சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இத்தாலியில் பூமியதிர்ச்சி 70 பேர் உயிரிழப்பு! இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

italyearthquake.jpgஇத்தா லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று அதிகாலை இடம்பெற்ற பூமியதிர்ச்சியால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது

பூமியதிர்ச்சியின் வேகம் 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் பெரும் எண்ணிக்கையிலான  வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் இந்தத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவணம்  செலுத்திவருகிறது.

களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

mohamed-kaleel.jpgஇலங்கை வந்துள்ள பாகிஸ்தான் சாரதி  மெஹர் மொஹமட் களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற களீலின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே உட்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வைத்து பயங்கரவாதிகள்; துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது மொஹமட் களீல் துணிச்சலுடன் வாகனத்தைச் செலுத்தி கிரிக்கெட் விரர்களைக் காப்பாற்றினார்.

குடும்பத்துடன் ஒரு வார காலத்துக்கு இங்கு தங்கியிருக்கும் அவர் கண்டி, நுவரெலியா உட்பட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரும் அவருக்கு விருந்துபசாரம் ஒன்றை நடத்தவுள்ளார். 

ஆபிரிக்கா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ மீது ஏறி கவனயீர்ப்பு போராட்டம்

kilimanjarociegos.jpg வன்னி மக்களின் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதற்காக ஈழத் தமிழ் இளைஞரொருவர் ஆபிரிக்க கண்டத்திலுள்ள மிக உயரமான “கிளிமஞ்சாரோ’ என்ற மலையிலேறி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கீரன் அரசரட்ணம் (33 வயது) என்பவரே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆபிரிக்காவில் தன்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,891.8 மீற்றர் (19,330 அடி). இந்த மலை மீதே அவர் நேற்று முதல் ஏறத் தொடங்கியுள்ளார்.

தனது 13 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்று அங்கு பட்டப் படிப்பை முடித்து தற்போது லண்டனில் வங்கியொன்றில் பணியாற்றி வரும் இளைஞரே வன்னி மக்களின் அவல நிலையை முழு உலகிற்கும் எடுத்துக் கூறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வன்னி மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் வன்னி நோக்கி புறப்படவுள்ள “வணங்காமண்’ கப்பலுக்காக இந்த முயற்சியின் மூலம் நிதி சேகரிக்கவும் கீரன் திட்டமிட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் மூவர் பலி

lighting.jpgசிலாபம், கருவலகஸ்வௌ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 3 விவசாயிகள் பலியாகியுள்ளனர். கருவலகஸ்வௌ, இஹெல புளியங்குளம் பகுதியிலுள்ள வயல்வெளியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

எஸ். பி. ஜமால்தீன் நேற்று சுட்டுக்கொலை

jamaldeen.jpgமட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எச். எல். ஜமால்தீன் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது சொந்த ஊரான மருதமுனையில் வைத்து இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே காலமானாரென பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு 6.45 மணியளவில் இடம்பெற்றது. மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கருகில் மறைந்திருந்த சிலர் இவர் மீது சரமாரியாகச் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சடலம் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் நேற்றிரவு வைக்கப்பட்டிருந்தது. 1955ம் ஆண்டு பிறந்த இவர், கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையின் பழைய மாணவராவார்.சம்மாந்துறை, கல்முனை, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான இவர், தற்போது அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராவார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

1,14,000 பேருக்கு தே. அடையாள அட்டை

மேல்மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஒரு இலட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள் ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்தது.

மேல்மாகாணத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள சகல விண்ணப்பதாரி களுக்கும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஏ. பி. தர்மதாச தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் கூடுதலானவர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இருந்து 51 ஆயிரம் பேரும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 39 ஆயிரம் பேரும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 23ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 50 ஆயிரம் பேருக்கு இதுவரை தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார். தேர்தலை முன்னிட்டு மேல் மாகாண விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது

இடி, மின்னல் தாக்கம் மோசமடையும் ஆபத்து. இதுவரை ஐவர் பலி; மக்களுக்கு எச்சரிக்கை

lighting.jpgஇடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் நேற்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. தற்போதைய இடி, மின்னலுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும், அதனால் மழை பெய்யும் வேளைகளில் திறந்த வெளிகளில் நடமாடுவது, விளையாடுவது, வீட்டில் மின்பாவனைப் பொருட்களை பாவிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது போன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.

இடி, மின்னல் தாக்கம் காரணமாக இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வானிலை அவதான நிலைய அதிகாரி சமிந்த டி சில்வா குறிப்பிடுகையில், இடி, மின்னலுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சிலவாரங்களுக்கு நீடிக்கும் அதனால் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பொது மக்கள் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுவது மிகவும் அவசியம்.

பிற்பகலிலும், மாலையிலும் இடி, மின்னலுடன் நாட்டில் பரவலாக மழைபெய்யும் இதேவேளை தெற்கு, தென்மேற்கு கடற்பரப்பிலும் இடைக்கிடையே மழை பெய்யும். காற்று வடகிழக்காக வீசும், கடலும் சிறிய கொந்தளிப்பு நிலையில் காணப்படும் என்றார்.

பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் பலர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷியா மசூதி ஒன்றின் அருகில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

சக்வால் நகரத்தில் இடம்பெற்ற மத வைபவத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மசூதியின் முன்பாக ஒரு சிறுவனே இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் எதிராக கோஷமிட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்

நாட்டில் அனைவரும் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கப்படும்:அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவிப்பு

karuna.jpgநாட்டில் அனைத்து இனமக்களும் எப்போதும் எங்கும் சுதந்திமாக நடமாட வழிவகுப்பதே எனது நோக்கமாகும் என புதிதாக அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான தமது அமைச்சின் செயலகத்தை o4 பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைத்து கடமைகளைப் பொறுப்பேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

“கடந்த இருபத்தைந்து வருட காலமாக இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வில்லாத ஒரு நிலை நிலவி வருகிறது. அந்த நிலையை இந்த அமைச்சின் ஊடாக மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கோள்வேன். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் மொழியையும் கற்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் பாரிய ஒத்துழைப்பாக இது அமையும்.

கடந்த காலங்களில் நெருக்கடியான யுத்த சூழ்நிலையில் சிக்கியிருந்த நான் உண்மையான சமாதானம் சுதந்திரம் என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டேன். நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் சிறந்த ஒரு சேவையை ஆற்றுவதற்கு நல்ல கொள்கையுடைய பெரிய ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என முடிவெடுத்தேன்.

அதனால்தான் நாட்டு மக்களின் நலனுக்காக சிறந்த கொள்கையுடன் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துள்ளேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். தமிழ் மக்களும் மஹிந்த சிந்தனையை பெரிதும் வரவேற்கின்றார்கள். எனது சேவையை மக்கள் நலனுக்காக மேற்கொள்ள அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அமைச்சர் முரளீதரன் மேலும் கூறினார்.

இலங்கைக்கு நேர் உச்சியில் சூரியன்

சூரியன் இன்று 6ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையும் இலங்கைக்கு நேர் உச்சத்தில் (சமீபமாக) தென்படும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரி சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இதன்படி இன்று நண்பகல் 12.13 மணிக்கு காலி- ஹிக்கடுவ, நாக்கியாதெனியா, மகாலேவாய மற்றும் ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபெலஸ்ஸ ஆகிய இடங்களில் சூரியன் நேர் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சூரியன் வருடா வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உச்சம் கொடுப்பது வழமையானதே.