வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணந்திருப்பது அவசியம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாணசபைகள் திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக இணைந்த மாகாணங்களாகவே அவை நிர்வகிக்கப்பட்டு வந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்போது பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே, இம்மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட்டு அவற்றிற்கு பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே தீர்வினைக்காண முடியும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறை தவறானது என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியதே தவிர அவற்றைப் பிரிக்கும்படி உத்தரவிடவில்லை அரசாங்கமே இம்மாகாணங்களைப் பிரித்தது. வடக்கு கிழக்கில் வாழ்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றி முகாம்களை அமைத்து வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததாலேயே இந்த நில ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
fath
//வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது//
என்ன சிக்கல்????
மாயா
//இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக இணைந்த மாகாணங்களாகவே அவை நிர்வகிக்கப்பட்டு வந்தன.//
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களே நீங்கள்தானே? அதனால்தானே புலிகள் இந்தியாவோடு போர் புரிந்தார்கள். திரும்ப ஏன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பற்றி பேசுகிறீர்கள்? இலங்கை மாகாணங்களாக அல்ல மாவட்ட ரீதியாக பிரிக்கப்பட்டு, அரச அதிபர்களது கட்டுப்பாட்டில் ஆளப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உள்ள பிரச்சனைகள் வெவ்வேறானவை. எல்லாவற்றையும் போட்டு சாம்பாராக்கலாகாது.
BC
வடக்கும் கிழக்கும் இணக்கபட வேண்டும் என்றே கொஞ்ச காலத்தை இழுக்காலாம் தானே.
குலாஸ்
//வடக்கும் கிழக்கும் இணக்கபட வேண்டும் என்றே கொஞ்ச காலத்தை இழுக்காலாம் தானே.//BC on October 7, 2010 12:06 pm
நன்றாகச் சொன்னீர்கள் பி.சி! இணைத்து… பின் பிரித்து… அதன்பின் மீண்டும் இணைத்து… அதன் பின் துண்டாடி… என்று மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைப்பதுதான் மாவை. சேனாதி போன்ற அரசியல்(விதண்டா)வாதிகளுக்கு தேவையானது. அப்படிச் செய்தால் மட்டுமே – அவர்களது வாழ்க்கை வண்டி ஓடும்… அதுதான். பாமரச் சனங்களை ஏய்த்துப் பிழைக்க அரசியல்வாதிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அது அவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டதொரு இயல்பு!