நடவடிக்கை! அரசாங்க அதிபர் அறிவிப்பு.

உள்ளுராட்சி சபைகளிடம் உரிய அனுமதிகளைப் பெறாமல் யாழ்.குடாநாட்டில் இயங்கும் விடுதிகள், தங்குமிடங்கள் என்பனவற்றை ‘சீல்’ வைத்து மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக விடுதிகள், தங்குமிடங்களை நடத்துபவர்கள் உள்ளுராட்சி சபைகளிடம் பதிவுகளை மேற்கொண்டு அவற்றின் ஆலோசனைகளுக்கு அமைய நடக்க வேண்டும். பொருத்தமான சுற்றாடல், நீர்வழங்கல், கழிவகற்றல் வசதிகளை எற்படுத்தியிருத்தல் முக்கியமானது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டிற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் குடாநாட்டில் பல வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு கொடுத்து வருமானமீட்டி வருகின்றனர். பொருத்தமில்லாத இடங்களில் அயலவர்களுக்கு சிரமங்களை எற்படுத்துவதாகவும் இவை அமைகின்றன. இதேவேளை, பல வருடங்கள் வாடகைக்கு இருந்தவர்களை அகற்றிவிட்டு அதிக வருமானம் தேடும் வகையில் தங்கள் வீடுகளை விடுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளிலும் பல வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொலைபேசி பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வன்னியில் கணிசமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் தொலைபேசி பாவனைகளும் அதிகரித்துள்ளன. எனினும் கைத்தொலைபேசிகளில் உரையாடுவதில் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி உட்பட வன்னியில் பல இடங்களில் தெளிவான தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தொலைபேசி நிறுவனங்கள் வன்னியில் தங்களுக்கான விளம்பரங்களை அதிகளவில் மேற்கொண்டு வருகின்ற போதும், தெளிவான உரையாடல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வேலைகளை மேற்கொள்வதில் தாமதம் காட்டி வருவதாக கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னியில் பல இடங்களில் இன்னமும் மின்சாரம் வழங்கப்படாதால் தொலைபேசிகளுக்கு மின்னேற்றுவதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மின்பிறப்பாக்கிகள் மூலம் சில வணிக நிலையங்கள் பணம் அறவிட்டு பொதுமக்களின் கைத்தொலைபேசிகளுக்கு மின்னேற்றிக் கொடுக்கின்றமையை வன்னியில் பல இடங்களிலும் அவதானிக்க முடிகின்றது. கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலேயே இன்னும் பல இடங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்படாமலுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாலியல் படங்களில் நடித்த இலங்கை நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் திரைப்படங்களில் நடித்த உள்ளுர் நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிமன்றம் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும், பெண்களுக்கான பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இணையத்தளங்களில் வெளியாகும் பாலியல் படங்களில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில உள்ளுர் நடிகைகள் நடித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆபாச வீடியோப் படங்களை வெளியிடும் 180 இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.