எஸ். பி. ஜமால்தீன் நேற்று சுட்டுக்கொலை

jamaldeen.jpgமட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எச். எல். ஜமால்தீன் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது சொந்த ஊரான மருதமுனையில் வைத்து இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே காலமானாரென பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு 6.45 மணியளவில் இடம்பெற்றது. மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கருகில் மறைந்திருந்த சிலர் இவர் மீது சரமாரியாகச் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சடலம் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் நேற்றிரவு வைக்கப்பட்டிருந்தது. 1955ம் ஆண்டு பிறந்த இவர், கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையின் பழைய மாணவராவார்.சம்மாந்துறை, கல்முனை, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான இவர், தற்போது அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராவார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kaleel
    Kaleel

    வீரனின் மரனம் கோழையின் சந்தோஷம்.பின்னால் இருந்து குத்துவதை விட முன்னால் வந்து எதிர்ப்பது தான் வீரச் செயல்.ஊனமுற்ற கோழைகளே சிந்தியுங்கள்.

    நன்றி
    கலீல்

    Reply
  • GNANI
    GNANI

    well,there is no smoke without the fire.he maybe in wrong doing i think.

    Reply